Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தலச்சேரி » ஈர்க்கும் இடங்கள் » ஜும்மா மஸ்ஜித்

ஜும்மா மஸ்ஜித், தலச்சேரி

28

தலச்சேரியிலுள்ள முக்கியமான ஆன்மீக அம்சங்களுள் ஒன்றான இந்த ஜும்மா மஸ்ஜித் அரபிக்கடலை ஒட்டியே அமைந்துள்ளது. 1000 வருடங்கள் பழமை வாய்ந்ததாக கருதப்படும் இந்த மசூதி இப்பகுதியின் இஸ்லாமிய மரபுக்கான ஆதி மையமாக திகழ்ந்துள்ளது. இஸ்லாமியத்தை பரப்புவதற்கு கேரளாவிற்கு வந்த மாலிக் இபின் தினார் எனும் அரேபிய வணிக யாத்ரீகரால் இந்த மசூதி கட்டப்பட்டுள்ளது.

இந்தோ சராசனிக் பாணியில் கட்டப்பட்டுள்ள இந்த மசூதி கம்பீரத்தோடு புராதனப்பழமையுடன் ஒளிர்கிறது. ஈகைத்திருநாள் எனும் நோன்பு முடிவு திருவிழாவின்போது இங்கு ஏராளமான பக்தர்கள் குழுமி பிரார்த்தனையில் ஈடுபடுகின்றனர்.

அரபி மற்றும் மலையாளம் ஆகிய இரண்டும் இணைந்த இலக்கியத்துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அளித்துள்ள குஞ்சயான் முசல்யார் எனும் ஞானியின் சமாதி மேடையும் இந்த மசூதிக்குள் உள்ள்ளது.

பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஜும்மா மசூதியானது தலச்சேரியின் செழுமையான ஆன்மீகப் பின்னணியின் அடையாளமாக வீற்றிருக்கிறது. நகர மையப்பகுதியிலேயே அமைந்திருப்பதால் இம்மசூதிக்கு மிகச்சுலபமாக விஜயம் செய்யலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed