Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தலச்சேரி » ஈர்க்கும் இடங்கள் » ரண்டத்தரா ஏலக்காய் எஸ்டேட்

ரண்டத்தரா ஏலக்காய் எஸ்டேட், தலச்சேரி

28

ரண்டத்தரா ஏலக்காய் எஸ்டேட் எனும் இந்த பயிர்த்தோட்டம் பண்டைய காலத்திலிருந்தே பணப்பயிர்/வாசனைப்பொருள் உற்பத்தியில் தலச்சேரி பகுதி புகழ் பெற்றிருந்ததற்கான ஆதாரமாக காட்சியளிக்கிறது.

தலச்சேரி கடற்கரை நகரமானது அந்நாளிலிலிருந்தே கறுப்பு மிளகு, இஞ்சி மற்றும் மஞ்சள் போன்ற பணப்பயிர் உற்பத்தியில் புகழ் பெற்று விளங்கியதோடு மட்டுமல்லாமல், ஆங்கிலேயரால் எழுப்பப்பட்ட துறைமுகம் வழியாக இவற்றை ஏற்றுமதி செய்யும் கேந்திரமாகவும் முன்னணியில் இருந்துள்ளது.

1790ம் ஆண்டுகளில் திப்பு, ஹைதர் அலி மற்றும் பழசி ராஜா ஆகியோரது சண்டைகளால் தலச்சேரியின் வாசனைப்பொருள் வணிக செயல்பாடுகள் பாதிப்படைந்தன. எனவே கிழக்கிந்திய கம்பெனியினர் இந்த வாசனைப்பொருட்களை தாமே பயிர் செய்ய விரும்பி பலவிதமான பயிர்த்தோட்டங்களை நிர்மாணிக்க துவங்கினர்.

அப்படி ரண்டதாரா எனும் இடத்தில் அமைக்கப்பட்ட பயிர்த்தோட்டமே இப்போது ரண்டத்தரா ஏலக்காய் எஸ்டேட் என்று பிரசித்தமாக அழைக்கப்படுகிறது.

புகழ் பெற்ற காலனிய வரலாற்று ஆசிரியரான ‘வில்லியம் லோகன்’ என்பவரது குறிப்புப்படி, 1000 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக பரந்து விரிந்து காணப்படும் இந்த பயிர்த்தோட்டத்தில், காப்பி, மிளகு, ஏலக்காய், ஜாதிக்காய் மற்று பருத்தி போன்ற பணப்பயிர்கள் விளைவிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

தலச்சேரி பகுதியின் பசுமைச்சூழலை பார்த்து ரசிக்க விரும்பம் பயணிகளுக்கு இது மிகவும் பிடித்த ஸ்தலமாக இருக்கும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed