Search
  • Follow NativePlanet
Share
» »வாழ்க்கையில ஒரு முறையாச்சும் இந்த சாலையில பயணிச்சே ஆகணும்...!

வாழ்க்கையில ஒரு முறையாச்சும் இந்த சாலையில பயணிச்சே ஆகணும்...!

நம் வாழ்வில் முக்கியமான பங்கை வகிப்பது பயணங்கள் தான். ஒவ்வொரு பயணமும் வாழ்க்கைக்கு தேவையான ஏதோ ஒன்றை நமக்கு கற்றுத் தருகிறது. ஒரு முறை நாம் மேற்கொள்ளும் பயணமானது நம் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத பல நினைவுகளை நமக்கு அளிக்கிறது. நண்பர்களுடனோ, உறவினர்களுடனோ, காதலருடனோ அல்லது கணவன், மனைவியாகவோ என இந்தப் பயணம் யாருடன் சேர்ந்து சென்றாலும் இனிதான நினைவுப் பொக்கிஷமாக மாறிவிடுகிறது. இதில், முன்பெல்லாம் ஒற்றைப்பாதையாக இருந்த சாலைகள் தற்போது நான்கு வழி, எட்டு வழிப்பாதைகளாக மாறிவிட்டன. இதன் காரணமாக சில ரம்மியமான காட்சிகளை நாம் இழக்க நேரிட்டுள்ளது. இன்னும் இழந்துகொண்டுதான் வருகிறோம். சிறு வயதில் சென்னை முதல் மதுரை வரை சென்றால் பார்க்கக்கூடிய பசுமை பரப்பு காட்சிகளை தற்போது காண இயலாது. பயணங்களே தற்போது இயந்திரத்தனமாக மாறிவிட்டது என்று கூட கூறலாம். மாறிவிட்ட காலகட்டத்தில் வசித்துவரும் இக்காலத்தில் பசுமை நினைவுகளை அளிக்கும் வகையில் சில சாலைகள் குறித்து இந்த தொகுப்பில் நாம் காண இருக்கிறோம்.

சிலிகுரி - டார்ஜீலிங்

சிலிகுரி - டார்ஜீலிங்

மேற்குவங்க மாநிலத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பிரதேசமான டார்ஜீலிங் இந்தியாவின் முக்கிய மலைவாசத் தலங்களுள் முக்கியப் பங்கு வகிக்கிறது. சிலிகுரி முதல் டார்ஜிலிங் வரை மலைப்பாதை பயணம் நம்மை பூரிப்பின் உச்சத்துக்கு அழைத்துச் செல்லும். 60 கிலோ மீட்டர் மலைப்பாதையில் பயணம் செய்ய 2 மணி நேரம் கடக்கும். தேயிலை தோட்டங்களும், பசுமை பள்ளத்தாக்குகளும், அடர்த்தியான மற்றும் உயரமான மரங்களும் நம் கண்களுக்கு விருந்தளித்துக் கொண்டே பல நினைவுகளை புதுமைப்படுத்தும். மேலும் டார்ஜீலீங்கின் பிரபலமான மலை ரயிலும் இந்த சாலையிம் ஓரமாகவே செல்கிறது, இதனையும் பார்த்துக்கொண்டே பயணிப்பது மாறுபட்ட ஒரு அனுபவமாக இருக்கும்.

brian everitt

கொல்லி மலை

கொல்லி மலை

கொல்லி மலை, இந்தியாவின் தெற்கு பகுதியில் உள்ள தமிழ்நாட்டின் நடுப்பகுதியில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத் தொடராகும். ஆயிரம் முதல் 1300 மீட்டர் உயரம் உள்ள இந்த மலைத்தொடர், 280 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டது. எந்த ஒரு ஓட்டுநரும் இந்த சாலையில் வாகனம் ஓட்ட விரும்புவர் அது காராக இருந்தாலும் சரி பைக்காக இருந்தாலும் சரி. 15 கிலோ மீட்டர் தொலைவுக்குள் 70-க்கும் மேற்பட்ட கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட இது மிகவும் ஆபத்தான சாலைகளுள் ஒன்றாகும்.

சாலக்குடி - வால்பாறை

சாலக்குடி - வால்பாறை

இயற்கை எழில்கொஞ்சும் கேரளாவில் உள்ள சாலக்குடி முதல் தமிழ்நாட்டில் உள்ள வால்பாறை வரையிலான இந்த சாலை அடர்ந்த காடுகள் வழியே செல்கிறது. மிகவும் குறுகிய சாலையான இதில் பயணிக்கும் போது குழுமையான சூழலை அனுபவித்தவாறே செல்லலாம். யானைகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் மாலை 4 மணிக்கு மேல் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. நீங்கள் இயற்கை ஆர்வலர் என்றால் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஊடே பயணிப்பது உங்களுக்கு மனநிறைவை அளிக்கும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்காது. வழியில் வலச்சல் மற்றும் அதிரப்பள்ளி அருவிகளையும் அதிலிருந்து வழிந்தோடும் நீரையும் பயணத்தின் முழுவதும் காணலாம்.

Caminoreal2bis

சென்னை - தூத்துக்குடி ஈசிஆர்

சென்னை - தூத்துக்குடி ஈசிஆர்

மலைச்சாலை வழியாக பயணிச்சா உடல்நிலை ஒத்துழைக்காது பாஸ். ஆனால், நெடுந்தூரப் பயணம்னா ரொம்ம ஆசைங்க அப்படிங்குறவங்களுக்கு ஏற்ற சாலையில் தான் சென்னையில் இருந்து தூத்துக்குடி வரையிலான ஈசிஆர் சாலை. சென்னைக்கு புகலிடமாக இருப்பது ஈசிஆர் என்னும் கிழக்கு கடற்கரைச் சாலை. வங்கக் கடலில் அழகைக் கண்டவாறே, பயணம் செய்வது மிகவும் ரம்மியமான ஒன்று.

VortBot

மூணார் - உடுமலைப்பேட்டை

மூணார் - உடுமலைப்பேட்டை

கேரளாவின் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள மூணார், பச்சைக் கம்மளம் விரித்தது போல காட்சியளிக்கக்கூடியது இந்த சாலை. இங்கு நிலவும் சீதோஷ்னம் எப்போதும் குளிர்சியானதாக இருக்கும் என்பதாலேயே எக்போதும் சுற்றுலாப் பயணிகளின் கால்தடம் இங்கே இருந்துகொண்டே இருக்கும். தமிழ்நாட்டில் இருந்து மூணார் செல்ல தேனி வழியே மற்றொரு பாதை இருந்தாலும், இது ஒரு வித்தியாசமான காட்சிகள் கொண்ட வழியாகும். இரவிக்குளம் தேசிய பூங்கா, சின்னார் வனவிலங்கு சரணாலயம் போன்ற முக்கிய சுற்றுலாத் தலங்கள் இந்தப் பாதையில் உள்ளன. இந்த சாலையில் செல்லும் போது காற்றாலை மின்சார உற்பத்தி நிலையங்கள் அதிகம் கொண்ட உடுமலைப்பேட்டையை பார்ப்பது வித்தியாசமான அனுபவமாக இருக்கும். அடுத்த முறை வாய்ப்பு கிடைச்சா இந்த சாலையையும் டிரை பண்ணி பாருங்க.

mohamedudhuman05

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X