Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவில் பெரிய அளவில் கொண்டாடப்படும் டாப் 8 பண்டிகைகள் இவை தான்!

இந்தியாவில் பெரிய அளவில் கொண்டாடப்படும் டாப் 8 பண்டிகைகள் இவை தான்!

இந்தியா பரப்பளவில் 7 ஆவது பெரிய நாடாக இருந்தாலும், உலகின் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு பல்வேறு மதங்களையும், சடங்குகளையும், பண்டிகைகளையும், கொண்டாட்டங்களையும் உள்ளடக்கியது. சொல்லப் போனால் பண்டிகைகள் என்று வரும் போது இந்தியர்கள் அனைவரும் ஒன்று கூடி சந்தோஷமாக இனிப்புகளை பரிமாறி, மகிழ்ச்சியுடன் கொண்டாட்டங்களில் பங்கேற்கின்றனர். இந்தியாவில் பெரிய அளவில் கொண்டாடப்படும் பண்டிகைகள் இவை தான்!

diwali festival

தீபாவளி

சந்தேகத்திற்கு இடமின்றி இந்தியாவின் மூலை முடுக்குகளிலும் கூட கொண்டாடப்படும் ஒரு பண்டிகை என்றால் அது தீபாவளி மட்டும் தான். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் எந்தவிட வேறுபாடுமின்றி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தில் மக்கள் புத்தாடை அணிந்து, பலகாரங்கள் சாப்பிட்டு, பட்டாசு வெடித்து, இனிப்புகளை அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களுக்கு கொடுத்து மகிழ்கின்றனர். நமக்கு எத்தனை வயதனாலும் நாம் சிறு வயதில் கொண்டாடிய தீபாவளி நியாபகங்களை இன்றளவும் நினைத்து பார்த்து சந்தோஷமடைகிறோம்.

மகர சங்கராந்தி

மகர சங்கராந்தி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பல வேறு விதமாக கொண்டாடப்படுகிறது. பலர் கங்கா சாகர் போன்ற இடங்களில் நீராடி சூரிய கடவுளை பிரார்த்தனை செய்கிறார்கள். ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் கர்நாடகாவில் சங்கராந்தி எனவும், பஞ்சாபில் மாகி தமிழகத்தில் பொங்கல் எனும் 3 நாள் பண்டிகையாகவும் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் பெரும் பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என கோலாகலமாக கொண்டாடுகின்றனர்.

navaratri festival

நவராத்திரி

நவராத்திரி இந்தியாவின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். இந்த பண்டிகை இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மக்களாலும் வெவ்வேறு வழிகளில் கொண்டாடப்படுகிறது. சைத்ர நவராத்திரி ராம நவமியிலும், சாரதா நவராத்திரி துர்கா பூஜை மற்றும் விஜயதசமியிலும் முடிவடைகிறது. இந்த நாட்களில் தமிழகத்தில் கொலு வைக்கப்பட்டு ஒன்பது நாட்களும் பூஜை செய்யப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி

இந்தியாவின் முக்கியமான இந்து மதப் பண்டிகைகளில் ஒன்றான விநாயக சதுர்த்தி, 10 நாள் வண்ணமயமான கொண்டாட்டங்கள் கொண்டதாகும். பெரிய கைவினை விநாயகர் சிலைகள் வீடுகளில் அல்லது வெளியில், பொது பந்தல்களில் நிறுவப்படுகின்றன. காலையிலும் மாலையிலும் பூஜைகள் நடைபெறுகின்றன. கடைசி நாளான விசர்ஜனின் நாளன்று - ஒரு நீர்நிலையில் விநாயகர் சிலையை மூழ்கடிக்கப்படுகிறது. பாட்டு, நடனம், நாடகம் போன்ற கலாச்சார நிகழ்ச்சிகளும், இலவச மருத்துவ மற்றும் ரத்த தான முகாம்களும் நடத்தப்படுகின்றன.

holi festival

ஹோலி

அன்பின் திருவிழாவாகவும், வண்ணங்களின் திருவிழாவாகவும் கருதப்படும் ஹோலி பண்டிகை வசந்த காலத்தின் வருகையையும் தீமையின் மீது நன்மையின் வெற்றியையும் குறிக்கிறது. இது நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படுகிறது. ஹோலி பண்டிகை நாளில், அவர்கள் ஒருவருக்கொருவர் பல்வேறு வண்ணங்களின் உலர்ந்த மற்றும் ஈரமான வண்ணங்களை அணிவார்கள். வண்ணத் தண்ணீர் நிரப்பப்பட்ட வாட்டர் கன்கள் மற்றும் பலூன்களுடன் விளையாடுவது மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கிறது.

கிருஷ்ண ஜெயந்தி

விஷ்ணுவின் எட்டாவது அவதாரமாகக் கருதப்படும் பகவான் கிருஷ்ணரின் பிறப்பை ஜன்மாஷ்டமி குறிக்கிறது. நாடு முழுவதும் வெகு விமரிசையாகக் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், பக்தர்கள் தங்கள் வீடுகளிலும், கோயில்களிலும் கிருஷ்ணரை வணங்கி, தெய்வத்தை மகிழ்விக்க பலவகையான உணவுகளை வழங்குகிறார்கள். முன்பெல்லாம் வட இந்தியாவில் கொண்டாடப்பட்டு வந்த இந்த பண்டிகை, நாளடைவில் தென்னிந்திய மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது.

mahashivratri

மஹா சிவராத்திரி

சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த பண்டிகை இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் வெகு விமர்சியாக கொண்டாடப்படுகிறது. மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மஹா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. இன்றைய நாளில் சிவபெருமானுக்கு கோவில்களில் நான்கு வேலை பிராமாண்ட பூஜைகள் நடைபெறுகிறது. இன்றைய ஒரு நாளில் உறங்காமல் விழித்திருந்து பூஜை செய்து சிவனை வழி போடும் போது நமது பாவங்கள் அனைத்தும் நீங்கி நல்வாழ்வு கிடைக்க நம்மை ஆசீர்வதிப்பார் என்பது நம்பிக்கை.

கிருஸ்துமஸ்

கிறிஸ்துமஸுக்கு அறிமுகம் தேவையில்லை. இது இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கிறது மற்றும் கிறிஸ்தவர்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் நாட்டில் உள்ள பல பண்டிகைகளைப் போலவே, இது மற்ற மதத்தினரையும் ஈர்க்கிறது. மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை தொடர்ந்து புத்தாண்டு வருவதால், காற்றில் பண்டிகை உற்சாகம் நிலவுகிறது. எந்தவித வேற்றுமையும் இன்றி அனைத்து மக்களும் இந்நாளில் தேவாலயங்களுக்கு செல்கின்றனர், கேக் பரிமாறி கொண்டாடுகின்றனர்.

இந்த பண்டிகைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்த பண்டிகை எது?

More News

Read more about: travel india tamilna
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+