Search
  • Follow NativePlanet
Share
» »சென்னையிலிருந்து திருவனந்தபுரம் - இப்படியும் வித்தியாசமா பயணிக்கலாம்!

சென்னையிலிருந்து திருவனந்தபுரம் - இப்படியும் வித்தியாசமா பயணிக்கலாம்!

இயற்கை எழில் கொஞ்சம் நகரங்களுக்கு செல்வது என்பது மிகவும் சிறப்பான சுற்றுலாவாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்கமுடியாது. அப்படி தென்னிந்தியாவின் வளமையான நகரங்கள் என்றால் நமக்கு நினைவுக்கு உடனே வ

By Udhaya

இயற்கை எழில் கொஞ்சம் நகரங்களுக்கு செல்வது என்பது மிகவும் சிறப்பான சுற்றுலாவாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்கமுடியாது. அப்படி தென்னிந்தியாவின் வளமையான நகரங்கள் என்றால் நமக்கு நினைவுக்கு உடனே வருவது முதலில் பெங்களூரு, அடுத்தது திருவனந்தபுரம். கேரளத்திலும், கர்நாடகத்திலும் இன்னும் பல வளமையான இடங்கள் இருந்தாலும், பெரு நகரங்கள் அடிப்படையில் தென்னகத்தின் மிகப் பெரிய நகரங்களான சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம் பற்றி இந்த பதிவில் காண்போம். ஆனா அதுக்கு முன்னாடி இந்த பக்கத்தில் மேல் பகுதியில் இருக்கும் பெல் பட்டனைத் தட்டி, இந்த தளத்திலிருந்து தொடர் அப்டேட்டுகளை பெறுங்கள். மேலும் நமது முகநூல் பக்கத்திலும் பின்தொடருங்கள். ஏதேனும் சுற்றுலாத் தொடர்பான சந்தேகங்களுக்கு முகநூல் பக்கத்தின் உள்டப்பியைத் தொடர்புகொள்ளுங்கள். தமிழ் நேட்டிவ் பிளானட்

திட்டமிடுதல்

திட்டமிடுதல்

சென்னையிலிருந்து தொடங்கும் நம் பயணம் பெங்களூரு சென்று பின் அங்கிருந்து திருவனந்தபுரம் நோக்கி நகரும்.

வழித்தடம் 1 - சென்னை - வேலூர் - பெங்களூரு - ஓசூர் - சேலம் - மதுரை - திருநெல்வேலி - திருவனந்தபுரம்

வழித்தடம் 2 - சென்னை - வேலூர் - பெங்களூரு - மைசூரு - கோயம்புத்தூர் - மதுரை - திருநெல்வேலி - திருவனந்தபுரம்

வழித்தடம் 3 - சென்னை - வேலூர் - பெங்களூரு - மைசூரு - கோயம்புத்தூர் - கொச்சி - ஆலப்புழா - திருவனந்தபுரம்

இப்படி மூன்று வழிகளிலும் மூன்று விதமான பயண வழிகாட்டிகளுடன் நமது பயணம் தொடங்குகிறது.

சென்னை - வேலூர் - பெங்களூரு - மதுரை - திருவனந்தபுரம்

சென்னை - வேலூர் - பெங்களூரு - மதுரை - திருவனந்தபுரம்

இந்த பயணத்தை மூன்று விதமாக பிரித்துக்கொள்ளலாம்.

சென்னையிலிருந்து திருப்பெரும்புதூர், காஞ்சிபுரம், வேலூர், ஓசூர் வழியாக பெங்களூருவை அடைவது முதல் பணி.

பெங்களூருவில் காணவேண்டிய இடங்களை பார்த்துவிட்டு அங்கிருந்து சேலம் வழியாக மதுரைக்கு செல்வது இரண்டாவது.

மதுரையிலிருந்து கிளம்பி கன்னியாகுமரி வழியாக திருவனந்தபுரத்தை அடைந்து அங்கே சுற்றுலாவை அனுபவிப்பது மூன்றாவது பணி. இத்துடன் இந்த வழித்தடத்தில் செல்லும் பயணம் நிறைவடையும்.

இந்த வழியில் எண்ணற்ற சுற்றுலாத் தளங்களும் உள்ளன. செல்லும் வழியில் திருப்பெரும்புதூர், ராணிப்பேட்டை ஆகிய இடங்களிலும் பல தொழிற்சாலைகளையும், ஜவ்வாது மலைத்தொடரையும் ரசித்தபடியே செல்லமுடியும்.

ஆம்பூரில் பிரியாணி சுவைத்துவிட்டு செல்லலாம்.

ஓசூரில் மறுபடியும் நிறைய தொழிற்சாலைகள் இருக்கின்றன. அதைப் பார்த்தபடியே பெங்களூருவுக்குள் நுழையலாம்.

பெங்களூருவில் நீங்கள் காணவேண்டிய சுற்றுலாத் தளங்கள்

இந்த வழித்தடத்தில் இருக்கும் சுற்றுலாத் தளங்கள்

இந்த வழித்தடத்தில் இருக்கும் சுற்றுலாத் தளங்கள்

இந்த வழித்தடத்தில் நிறைய சுற்றுலாத் தளங்கள் இருக்கின்றன. நீங்கள் சென்றுகொண்டிருக்கும்போதே இந்த இடங்களை பார்க்கமுடியும்.

உல்சூர் ஏரி

பெங்களூர் நகரத்தின் வட கிழக்கு பகுதியில் எம்.ஜி ரோடுக்கு அருகில் உல்சூர் ஏரி அமைந்துள்ளது.

பெங்களூரை உருவாக்கிய கெம்பே கவுடாவால் இந்த ஏரி உருவாக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இங்கு கணேசா திருவிழா பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது.

பொழுதுபோக்கு அம்சங்களுக்கென்றே ஒரு தனி வளாகம் இங்கு காணப்படுகிறது. நீச்சல் குளம் ஒன்றும் அதில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

படகுச்சவாரி இந்த ஏரியில் பிரசித்தி பெற்ற பொழுது போக்காக விளங்குகிறது. இங்குள்ள படகு முகாமில் சிற்றுலா செல்வதற்கென்று படகு சவாரிகள் உள்ளன.

இவை ஏரியில் உள்ள சிறு தீவுகளுக்கு பயணிகளை அழைத்து சென்று திரும்பவும் கரை சேர்க்கின்றன.

1.5 ச.கி.மீ பரப்பில் நீர்பிடிப்பு பகுதிகளைக் கொண்டுள்ள இந்த ஏரிக்கு மூன்று முக்கியமான வடிகால்கள் மூலம் நீர் வரத்து உள்ளது.

ஏரியின் எழிலை பாதுகாப்பதற்காக கடுமையான விதிமுறைகளும், மேலும் அழகுபடுத்துவதற்காக புதிய திட்டங்களும் அமுலில் உள்ளன.

Saad Faruque

 காளை கோயில்

காளை கோயில்

பெங்களூரின் தென்பகுதியில் உள்ள பசவனகுடியில் அமைந்துள்ள என். ஆர் காலனியில் இந்த காளை கோயில் அல்லது தோட் பசவன குடி இருக்கிறது.

கடவுள் அந்தஸ்து கொண்ட நந்திக்காக இந்த கோயில் உருவாக்கப்பட்டுள்ளது.

கோயிலின் அருகில் நவம்பர் டிசம்பர் மாதங்களில் ‘கடலைக்காயி பரிஷே' எனும் கடலைக்காய் சந்தை (அறுவடைக்காலங்களில்) நடத்தப்படுகிறது. இந்த சந்தை நடக்கும் காலத்தில் காளை கோயிலுக்கு செல்வது உகந்தது.

தொட்ட கணேசா கோயிலும் இந்த காளை கோயிலுக்கு அருகிலேயே உள்ளது.

பசவனகுடிக்கு செல்ல ஏராளமான பேருந்து வசதிகள் இருப்பதால் பயணிகளுக்கு இங்கு செல்வதில் சிரமம் ஏதும் இருக்காது.

Amol.Gaitonde

பெங்களூரு அரண்மனை

பெங்களூரு அரண்மனை

அரண்மனை வாசல் வழியாக நுழையும்போதே இது உங்களை பிரமிக்க வைத்து விடும். வேறு எதைப்பற்றியுமே நினைக்க விடாமல் அதன் அழகு உங்களை மெய் மறக்க வைக்கும் இயல்புடையது.

சமீபத்தில் இந்த அரண்மனையில் புதுப்பிப்பு வேலைகள் முடிந்துள்ளன.இந்த அரண்மனை உட்புறமானது ஐரோப்பிய ‘தூடர்'
பாணி கட்டிடக்கலை முறைப்படி வேலைப்பாடுகளை கொண்டுள்ளது.

ஆக்ஸ்ஃபோர்டு கேம்பிரிட்ஜ் போன்றவற்றில் இது போன்ற கட்டிடக்கலை பாணி அம்சங்கள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

அரண்மனையின் கீழ் தளத்தில் உள்ள திறந்த வெளி முற்றத்தில் நீல நிற பீங்கான் ஓடு பதிக்கப்பட்டுள்ள கிரானைட் கல்லால் ஆன இருக்கைகள் அமைந்துள்ளன. இரவில் இந்த நீல நிற பீங்கான் இருக்கைகள் ஒளிர்வது போன்று தோற்றமளிக்கும்

மேல் தளத்தில் பிரம்மாண்டமான தர்பார் ஹால் காணப்படுகிறது. ராஜா தன் அவையினருடன் கலந்தாலோசித்த இடமாக இது அறியப்படுகிறது.

அரண்மனையின் உட்புற சுவர்களில் கிரேக்க மற்றும் டச்சு ஓவியங்களும் புகழ் பெற்ற இந்திய ஓவியரான ராஜா ரவி வர்மாவின் ஓவியங்களும் காணப்படுகின்றன. இந்த தொன்மை வாய்ந்த ஓவியங்கள் அரண்மனையின் அழகை மேலும் மெருகூட்டுகின்றன.

Nikkul

காஞ்சி குடில்

காஞ்சி குடில்

மூதாதையர் வழி வந்த வீடு ஒன்றை, கலாச்சார விடுதியாக மாற்றி, "காஞ்சி குடில்" என்று பெயரிட்டுள்ளனர்.

காஞ்சிபுரத்தின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க கடந்த காலத்தை மனதில் கொண்டே இவ்விடத்தை உருவாக்கியுள்ளனர். இந்த விடுதியில் தங்கும் விருந்தினர்கள், இவ்வூரின் பெருமையை உணர்ந்து கொள்வதோடல்லாமல், இந்நகரின் வரலாற்றுத் தகவல்கள் பலவற்றையும் அறிந்து கொள்ளும் வகையிலும் இது உள்ளது.

தட்டுமுட்டுச் சாமான்கள் முதல் வழங்கப்படும் உணவு வரை அனைத்தும் இவ்வூரின் கடந்த காலச் சிறப்புகளை விருந்தினர்க்கு எடுத்துக் கூறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்விடுதி, மூதாதையர் வழி வந்த வீடு தான் என்றாலும், இது, இன்றைக்கு உள்ள அனைத்து நவீன வசதிகளுடன், தங்கும் விருந்தினர்களுக்கு எவ்வித சிரமும் இன்றி, சகல வசதிகளோடும் திகழ்கிறது.

மாலை நேரங்களில், கடந்த காலத்தில் இங்கு கோலோச்சிய கலைகளை, விருந்தினர்களுக்கு விளக்கும் பொருட்டு, உருவாக்கப்பட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

பயண நினைவாக பொருள்களை சேகரிக்கும் வழக்கம் உள்ளோர், உள்ளூரில் தயாரான அழகிய கைவினைப் பொருட்களை, காஞ்சி குடிலில் வாங்கலாம்.

 காமாட்சி அம்மன் கோயில்

காமாட்சி அம்மன் கோயில்

பார்வதி தேவியின் அவதாரமாகக் கருதப்படும் காமாட்சி அம்மனுக்காக எழுப்பப்பட்டதாகும்.

பல்லவ சாம்ராஜ்யத்தின் மன்னர்களால், ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

காமாட்சி அம்மன், நின்ற கோலத்திலில்லாமல் உட்கார்ந்த கோலத்தில் காட்சியளிப்பது, இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.

அம்மன், யோக நிலையில் அமர்ந்த வண்ணம், அமைதியும் கருணையும் கொண்டு அருள் பாலிக்கிறார்.

இந்துக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கும் கடவுளான பார்வதி தேவிக்கு, இந்நகரில் கட்டப்பட்டுள்ள ஒரே கோயில் இது

இயற்கைச் சீற்றங்கள் மற்றும் கால ஓட்டத்தின் சோதனைகளைத் தாக்குப் பிடிக்க முடியாமல் சிதைந்த பல்வேறு பகுதிகள் மற்றும் கட்டமைப்புகள், மறுசீரமைக்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரத்தின் அனைத்து ஆட்சியாளர்களும், இம்மறுசீரமைப்பு வேலைகளைச் செய்துள்ளனர்

SINHA

 ஆயிரத்தெட்டு லிங்கம் கோயில்

ஆயிரத்தெட்டு லிங்கம் கோயில்

அரியனூரில் உள்ள ஆயிரத்தெட்டு லிங்கம் கோயில், சேலத்தின் புகழ்பெற்ற கோயில்களுள் ஒன்றாகும்.

இது அமையப்பெற்றுள்ள குன்றில், ஆயிரத்தெட்டு லிங்கங்கள் விரவிக்கிடப்பதையும், முன் பகுதியில் புனிதப் பசுவான நந்தியின் சிலையையும் காணலாம்.

கோயிலின் அடிவாரத்தில் பிரம்மாண்டமான கணேசர் சிலை உள்ளது. இது அமைந்துள்ள இடம் கண்கவர் காட்சிகள் சூழ்ந்து அமைதியாகவும் ரம்மியமாகவும் விளங்குகிறது.

மூலக்கடவுளான ஸ்ரீ உமையாம்பிகை உடனுறை அருணாச்சல சுந்தரேஸ்வரரின் திருவுருவச்சிலை, இம்மலை குன்றின் மேல் நிறுவப்பட்டுள்ளது. இச்சிலையை காண்பதற்காகவே, மலையேற்றத்தையும் பொருட்படுத்தாது ஏறிப் போய் தரிசித்து வரலாம்.

JayakanthanG

 பழமுதிர்ச்சோலை

பழமுதிர்ச்சோலை

முருகப்பெருமானுக்கான இந்த பழமுதிர்ச்சோலை கோயில் மதுரை மாநகரில் அழகர் கோயிலுக்கு அருகில் சோலைமலை உச்சியில் அமைந்துள்ளது.

முருகன் திருத்தலங்களில் முக்கியானதாக பிரசித்தி பெற்றிருக்கும் இக்கோயிலின் விக்கிரகம் தங்கத்தேரில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படும்போது ஏராளமான பக்தர்கள் இங்கு குழுமுகின்றனர்.

நாபுரகங்கை எனும் இயற்கை நீரூற்று ஒன்றும் இந்த கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. இதில் பக்தர்கள் புனிதநீராடலில் ஈடுபடுகின்றனர்.

மரம் மற்றும் பளிங்குக்கல்லில் செதுக்கப்பட்ட முருகப்பெருமானின் சிலைகளை இக்கோயிலில் பக்தர்கள் தரிசிக்கலாம். பிரம்மாண்டமான படிக்கட்டுகள் மூலமாக பக்தர்கள் கோயிலுக்கு ஏறிச்செல்லலாம்.

Santhoshlife91

சென்னை - பெங்களூரு - மைசூரு - கோயம்புத்தூர் - மதுரை - திருவனந்தபுரம்

சென்னை - பெங்களூரு - மைசூரு - கோயம்புத்தூர் - மதுரை - திருவனந்தபுரம்

இந்த வழித்தடத்தைப் பொறுத்தவரையில் நாம் பெங்களூருவிலிருந்து மீண்டும் தமிழக எல்லையான ஓசூருக்குள் நுழையாமல், தென்மேற்கு நோக்கி பயணித்து மைசூரை அடைகிறோம். பின் அங்கிருந்து தமிழகத்தை நோக்கி படையெடுக்கிறோம்.

சென்னையிலிருந்து பெங்களூரு வந்தடைந்து, அங்குள்ள பகுதிகளைப் பார்வையிட்டுவிட்டு, பெங்களூருவிலிருந்து மைசூரு நோக்கி பயணிக்கிறோம். வழியில் நிறைய சுற்றுலாத் தளங்கள் வருகின்றன.

 ராமநகரம்

ராமநகரம்


பட்டு நகரம் என்று அழைக்கப்படும் ராமநகரம் பெங்களூரிலிரிந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் ராமநகர மாவட்டத்தின் தலைநகரமாக விளங்கி வருகிறது.

கர்நாடகாவின் மற்ற பகுதிகளை போலவே இதுவும் சோழ, மைசூர் மன்னர்களால் ஆளப்பட்ட நகரமே. எனினும் அமிதாப் பச்சன் நடித்த வெற்றிப் படமான ஷோலே இங்கு படம் பிடிக்கப்பட்ட பிறகுதான் ராமநகரம் புகழ் பெறத் ஆரம்பித்தது.

சிவராமகிரி, சோமகிரி, கிருஷ்ணகிரி, யாத்ர ஜாகிரி, ரெவென்ன சித்தேஸ்வரா, சிடிலக்கல்லு, ஜால சித்தேஸ்வரா ஆகிய ஏழு கம்பீரமான மலைக் குன்றுகளாலும் ராமநகரம் சூழப்பட்டுள்ளது.

ராமநகரத்தின் குன்றுகளில் காணப்படும் மஞ்சள் கழுத்து குயில்களும், நீண்ட மூக்கு கழுகுகளும் இயற்கை காதலர்களுக்கு காணக் கிடைக்காத காட்சியாக நிச்சயம் அமையும்.

RamBiswal

 திருவரங்கப்பட்டினம்

திருவரங்கப்பட்டினம்

ஸ்ரீரங்கப்பட்டிணம் அமைந்திருக்கும் இடம் ஒன்றே போதும், வரலாற்று பின்னணி கொண்ட இந்த சுற்றுலா ஸ்தலத்தின் அருமையை விளக்குவதற்கு. காவிரி ஆற்றின் இரு கிளை ஆறுகளால் சூழப்பட்டு உருவாகியுள்ள ஒரு தீவுதான் ஸ்ரீரங்கப்பட்டிணம்.

மைசூருக்கு வெகு அருகில் உள்ள இந்த தீவு நகரம் சுமார் 19 ச.கி.மீ பரப்பளவைக்கொண்டுள்ளது. வரலாற்று முக்கியத்துவம் ஸ்ரீரங்கப்பட்டணா அதன் வரலாற்று பின்னணியின் காரணமாக ஒரு புகழ் பெற்ற சுற்றுலாஸ்தலமாக விளங்குகிறது.

திப்பு சுல்தான் காலத்தில் மைசூர் ராஜ்யத்தின் தலைநகராக இது மாற்றப்பட்டபோது இதன் சிறப்பு இன்னும் கூடியது.

நகரத்தில் இந்தோ-முஸ்லிம் பாரம்பரியம் காணப்படுவதற்கு இந்த தலைநகர் அந்தஸ்தும் ஒரு காரணம் எனலாம்.

வரலாற்றுச்சின்னங்களான தரியா தௌலத் பாக் மற்றும் ஜமா மஸ்ஜித் போன்றவை இதற்கு சாட்சியங்களாக உள்ளன.
ஸ்ரீரங்கப்பட்டணா நகரம் மிக அழகான சில சுற்றுலாஸ்தலங்களைக் கொண்டுள்ளது. இவற்றில் ஒன்று இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய நீர்வீழ்ச்சியான சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி ஆகும்.

ஸ்ரீரங்கப்பட்டண சங்கமம் அல்லது முக்கூடல் என்று அழைக்கப்படும் காவேரி - கபினி - ஹேமாவதி ஆறுகள் கூடும் ஸ்தலமும் முக்கியமான சுற்றுலா அம்சமாக விளங்குகிறது.

Ilya Mauter

மைசூர்

மைசூர்

சந்தன மரத்தின் நறுமணமும், ரோஜா மலரின் வாசனையும் இன்ன பிற சுகந்தங்களுடம் எப்போதும் தவழும் மைசூர் நகரத்துக்கு சந்தனமர நகரம் என்ற பெயரும் உண்டு.

தந்த நகரம் என்றும் அரண்மனை நகரம் என்றும் கூட இது உள்ளூர் மக்களால் பெருமையுடன் அழைக்கப்படுகிறது.

மைசூர் மாநகரத்துக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் அதன் அருகிலுள்ள பல முக்கியமான சுற்றுலா ஸ்தலங்களுக்கும் தவறாமல் விஜயம் செய்கின்றனர்.

திருவரங்கப்பட்டிணம், நஞ்சன்கூடு, சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி, தலக்காடு, மெல்கோட்டே, சோமநாதபுரா, ஹலேபேட், பேலூர், பண்டிபூர் தேசிய வனவிலங்கு பூங்கா, சிரவணபெளகொலா மற்றும் கூர்க்(குடகு) போன்ற முக்கியமான சுற்றுலா ஸ்தலங்கள் மைசூர் மாநகருக்கருகில் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

Rahul Zota

சென்னை - மைசூரு - கோயம்புத்தூர் - கொச்சி - திருவனந்தபுரம்

சென்னை - மைசூரு - கோயம்புத்தூர் - கொச்சி - திருவனந்தபுரம்

இந்த பயணத்தைப் பொறுத்த வரையில் நாம் முக்கியமாக பாலக்காடு, கொச்சி வழியாக திருவனந்தபுரத்தை அடைகிறோம். இங்கும் நிறைய சுற்றுலாத் தளங்கள் காணப்படுகின்றன.

கோவை குற்றாலம்

கோவை குற்றாலம் கோயம்புத்தூர் அருகிலுள்ள புகழ் பெற்ற சுற்றுலாத் தலம் ஆகும். பல அடுக்குகள் கொண்ட நீர்வீழ்ச்சியின் ரம்மியமான தோற்றம் இங்கு காணக் கிடைப்பதால் இது புகழ் பெறுகிறது. இந்த அருவி சிறுவாணி ஆற்றிலிருந்து பிறக்கிறது. இந்த சிகரம் கோயம்புத்தூரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பகுதியாக உள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 35 கி.மீ. தொலைவில் எளிதில் அடையக்கூடிய இடமாக கோவை குற்றாலம் அமைந்துள்ளது.

 புரூக்பீல்ட்ஸ் மால்

புரூக்பீல்ட்ஸ் மால்


புரூக்பீல்ட்ஸ் மால் கோயம்புத்தூரில் உள்ள ஒரு ஷாப்பிங் மால் ஆகும். இது கோயம்புத்தூரில் உள்ள மிகப் பெரிய வளாகங்களில் ஒன்றாகும். புரூக்பாண்ட் சாலையில் அமைந்துள்ள இது 2009ல் திறக்கப்பட்டது. நகரிலேயே அதிகம் பேர் வந்து செல்லும் வளாகமாக இது விளங்குகிறது. இந்த வளாகம் புரூக்பீல்ட்ஸ் எஸ்டேட்ஸ் தனியார் நிறுவனத்தின் கற்பனைக் குழந்தையாகும். இந்த வளாகத்தை உருவாக்ககும் திட்டம் வகுத்ததோடு அவர்களே அதைக் கட்டவும் செய்தனர். பகுதிகளாக திறக்கப்பட்ட இந்த வளாகம் இப்போது முழுமையாக செயல்படுகிறது.

brookefieldmall

 மரைன் டிரைவ்

மரைன் டிரைவ்

கொச்சியிலுள்ள மரைன் டிரைவ் மும்பையிலுள்ள மரைன் டிரைவ் பகுதியின் நகலைப்போன்ற தோற்றத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. மரைன் டிரைவ் பகுதியிலுள்ள புராமினேட் என்னும் தளத்திலிருந்து கொச்சி கழிமுகப்பகுதியின் அழகை நன்றாக பார்த்து ரசிக்கலாம். சுற்றுலாப்பயணிகள் மட்டுமல்லாமல் உள்ளூர் மக்களும் அதிக அளவில் விருப்பத்துடன் வந்து ஓய்வெடுக்கும் இடமாக இது திகழ்கிறது. ஞாயிற்றுகிழமை மாலை வேளைகளில் மக்கள் திரளாக சூரிய அஸ்தமனத்தை பார்க்க கூடுகின்றனர்.

Attokaran

பொல்கட்டி அரண்மனை

பொல்கட்டி அரண்மனை

பொல்கட்டி அரண்மனை கொச்சிக்கு அருகிலுள்ள பொல்கட்டி தீவில் அமைந்துள்ளது. 1744ம் ஆண்டில் டச்சுக்காரர்களால் இது கட்டப்பட்டுள்ளது. இந்த அரண்மனை ஒரு பாரம்பரிய மாளிகை போன்று தோற்றமளிக்கிறது. பசுமையான தோட்டங்களும் புல்வெளிகளும் பின்னாளில் இந்த மாளிகையை சுற்றிலும் உருவாக்கப்பட்டுள்ளன. துவக்கத்தில் இது மலபார் டச்சு கமாண்டரின் இருப்பிடமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் 1909ம் ஆண்டில் டச்சு வணிகர்கள் இம்மாளிகையை ஆங்கிலேயருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளனர்.

Ranjithsiji.

ஆலப்புழா

ஆலப்புழா

‘ஆலெப்பி' என்ற பெயரால் தற்சமயம் அறியப்படும் ‘ஆலப்புழா' உப்பங்கழிப் பகுதியானது ஓய்வுக்கும் ஏகாந்தத்துக்கும் பெயர் பெற்ற இடமாகும். ‘கீழைத்தேசத்து வெனிஸ் நகரம்' என்று இது அழைக்கப்படுகிறது என்று சொன்னாலே போதும், ஆஹா! என்ற உணர்வு நம் மனதின் நிச்சயம் தோன்றாமல் இருக்காது. ஆலப்புழாவின் மனம் மயக்க வைக்கும் உப்பங்கழி நீர்த்தேக்கங்களும், ஓடைகளுக்கு நடுவே வீற்றிருக்கும் ரம்மியமான பசுமை போர்த்திய சோலைகளும் நம்மை மெய்மறக்கச் செய்து நம் உணர்வுகளை எங்கோ இழுத்து செல்கின்றன.

 திருவனந்தபுரம்

திருவனந்தபுரம்

திருவனந்தபுரத்தின் ஆன்மீக அடையாளமான ஸ்ரீ பத்மநாப ஸ்வாமி கோயிலுக்கு ஒவ்வொரு நாளும் ஏராளமான பக்தர்கள் விஜயம் செய்கின்றனர். இங்குள்ள நவராத்திரி மண்டபத்தில் ஒவ்வொரு வருடமும் கல்விக்கடவுளாகிய சரஸ்வதி தேவியை கொண்டாடும் விதத்தில் ஒரு இசைத்திருவிழா கோலாகலமாக நடத்தப்படுகிறது. இங்குள்ள குதிர மாளிகை அல்லது புத்தேன் மாளிகை என்று அழைக்கப்படும் பாரம்பரிய அரண்மனை கேரளிய கட்டிடக்கலை பாணிக்கான உதாரணமாக அமைந்துள்ளது. மேலும் திருவனந்தபுரத்தின் மஹாத்மா காந்தி சாலையில் பாரம்பரிய கலையம்சங்களுடன் காட்சியளிக்கும் பல மாளிகைகளை இன்றும் பார்க்கலாம். பழமை மற்றும் நவீனம் ஆகிய இரண்டு அம்சங்களும் இந்த தெருவில் ஒன்றோடன்று கலந்து மிளிர்கின்றன. சிவப்பு ஓட்டுக்கூரைகளுடன் காணப்படும் மாளிகைகளில் பழமையையும் கண்ணாடி மற்றும் நவீன வடிவமைப்புகளுடன் வானோங்கி நிற்கும் பலமாடிக்கட்டிடங்களில் நவீனத்தையும் கண்டு கொள்ளலாம்.


திருவனந்தபுரத்திலுள்ள சுற்றுலாத் தளங்கள்

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X