» »"ஹுக்ளி" யாரும் அறியா மற்றொரு அழகை ரசிக்கப் போகலாமா..!

"ஹுக்ளி" யாரும் அறியா மற்றொரு அழகை ரசிக்கப் போகலாமா..!

Written By: Sabarish

ஹுக்ளி அல்லது ஹுக்ளி சுச்சுரா என்று அழைக்கப்படும் இந்த நகரம் இந்தியாவில் கதம்பமான வெளிநாட்டு கலாச்சார அம்சங்களுடன் காட்சியளிக்கும் நகரங்களில் ஒன்றாகும். போர்த்துகீசிய, டச்சு மற்றும் ஆங்கிலேய கலாச்சாரங்களின் தாக்கங்கள் இந்த நகரில் கலந்துள்ளன. முகலாய சாம்ராஜ்யம் வீழ்ச்சியடையத் தொடங்கியபோது கொல்கத்தா, ஹல்தியா மற்றும் ஹுக்ளீ ஆகிய இடங்களில்தான். ஆங்கிலேயர்கள் வந்திறங்கி தங்களது ஆக்கிரமிப்புகளை துவங்கினர் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.

ஆற்றங்கரை நகரம்

ஆற்றங்கரை நகரம்


தற்போது ஹுக்ளி நகரம் ஒரு செழிப்பான ஆற்றங்கரை துறைமுகமாக புகழ் பெற்றுள்ளது. கொல்கத்தா நகரத்திலிருந்து ஒரு சில கிலோ மீட்டர் தொலைவில் இந்த நகரம் அமைந்திருக்கிறது. ஹுக்ளியிலிருந்து ஆற்றுவழி பயணிகள் படகுப்போக்குவரத்து மூலமாக வடக்கு 24 பர்க்கானாக்களை சென்றடையலாம். ஹுக்ளி நகரம் முழுதுமே பாகீரதி ஆற்றின் கரையிலேயே அமைந்திருக்கிறது.

Biswarup Ganguly

சுற்றுலாத்தலங்கள்

சுற்றுலாத்தலங்கள்


கொல்கத்தாவிற்கு பயணம் செய்வோர் ஓரிரு நாட்கள் கூடுதலாக ஒதுக்கி ஹுக்ளிக்கும் பயணம் செய்யலாம். பண்டேல் சர்ச் மற்றும் ஹூக்ளி இமாம்பாரா ஆகியவை ஹுக்ளியில் தவறவிடக்கூடாத சுற்றுலா அம்சங்களாகும்.

Biswarup Ganguly

உணவு விரும்பிகளுக்காக..!

உணவு விரும்பிகளுக்காக..!


ஹுக்ளி நகர மக்கள் பெருநகர் கலாச்சார நவீன நாகரிகத்தை அடிப்படையாக கொண்ட பழக்க வழக்கங்களுடன் காணப்படுகின்றனர். நீரால் சூழப்பட்டுள்ள இங்கு பெரும்பாலும் சுவையான கடல் உணவு வகைகள் பிரசிதிபெற்றவையாக உள்ளது.

Asad asad12

ஹௌரா

ஹௌரா


மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரமான கொல்கத்தாவின் இரட்டை நகரம்தான் இந்த ஹௌரா. இந்தியாவில் உருவான பல்வேறு இரட்டை நகரங்களின் பட்டியலில் இதுவும் ஒன்றாக உள்ளது. ஹௌரா பாலம், விவேகானந்தா, வித்யாசாகர், நிவேதிதா பாலம் ஆகிய நான்கு பாலங்களே இந்த ஹௌரா நகர்ப்பகுதியை கொல்கத்தாவுடன் இணைக்கின்றன.

Ovjtphoto

ஹௌரா சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

ஹௌரா சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்


பாடனிகல் கார்டன் அல்லது ஆச்சார்ய ஜகதீஷ் சந்திரபோஸ் இந்தியன் பொட்டானிகல் கார்டன் என்று அழைக்கப்படும் தோட்டப்பூங்கா ஹௌராவிலுள்ள முக்கிய சுற்றுலாத் தலமாக திகழ்கிறது. ஷிப்பூர் எனும் இடத்திலுள்ள இந்த தோட்டப்பூங்கா 100 ஹெக்டேர் பரப்பளவில் 12,000 வகையான தாவரங்களை கொண்டிருக்கிறது.

Biswarup Ganguly

உலகில் பெரிய ஆலமரம்

உலகில் பெரிய ஆலமரம்


இந்த தாவரவியல் பூங்காவில் உள்ள கிரேட் பான்யன் ட்ரீ என்று அழைக்கப்படும் பிரம்மாண்ட ஆலமரம் ஒன்று உலகத்திலேயே மிக ஆலமரமாக பிரசித்தி பெற்றுள்ளது. இதனருகே உள்ள சண்ட்ராக்ச்சி ஜீல் எனப்படும் ஏரி புகைப்பட ரசிகர்கள் பெரிதும் விருக்கூடியதாகும்.

Biswarup Ganguly

எப்படி சென்றடைவது?

எப்படி சென்றடைவது?


மேற்கு வங்காள மாநிலத்தின் எல்லா நகரங்களுடனும் போக்குவரத்து வசதிகளால் ஹௌரா நகரம் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இதர முக்கிய நகரங்களுக்கு ஹௌராவிலிருந்து ரயில் சேவைகளும் உள்ளன.

Biswarup Ganguly

கல்னா

கல்னா

கல்னா நகரம் அன்னை அம்பிகா என்று வணங்கப்படும் காளி தேவி அம்மனுக்காக அர்ப்பணிக்கப்பட்டதாகும். அது மட்டுமல்லாமல் ராஜ்பரி எனப்படும் அரண்மனை ஒன்றும் இந்நகரத்தின் பிரதான சுற்றுலா அம்சமாக அமைந்திருக்கிறது. பிரசித்தமான 108 சிவன் கோவில்கள் கொண்ட கோவில் வளாகமும் இங்கு இடம் பெற்றுள்ளது. இந்த 108 கோவில் அமைப்பானது ஒரே மையபுள்ளியை கொண்ட இரண்டு வட்ட வடிவ அமைப்புகளாக உருவாக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.

Kinjal bose 78

டிகா- ரெட்டை கடற்கரை

டிகா- ரெட்டை கடற்கரை


இயற்கையான கடற்கரையில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் டிகா சுற்றுலாத்துறை உருவாக்கப்பட்டதுதான் இந்த இரட்டை கடற்கரை. மிகப்பெரிய அளவில் இருக்கும் இக்கடற்கரை எத்தனை சுற்றுலா பயணிகள் வந்தாலும் நிரம்பி வழியாமல் வசதியாக இருக்கிறது. குளிர்காலங்களில் இங்கு ஏராளமான பயணிகள் குவிகிறார்கள்.

Atudu

அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்


டிகாவைச் சுற்றிலும் ஜுன்புர், ஷங்கர்பூர், சுபர்னரேகா நதி, தல்சாரி, மந்தார்மணி போன்ற பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. குடும்பத்துடன் சென்றாலும் சரி, காதலர்களாக சென்றாலும் சரி வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத நினைவுகளை இங்கே பெறலாம். அத்தனை பொழுதுபோக்கு அம்சங்கள் இங்கே உள்ளன.

Subhojit.sil

பக்காலி

பக்காலி


பக்காலி எனப்படும் இந்த பொழுதுபோக்கு தலம் மேற்கு வங்காள மாநிலத்தில் 24 பர்க்கானா மாவட்டத்தில் அமைந்துள்ளது. நகர நெரிசலில் இருந்து விலகி தூய்மையான இயற்கை சூழலை அனுபவிக்க ஏங்குபவர்களுக்கு இது மிகவும் பொருத்தமான இடம்.

Skmishraindia

இரட்டை நகரம்

இரட்டை நகரம்


இரட்டை நகரங்களான பக்காலி மற்றும் ஃப்ரேசர்குஞ்ச் எனும் இரண்டு நகரங்களுக்கு இடையே 7 கிலோ மீட்டருக்கு இந்த பக்காலி கடற்கரை தீவுப்பகுதி அமைந்துள்ளது. கடினமான தரையுடன் காட்சியளிக்கும் இங்கே கடலை ஒட்டி சைக்கிள் பயணம் மற்றும் ஓட்டப்பயிற்சி போன்றவற்றில் ஈடுபட முடியும்.

Sambit 1982

சுற்றுலா அம்சங்கள்

சுற்றுலா அம்சங்கள்


பக்காலி கடற்கரை தீவு தனிமையான இடத்தில் அமைந்திருப்பதுதான் முக்கிய சிறப்பாக கருதப்படுகிறது. பொதுப்போக்குவரத்து வசதிகள் இங்கு அதிகமில்லை என்றாலும் தனியார் வாகனங்கள் மூலம் இங்கு பயணிகளின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்கின்றன. இவற்றின் மூலமாக ஹென்றி தீவு மற்றும் வாட்ச் டவர் எனப்படும் கண்காணிப்பு கோபுரம் உள்ளிட்டவற்றிற்கு பயணிக்கலாம்.

123sarangi

ஜம்புத்வீப்

ஜம்புத்வீப்


பக்காலி தீவுக்கு அருகிலேயே அமைந்துள்ள ஜம்புத்வீப் எனும் மற்றொரு அழகிய தீவுப்பகுதிக்கும் பயணிகள் சென்று வரலாம். புத் புதி எனும் நாட்டுப்படகுகளின் மூலமாக இந்த தீவுக்கு செல்ல வேண்டியிருக்கும். ஆனால் இந்த ஜம்புத்வீப் தீவில் இறங்கி சுற்றிப்பார்ப்பதற்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நபதீப்

நபதீப்


நபதீப் என்பது பெங்காளி மொழியில் ‘ஒன்பது தீவுகள்' என்று பொருளாகும். மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள இந்த இடம் பங்களாதேஷ் நாட்டினை ஒட்டியே அமைந்துள்ளது. நபதீப் எனப்படும் இந்த தீவு அந்தர்த்வீப், சிமந்தாத்வீப், ருத்ராத்வீப், மத்ய த்வீப், கோத்ரும்த்வீப், ரித்த்வீப், ஜானுத்வீப், மொஹத்ரும் த்வீப் மற்றும் கோலாத்வீப் எனவும் அழைக்கப்படுகிறது.

Cinosaur

சாந்தி நிகேதன்

சாந்தி நிகேதன்


மேற்கு வங்க மாநில தலைநகரம் கொல்கத்தாவிலிருந்து 180 கிலோ மீட்டர் தொலைவிலும், பிர்பும் மாவட்டத்தின் ஒரு பகுதியாகவும் உள்ள சாந்தி நிகேதன் அதன் இலக்கிய பின்னணிக்காக மிகவும் அறியப்படும் இடமாகும். நோபல் பரிசு பெற்ற இரபீந்தரநாத் தாகூரால் இங்கு உருவாக்கப்பட்ட சாந்தி நிகேதன் பன்னாட்டு பல்கலைக்கழகம், மேற்கத்திய அறிவியலுடன் கிழக்கின் கலாச்சாரமும், பாரம்பரியமும் போட்டியிடும் இடமாக உள்ளது.

Biswarup Ganguly

பாங்குரா

பாங்குரா


மேற்கு வங்காள மாநிலத்தில் ஒரு முக்கியமான சுற்றுலா நகரமாக இந்த பாங்குரா நகரம் விலங்குகிறது. அளவில் சிறியதாக இருந்தாலும் இந்நகரத்தின் தனித்தன்மையான அம்சங்கள் சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்கின்றன.

Chiranjibmazumdar1

சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாத் தலங்கள்


பாங்குரா நகரை சுற்றிலும் பல்வேறு முக்கியமான சுற்றுலா அம்சங்கள் உள்ளன. இந்த நகரத்திற்கு மேற்கில் சுசியானா மலை எனும் இடத்தில் ஒரு வெந்நீர் ஊற்று அமைந்திருக்கிறது. இது தவிர பாங்குரா மாவட்டத்திலேயே மிக உயரமான பெஹரிநாத் மலை முக்கியமான ஜைன வழிபாட்டுத்தலமாக புகழ் பெற்றுள்ளது. பாங்குரா நகரிலிருந்து 55 கிலோ மீட்டர் தூரத்தில் முக்திமாண்பூர் எனும் இடத்தில் உள்ள அணைப்பகுதி இந்நகரத்தின் பிரதான சுற்றுலா அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது.

Paulsub

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்