Search
  • Follow NativePlanet
Share
» » இந்த ரயிலில் ஏற நீங்கள் டிக்கெட் எடுக்க தேவையே இல்லை - இந்தியாவின் இந்த இலவச ரயில்!

இந்த ரயிலில் ஏற நீங்கள் டிக்கெட் எடுக்க தேவையே இல்லை - இந்தியாவின் இந்த இலவச ரயில்!

என்னங்க சொல்லுறீங்க? இலவச ரயில் பயணமா? ஆமாம்! உண்மை தான்! ஒரு வருடம் இரண்டு வருடம் இல்லங்க, கிட்டதட்ட 73 ஆண்டுகளாக இந்த ரயில் அதில் ஏறும் பயணிகளுக்கு இலவச பயணத்தை வழங்குகிறது. இந்த ரயிலில் ஏற நீங்கள் டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியமே இல்லை. கடந்த 73 ஆண்டுகளாக பக்ரா நங்கல் ரயிலில் பயணிகள் ஒரு பைசா கூட செலுத்தாமல் ஏறி வருகின்றனர். உலகில் இயக்கப்படும் ஒரே இலவச ரயில் இது தான்!

bhakra nangal train AI Image

இந்தியாவின், ஏன் உலகின் ஒரே இலவச ரயில்

ரயில்வே இந்தியாவில் மிகவும் வசதியான மற்றும் மலிவு பயண முறைகளில் ஒன்றாகும். கட்டணம் நீங்கள் பயணிக்கும் ரயிலையும் அது கடக்கும் தூரத்தையும் பொறுத்தது. ஆனால் நாட்டிலுள்ள ஒரு குறிப்பிட்ட ரயில், முதன்முதலில் இயக்கப்பட்ட 73 ஆண்டுகளுக்குப் பிறகும் அதன் பயணிகளுக்கு இலவச சவாரிகளை வழங்குவதை அறிந்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இது உலகின் ஒரே இலவச ரயில் ஆகும்.

73 ஆண்டுகளாக இலவச பயணம் வழங்கும் பக்ரா நங்கல்

கடந்த 73 ஆண்டுகளாக பக்ரா நங்கல் ரயிலில் பயணிகள் ஒரு பைசா கூட செலுத்தாமல் ஏறி வருகின்றனர். பக்ரா பியாஸ் மேலாண்மை ரயில்வே வாரியம் இந்த ரயிலை இயக்குகிறது, இது இமாச்சல பிரதேசம்/பஞ்சாப் எல்லையில் பக்ரா மற்றும் நங்கல் இடையே பயணிக்கிறது. இந்த ரயில் ஷிவாலிக் மலைகள் வழியாக 13 கிலோமீட்டர்கள் செல்லும்போது சட்லஜ் நதியைக் கடக்கிறது. பயணிகளுக்கு இந்த இன்பமான ரயில் பயணத்திற்கு கட்டணம் ஏதும் இல்லை.

சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பலன்

சுமார் 300 பேர் தினசரி போக்குவரத்துக்காக இதைப் பயன்படுத்துகின்றனர், மேலும் இது 25 கிராமங்களுக்கு உயிர்நாடியாக செயல்படுகிறது. இந்த 13 கிலோமீட்டர் பயணம் முக்கியமாக மாணவர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பயனடைகிறது. பக்ரா மற்றும் நங்கல் இடையேயான ரயில் பாதை 1948 இல் நிறைவடைந்து இருந்தாலும் கூட இன்று வரை இலவச பயணத்தையே வழங்கி வருகிறது. இந்த ரயிலில் ஏறும் சுற்றுலா பயணிகள் மற்றும் தினசரி பயணிகள் எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. இந்த ரயிலில் TTR இல்லை.

இன்று வரை இலவச பயணம் மட்டுமே

இந்த ரயிலின் பெட்டிகள் மிகவும் தனித்துவமானது மற்றும் கராச்சியில் தயாரிக்கப்பட்டது. கூடுதலாக, நாற்காலிகள் பிரிட்டிஷ் காலத்து ஓக் மரத்தால் செய்யப்பட்டவை. பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் (பிபிஎம்பி) ரயிலுக்கு ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 18 முதல் 20 லிட்டர் எரிபொருள் தேவைப்பட்டாலும் அதை இலவசமாக இயக்க முடிவு செய்துள்ளது. செலவுகள் காரணமாக, பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் (பிபிஎம்பி) 2011 இல் இலவச சேவையை நிறுத்துவதாகக் கருதியது. இறுதியில் அது அந்த நடவடிக்கைக்கு எதிராக வாக்குகள் பெறப்பட்டதால் இன்று வரை இந்த ரயில் இலவசமாக ஓடிக் கொண்டிருக்கிறது மக்களே!

நீங்கள் இந்தப் பகுதிக்கு சுற்றுலா சென்றால் இந்த கண்கவர் ரயிலில் ஏறி இலவச பயணம் செய்ய மறக்காதீர்கள்!

More News

    Read more about: indian railways punjab
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+