Search
  • Follow NativePlanet
Share
» »தலை சுத்தவைக்கும் நாட்டின் வித்தியாசமான ரயில் நிலையங்கள்!

தலை சுத்தவைக்கும் நாட்டின் வித்தியாசமான ரயில் நிலையங்கள்!

எத்தனையோ அனுபவங்களை தரும் ரயில் பயணத்தில் தலை சுத்தவைக்கும் வித்தியாசமான நிலையங்களை கவணித்ததுண்டா ?. இந்திய ரயில்வேத் துறையின் சேட்டைமிக்க வித்தியாசமான ரயில் நிலையங்களுக்கு பயணிப்போம்.

மாறுபட்ட பல மொழிகளும், கலாச்சாரங்களையும் கொண்டுள்ள இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் இணைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது மக்களின் உணர்வுகளுக்கடுத்த இந்திய ரயில்வே துறையின் பங்கு அதிகப்படியானது. அன்பானவர்கள், கோபக்காரர்கள், குடும்பஸ்த்தர்கள், சண்டைக்காரர்கள், காதலர்கள், எதையும் கண்டுகொள்ளாத மிக்சர் மாமாக்கள், தூங்குபவர்கள், விற்பனையாளர்கள் என்று அனைத்துத் தரப்பு மக்களும் ஒரே வீட்டில் இருப்பதைப் போல... இதில் ஒரு சிலர், அப்புறம் சார், எந்த ஊருக்கு போறீங்க? என ஆரம்பித்து நம்ம வாழ்க்கை வரலாற ஒட்டுமொத்தமா தெரிஞ்சுக்க ஆர்வம் காட்டுவதில் அவ்வளவு அக்கரை செலுத்துவதே தனிக் காமெடி தான். இப்படி எத்தனை எத்தனையோ அனுபவங்களை தரும் இந்த ரயில் பயணத்தில் தலை சுத்தவைக்கும் வித்தியாசமான நிலையங்களை கவணித்ததுண்டா ?. வாருங்கள், இந்திய ரயில்வேத் துறையின் சேட்டைமிக்க வித்தியாசமான ரயில் நிலையங்களுக்கு பயணிப்போம்.

உயரமான ரயில் நிலையம்

உயரமான ரயில் நிலையம்


இந்தியாவில் அமைந்துள்ள ரயில் நிலையங்களிலேயே மிக உயரமான ரயில் நிலையம் என்றால் அது டார்ஜிலிங் அருகே உள்ள கூம் என்னும் கிராமத்தில் உள்ள நிலையம் தான். கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையம் நாட்டிலேயே தூய்மையான ரயில் நிலையங்களின் பட்டியலிலும் தனது பெயரை பெற்றுள்ளது.

AHEMSLTD

பரபரப்பான ரயில் நிலையம்

பரபரப்பான ரயில் நிலையம்


நாட்டிலேயே பழமையான மற்றும் மிகப்பெரிய ரயில் நிலையம் என்றால் அது ஹௌரா ரயில் நிலையம் தான். இந்த ரயில் நிலையம் வழியாக அன்றாடம் 600-க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில் செல்கின்றன. 23 நடைமேடைகளைக் கொண்டுள்ள இந்த ரயில் நிலையம், நாட்டிலேயே மிகவும் பரபரப்பான ரயில் நிலையமாகத் திகழ்கிறது. குழந்தைகளுடனுடம், அதிகப்படியான பணம், நகையுடன் பயணம் செய்பவராக நீங்கள் இருந்தால் கொஞ்சம் கவணமாக இருந்துக்கோங்க.

Lovedimpy

கட்டக் ரயில் நிலையம்

கட்டக் ரயில் நிலையம்


ஒரிசாவின் கட்டக் நகரத்தில் இருக்கும் இந்த ரயில் நிலையம் முதன் முதலாக பார்ப்பவர் எவருக்கும் ஒரு பழங்கால கோட்டைக்குச் செல்வது போல் இருக்கும். நாட்டின் நூறு முக்கிய ரயில் நிலையங்களில் இது தனித்துவமானது.

Aruni Nayak

உலகச் சாதனைபடைத்த ரயில் நிலையம்

உலகச் சாதனைபடைத்த ரயில் நிலையம்


16 நடைமேடைகளைக் கொண்டுள்ள புதுதில்லி ரயில் நிலையத்தை, தினசரி ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயன்படுத்துகின்றனர். இந்த ரயில் நிலையமே, உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம் என்று உலகச் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Shailendrachauhan95

முதல் ரயில் நிலையம்

முதல் ரயில் நிலையம்


இந்தியாவில் முதன்முறையாக 1853-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மும்பை- தானே வரையிலான ரயில் சேவை துவங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தென்னிந்தியாவில் இருப்புப் பாதை அமைக்கும் பணியை மெட்ராஸ் ரயில்வே கம்பெனி தொடங்கியது. அதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடம்தான் சென்னை ராயபுரம். பரந்துவிரிந்த அறைகள், பிரம்மாண்டமான தூண்கள், அழகிய முகப்பு என மிகப்பிரமாண்டமான ராயபுரம் ரயில் நிலையம் கட்டி முடிக்கப்பட்டு தென்னிந்தியாவின் முதல் ரயில் சேவை, 1856ம் ஆண்டு ராயபுரத்தில் இருந்து புறப்பட்டு, ஆற்காடு நவாப்பின் தலைமையிடமான ஆற்காடு வரை இயக்கப்பட்டது. தமிழகத்தின் முதல் ரயில் நிலையம் என்றால் அது இந்த நிலையம் தான்.

Darren Burnham

அழகிய ரயில் நிலையங்கள்

அழகிய ரயில் நிலையங்கள்


மத்திய ரயில்வே மிக அழகிய ரயில் நிலையங்கள் என்னும் கருவில் சில வருடங்களுக்கு முன்பு போட்டி நடத்தியது. இதில், இந்தியா முழுவதும் உள்ள 11 மண்டலங்களில் இருந்து 62 ரயில் நிலையங்கள் பங்கேற்றன. இப்போட்டியில், நாக்பூர் பிரிவின் சந்திரபூர் மற்றும் பல்லர்ஷா ரயில் நிலையங்கள் முதல் பரிசு பெற்றன. ரயில் நிலையத்தின் சுவற்றில் தீட்டப்பட்டுள்ள கிராஃபிட்டி வகை ஓவியங்கள்தான் வெற்றியின் மூல காரணமாக இருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது பிற மாநிலங்களில் உள்ள ரயில் நிலைங்களிலும் இதுபோன்ற ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

Ganesh Dhamodkar

உலகின் மிக நீண்ட ரயில் நடைமேடை

உலகின் மிக நீண்ட ரயில் நடைமேடை


கோரக்பூர் ரயில் நிலையத்தில் 1,366.33 மீட்டர் நீளமான நடைமேடை உள்ளது. இதுதான், உலகிலேயே மிகவும் நீளமான நடைமேடை என்பது பெருமைக்குறியது. உலகச் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இந்த நடைமேடையில், தலா 26 பெட்டிகளைக் கொண்ட இரண்டு ரயில்களை ஒரே நேரத்தில் நிறுத்தலாம்னா பாருங்களேன். அடேங்கப்பா....

Benison P Baby

வியப்பூட்டும் ரயில் நிலையம்

வியப்பூட்டும் ரயில் நிலையம்


பொதுவாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்க ரயில் பயண்படுகிறது. மாநிலத்தில் இருந்து மாநிலம் என செல்லும் ரயில்களை நாம் அறிந்திருப்போம். ஆனால், நவாப்பூர் ரயில் நிலையம் கொஞ்சம் மாறுபட்டது. இந்த ரயில் நிலையத்தின் ஒரு பகுதி குஜராத்துக்கும், மற்றொரு பகுதி மகராஷ்டிராவுக்கும் சொந்தம். இரண்டு மாநிலங்களைப் பிரிக்கும் எல்லையில் அமைந்துள்ள ,ந்த நிலைய நடைமேடையின் நடுவில் ஒரு வெள்ளைக்கோடு போடப்பட்டிருக்கும். கோட்டின் நடுவில் இரும்பிலான ஒரு இருக்கை வைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு பக்கம் குஜராத் என்றும் மறுபக்கம் மகராஷ்டிரா என்றும் அம்புக்குறி வரையப்பட்டிருக்கும். இதேபோன்று இன்னொரு ரயில் நிலையமும் இருக்கிறது. அது, மத்தியப் பிரதேசத்தில் இருந்து ராஜஸ்தான் செல்லும் வழியில் உள்ள பவானி மண்டி ரயில் நிலையம். இதன் ஒருபகுதி ராஜஸ்தானிலும் மற்றொரு பகுதி மத்தியப் பிரதேசத்திலும் அமைந்துள்ளது. நீங்க உக்காந்துட்டு இருக்குறத வச்சே எந்த ஊருன்னு கண்டுபிடிச்சுடுவாங்கோ...

PiyushGoyal

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+