கவர்ன்மென்ட் ஹவுஸ் என்றழைக்கப்படும் இந்த பிரசித்தமான பாரம்பரிய மாளிகை மாஹே பகுதியில் அமைந்துள்ளது. 1855ம் ஆண்டு ஃபிரெஞ்சு ஆட்சியாளர்களால் கட்டப்பட்டுள்ள இந்த அமைப்பு சுற்றுலாப்பயணிகளிடையே ஒரு பழமைச்சின்னமாக புகழ் பெற்று விளங்குகிறது.
இந்த கவர்ன்மென்ட் ஹவுஸ் வளாகத்தின் முக்கிய அம்சங்களாக ஒரு கலங்கரை விளக்கம் மற்றும் ஒரு கொடிக்கம்பம் ஆகியவை விளங்குகின்றன. இந்த கலங்கரை விளக்கமானது 1720ம் ஆண்டில் ஃபிரெஞ்சுக்காரர்கள் இந்த கடற்கரையில் கால் பதித்த காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
அதிலிருந்து பல கடற்பயணிகளுக்கும், வணிகர்களுக்கும் இது கடல் வழிகாட்டியாக திகழ்ந்திருக்கிறது. உயரம் அதிகமில்லாத இந்த கலங்கரை விளக்கத்தின்மீது ஏறி அரபிக்கடலின் அழகை நன்றாக பார்த்து ரசிக்கலாம்.
ஃபிரெஞ்சு கால ஆட்சியின் உன்னத காலத்தை நினைவூட்டும் வகையில் இந்த ‘கவர்ன்மென்ட் ஹவுஸ்’ மாளிகை முழுவதும் ஃபிரெஞ்சு கட்டிடக்கலை அம்சங்களுடன் காட்சியளிக்கிறது.
இந்த மாளிகையின் பின்பகுதியில் ஒரு சிறிய வனப்பகுதியும் அமைந்திருப்பது இந்த வளாகத்தின் எழிலைக்கூட்டுகிறது. இயற்கைச் சூழலை ரசித்தபடி மாலை நேரத்தை கழிப்பதற்கு உகந்த பொழுதுபோக்கு ஸ்தலமான இந்த கவர்ன்மென்ட் ஹவுஸ் பயணிகளை நிச்சயம் மகிழ்விக்கும் என்பதில் ஐயமில்லை.



Click it and Unblock the Notifications