» »இந்தியாவின் அல்டிமேட் ரயில் இதுதான் - சவால்! உங்களுக்கு இது தெரிந்திருக்காது!

இந்தியாவின் அல்டிமேட் ரயில் இதுதான் - சவால்! உங்களுக்கு இது தெரிந்திருக்காது!

Written By: Udhaya

பயணங்கள் நம்மையும் நம்முடன் இருப்பவர்களையும் நம்மை அறியாது பிணைக்கும் தன்மை கொண்டவை. நீங்கள் ஒரு வகுப்பிற்குள் முதல்முறையாக இணையும்போது அங்குள்ள அனைத்து நண்பர்களுடனும் எப்போது ஜாலியாக பழகுவீர்கள் என்றால் அது நிச்சயம் ஏதாவதொரு பயணத்தின்போதுதான். இந்தியாவில் பயணம் என்பது நிறைய வகையில் இருந்தாலும், நம்மைப் போன்ற நடுத்தரக் குடும்பத்தில் இருந்து வருபவர்களுக்கு ரயில் ஒன்றுதான் நீண்டதூர பயணத்துக்கு ஏற்றதாக இருக்கும். ஆம்... ரயில் இந்திய பயணங்களின் வரப்பிரசாதம் என்றால் யார்தான் மறுக்கப்போகிறார்கள். உங்களுக்கு நீங்கள் கல்லூரி அல்லது பள்ளி நண்பர்களுடன் பயணித்த சுற்றுலா நினைவு இருக்கிறதா... முதல் முறையாக சுற்றுலா சென்ற அனுபவத்தை யார்தான் மறக்கமுடியும். நண்பர்களுக்குள் சண்டை, சமாதானம், மகிழ்ச்சி, காதல் என எல்லாருக்கும் முதல் சுற்றுலா அனுபவம் மனம் முழுவதும் நிறைந்திருக்கும் அல்லவா... அப்படி நாங்கள் சுற்றுலா செல்லதிட்டமிட்டபோதுதான் இந்த உண்மை தெரியவந்தது. இந்தியாவில் இருக்கும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் குறித்த அட்டகாசமான 17 உண்மைகள் உங்களை நிச்சயம் வியக்கவைக்கும். வாருங்கள் அவற்றைப் பற்றிக் காணலாம்.

தலைநகரங்களை இணைக்கிறது

தலைநகரங்களை இணைக்கிறது


ராஜ்தானி என்றால் தலைநகர் என்று பொருள் ஆகும். பெயருக்கு ஏற்றார்போலவே இந்த ரயில் இந்திய தலைநகரத்தையும், இந்தியாவில் உள்ள மாநிலங்களின் தலை நகரங்களையும் இணைக்கிறது.

இந்தியாவின் அஸ்ஸாம், சத்திஸ்கர், கோவா, குஜராத், ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகம், கேரளம், மராட்டியம், ஒடிசா, தமிழ்நாடு, தெலங்கானா, திரிபுரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல பகுதிகளை இணைக்கும் வகையில் இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன.

 பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் வந்த ரயில்

பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் வந்த ரயில்


இந்தியாவிலேயே வேறந்த திட்டத்துக்கும் இப்படி ஒரு எதிர்ப்பு வந்தது கிடையாது என்று நம்பப்படுகிறது. அந்த அளவுக்கு மிகுந்த எதிர்ப்பை சம்பாதித்தது இந்த ரயில் திட்டம். இந்தியாவிலுள்ள பலர் இதை எதிர்த்தார்கள். இவ்வளவு ஏன், இந்திய ரயில்வேயின் அப்போதைய தலைவர் கூட எதிர்த்தாராம். அதன்பிறகு வெளிவந்த இந்த ரயில் திட்டம், பின் இயக்கப்பட்ட ரயில்கள் இந்திய மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த ரயிலில் ஒருமுறையாவது பயணம் செய்துவிடவேண்டும் என்பது பலரின் கனவாக உள்ளது.

Hpcos

முதல் சோதனை

முதல் சோதனை

இந்த ராஜ்தானி விரைவு ரயிலின் முதல் சோதனை மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே உள்ள அவ்ராவில் இருந்து நம் பாரத தலைநகர் டெல்லிக்கு இயக்கப்பட்டது. 1967ம் ஆண்டு இயக்கப்பட்ட இந்த ரயில் சோதனைகளுக்கு பிறகு பயணிகளுக்காக இரண்டு வருடங்கள் கழித்து அதாவது 1969ம் ஆண்டு இயக்கப்பட்டது. இந்த ரயிலில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வேகம் மணிக்கு 120கிமீ ஆகும்.

Superfast1111

 முழுக்க முழுக்க ஏசி

முழுக்க முழுக்க ஏசி

இந்திய ரயில்வேயில் இயக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த ராஜ்தானி ரயில் முழுக்க முழுக்க குளிரூட்டப்பட்ட ரயில் ஆகும். இந்த ரயில் முழுவதும் குளிரூட்டும் வசதி செய்யப்பட்டிருக்கிறது.
wikipedia

 தங்கும் வசதிகள்

தங்கும் வசதிகள்

அக்கமடேசன் வசதிகள் எனப்படும் தங்குவதற்கான வசதி முறைகள் இந்த ரயிலில் அதன் வசதிகளுக்கு ஏற்ப மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை முதல் வகுப்பு குளிரூட்டப் பட்ட அறைகள், 2 டயர் மற்றும் 3 டயர் ஆகும். இதில் முதல் வகுப்பில் இரண்டு மற்றும் நான்கு படுக்கை வசதிகள் கொண்ட பூட்டிக்கொள்ளும் வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

Oneindia

உணவு வகைகள்

உணவு வகைகள்

இந்த ரயிலில் காலை, மதியம், மாலை வேளைகளில் ரயில் பயண நேரத்துக்கு ஏற்றவாறு உணவுகள் தரப்படுகின்றன. அவை சிறப்பாகவும் சுவையானதாகவும் இருக்கின்றன.

Miya.m

எத்தனை ரயில்கள் தெரியுமா?

எத்தனை ரயில்கள் தெரியுமா?

இந்த ரயில்கள் இந்தியா முழுவதும் 23சோடிகளாக இயக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் டெல்லியை இணைக்குமாறு சேவை அளிக்கப்பட்டு வருகின்றன. செகந்திராபாத் ராஜ்தானி, திப்ருகர், கான்பூர் வழி திப்ருகர், லக்னோ வழி திப்ருகர், பாட்னா ராஜ்தானி, பிலாஸ்பூர் ராஜ்தானி, மடகன் ராஜ்தானி, ஸ்வர்ண ஜெயந்தி ராஜ்தானி, ஜம்மு ராஜ்தானி, பொக்ரோ வழி ராஞ்சி, டல்டன்கஞ்ச் வழி ராஞ்சி, பெங்களூர் ராஜ்தானி, திருவனந்தபுரம் ராஜ்தானி, மும்பை மத்திய ரயில் நிலையம், ஆக்ஸ்ட் கிராந்தி ராஜ்தானி, பந்த்ரா ராஜ்தானி ஸ்பெஷல், அட்ரா வழி புவனேஸ்வர், பொகாரோ வழி புவனேஸ்வர், சம்பல்பூர் வழி புவனேஸ்வர், சென்னை ராஜ்தானி, அகர்தலா ராஜ்தானி, அவுரா ராஜ்தானி, பாட்னா வழி அவுரா, சியால்டா ராஜ்தானி என 23 சோடிகள் இயக்கப்பட்டு வருகின்றன.
V Malik

இடைப்பட்ட நிறுத்தங்கள்

இடைப்பட்ட நிறுத்தங்கள்


ரயிலில் செல்லும்போது இடையில் வரும் நிறுத்தங்கள் இந்த ரயில்களைப் பொறுத்த வரையில் மிகக் குறைவாகும். மிகவும் குறைந்த நேரத்தில் நகரத்தை அடையும் இந்த ரயில்கள் இடையில் அதிக நிறுத்தங்களில் நிற்பதில்லை.

Superfast1111

 இலவச வை-பை

இலவச வை-பை

தற்போதுள்ள ரயில் நிலையங்கள் பலவற்றில் இலவச வைபை வசதிகள் இருக்கின்றன. ரயில் ஒவ்வொரு நிலையத்தை அடையும்போது மட்டுமே அந்த வைபையை பயன்படுத்தமுடியும். ஆனால் இந்த ரயிலில் நீங்கள் பயணம் செய்துகொண்டிருக்கும்போதே வைபை வசதியை பயன்படுத்தலாம். இப்போதுவரை அவுரா - புதுதில்லி ரயிலில் இந்த வை பை வசதிகள் இருக்கின்றன. கூடிய விரைவில் மற்ற வழித்தடங்களிலும் இந்த வைபை வசதிகள் வரவுள்ளன.

 தெற்கு ஆசியாவின் சாதனை ரயில்

தெற்கு ஆசியாவின் சாதனை ரயில்

தென்னாசியாவிலேயே ஒரே ரயில் இதுதான். முதல் முதலில் 120கிமீ வேகத்தில் பயணிக்கும் ரயில் தென் ஆசியாவிலேயே இது மட்டும்தான். அதன்பிறகு இதைவிட இரண்டு மடங்கு வேகத்தில் பயண வசதி கொண்ட ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டன என்பது தனிக் கதை. ஆனால் இன்றும் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், வங்கதேசத்தை ஒப்பிடுகையில் இந்தியாவில் மட்டுமே இத்தகைய ரயில்கள் இருக்கின்றன.

Debashis.jena16

இந்தியாவின் அதிவிரைவு ரயில்

இந்தியாவின் அதிவிரைவு ரயில்


இந்தியாவின் அதிவிரைவு ரயில்களின் பட்டியலில் ராஜ்தானி மூன்றாவது இடத்தில் இருக்கிறது. மும்பை ராஜ்தானி விரைவு ரயிலின் வேகம் மணிக்கு 140கிமீ ஆகும். இதன் சராசரி வேகம் 90கிமீ ஆகும். மற்ற ரயில்களின் சராசரி வேகம் 50கிமீ தூரம்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Pratik12951

 நீண்ட தூரம் பயணம் செய்யும் ரயில்

நீண்ட தூரம் பயணம் செய்யும் ரயில்

ராஜ்தானி ரயில்களிலேயே திருவனந்தபுரம் ரயில்தான் இந்தியாவிலேயே அதிக தூரம் பயணிக்கும் ரயில் என்ற பெருமையை தாங்கி ஓடிக்கொண்டு இருக்கிறது.

கோட்டா சந்திப்பிலிருந்து வதோதரா வரை ஓடும் இந்த ரயில் 527 கிமீ தூரம் எந்த இடத்திலும் நிற்காமல் பயணம் செய்கிறது.

Smeet Chowdhury

மழைக்காலங்களில் மாற்றம் பெரும் ரயில் அட்டவணை

மழைக்காலங்களில் மாற்றம் பெரும் ரயில் அட்டவணை


கொங்கன் வழித்தடத்தில் இயக்கப்படும் திருவனந்தபுரம் ரயில் மழைக்காலங்களில் இதன் அட்டவணையில் சிறிய மாற்றம் ஏற்படும்.

Youtube

நீண்ட தூரம் மற்றும் குறைந்த தூரம் பயணிக்கும் ரயில்கள்

நீண்ட தூரம் மற்றும் குறைந்த தூரம் பயணிக்கும் ரயில்கள்


ஜம்மு தாவி ராஜ்தானி ரயில்தான் மிகவும் குறைந்த தூரம் பயணிக்கும் ரயில் ஆகும். இது 582கிமீ தூரம் பயணம் செய்கிறது. மேலும் திருவனந்தபுரம் ரயில்தான் அதிக தூரம் பயணிக்கும் ராஜ்தானி ரயில். இது 3131கிமீ தூரம் பயணம் செய்கிறது.

Innotata

 அதிக ராஜ்தானி ரயில்கள்

அதிக ராஜ்தானி ரயில்கள்

மேற்கு வங்கம், ஒடிசா, அஸ்ஸாம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் அதிக ராஜ்தானி ரயில்கள் ஓடுகின்றன.
அஸ்ஸாமில் திப்ருகர் ரயில்கள் மூன்று இருக்கின்றன. அவற்றில் கான்பூர் வழியாகவும், லக்னோ வழியாகவும் இரண்டு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ஒடிசாவில் அட்ரா, பொகாரோ, சம்பல்பூர் வழியாக மூன்று ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அவுரா ரயில்கள் இரண்டும், சீல்டா ரயில் ஒன்றுமாக மொத்தம் மூன்று ராஜ்தானி ரயில்கள் மேற்கு வங்கத்தில் இயக்கப்பட்டுவருகின்றன.

Pragvansh

இரண்டு ராஜ்தானி ரயில்கள் ஓடும் இடங்கள்

இரண்டு ராஜ்தானி ரயில்கள் ஓடும் இடங்கள்


மகராஸ்டிரா மாநிலத்திலும், ஜார்கண்ட் மாநிலத்திலும் இரண்டு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

Superfast1111

 மாநிலத் தலைநகர்களை தவிர

மாநிலத் தலைநகர்களை தவிர

பிலாஸ்பூர் மற்றும் திப்ருகர் ஆகிய இரண்டு ரயில்களைத் தவிர மற்ற எல்லா ரயில்களும் மாநிலத் தலைநகருக்கே இயக்கப்படுகின்றன. சத்திஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூருக்கு பதில் பிலாஸ்பூருக்கு இயக்கப்படுகிறது இந்த ராஜ்தானி ரயில். அஸ்ஸாம் தலைநகர் கவுஹாத்திக்கு பதில் திப்ருகருக்கு இயக்கப்படுகிறது இந்த ராஜ்தானி.
wikipedia

Read more about: travel trip india rajdhani

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்