» »சென்னையில் அமைந்துள்ள சாய்பாபா கோயில்கள்

சென்னையில் அமைந்துள்ள சாய்பாபா கோயில்கள்

Written By: Udhaya

இந்த மூனு ராசிக்காரர்களுக்கும் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டுமாம்!

சென்னையில் அமைந்துள்ள மிக முக்கிய கோயில்களுள் சாய்பாபா கோயில்களும் அடங்கும். இந்த கோயில்களுக்கு சென்று வழிபட்டு வந்தால் மனதில் நினைத்த காரியம் நிறைவேறும் என்றும் கூறப்படுகிறது. இதுமாதிரி சென்னையில் எண்ணற்ற கோயில்கள் உள்ளன என்றாலும், இந்த கோயில்கள் மிகவும் சக்தி வாய்ந்தவையாக பக்தர்களால் கருதப்படுகிறது.

அம்பத்தூர் சாய்பாபா கோயில்

அம்பத்தூர் சாய்பாபா கோயில்

சென்னை அம்பத்தூரில் கேளம்பாக்கம் காலனியில் அமைந்துள்ளது ஓம் ஸ்ரீ சாய்வரா பக்தா சமஜம். இந்த சாய்பாபா கோயில் ராக்கி திரையரங்குக்கு அருகே அமைந்துள்ளது.

இந்த கோயிலில் வேண்டுதல் மிகச் சிறப்பாகும். சீரடி சாய் பாபா பக்தர்கள் தாங்கள் நினைத்த காரியம் நிறைவேற பாபாவை வேண்டிக் கொண்டு ஒன்பது வியாழக்கிழமை சாயி விரதம் இருப்பார்கள். அப்படி இருந்தால் தாங்கள் வேண்டியது கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

செங்கல்பட்டு சாய்பாபா கோயில்

செங்கல்பட்டு சாய்பாபா கோயில்


சென்னையை அடுத்த செங்கல்பட்டில், உள்ளது வல்லம். இங்கு அக்ஸயா நகரில் அமைந்துள்ளது ஸ்ரீ சீரடி சாய் பாபா மந்திர்.


சாய்பாபாவுக்கான விரதத்தை யார் வேண்டுமானாலும், எந்த வியாழக்கிழமை வேண்டுமானாலும் தொடங்கலாம். இந்த விரதம் ஆண்,பெண்,குழந்தைகள் யார் வேண்டுமானாலும் இருக்கலாம்.

சிட்லபாக்கம் சாய்பாபா கோயில்

சிட்லபாக்கம் சாய்பாபா கோயில்

சென்னை குரோம்பேட்டை அருகே அமைந்துள்ள சிட்லப்பாக்கத்தில் எம்சி நகரில் இருக்கிறது சிட்லபாக்கம் ஸ்ரீ சாய்பாபா கோயில்.

எந்த காரியதிற்காக ஆரம்பிக்கிறோமோ,அதை தூய மனதில் சாயி பாபாவை எண்ணி பிரார்தித்துக் கொள்ள வேண்டும். காலை அல்லது மாலை சாயி பாபாவின் போட்டோவிற்கு பூஜை செய்ய வேண்டும்.

 கூடுவாஞ்சேரி சாய்பாபா கோயில்

கூடுவாஞ்சேரி சாய்பாபா கோயில்

கூடுவாஞ்சேரி விஸ்வநாதபுரம் அருகே மின்வாரியத்தின் பின்புறம் அமைந்துள்ளது இந்த சாய்பாபா கோயில்.

இந்த விரதத்தை திரவ ஆகாரங்கள் உட்கொண்டு செய்யவும். அப்படி நாள் முழுவதும் செய்யமுடியாதவர்கள் ஏதாவது ஒரு வேளை உணவு அருந்தலாம். நாள் முழுவதும் பட்டினியாக இந்த விரதம் செய்யவே கூடாது.

ஈஞ்சம்பாக்கம் சாய்பாபா கோயில்

ஈஞ்சம்பாக்கம் சாய்பாபா கோயில்


சென்னை ஈஞ்சம்பாக்கம் சாய்புரம் அருகே டிரஸ்ட் அமைப்புடன் சேர்ந்து அமைந்துள்ளது இந்த சாய்பாபா கோயில்.

ஒரு தூய ஆசனத்தில் அல்லது பலகையில் மஞ்சல் துணியை விரித்து சாயி பாபா படத்தை வைத்து தூய நீரால் துடைத்து சந்தனம் குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும்.

கேளம்பாக்கம் சாய்பாபா கோயில்

கேளம்பாக்கம் சாய்பாபா கோயில்

பழைய மகாபலிபுரம் சாலையில், ரேணுகாம்பாள் நகரில் அமைந்துள்ளது இந்த கோயில்.

சாரிட்டபிள் டிரஸ்ட்டுடன் கூடிய அமைப்பாக உள்ளது. முடிந்தால் சாயிபாபாவின் கோவிலுக்குச் செல்லலாம். வீட்டிலேயே சாயி பாபாவுக்கு 9 வாரங்கள் பூஜை செய்யவும் சாயி விரத கதை, சாயி பாமாலை, சாயி பவானி இவற்றை பக்தியுடன் படிக்கவும். வெளியூர் செல்வதானாலும் இந்த விரதம் கடைபிடிக்கலாம்.

கோடம்பாக்கம் சாய்பாபா கோயில்

கோடம்பாக்கம் சாய்பாபா கோயில்

சென்னையின் மையமான கோடம்பாக்கத்தில் ரங்கராஜபுரம் முக்கிய சாலை அருகே அமைந்துள்ளது ஸ்ரீ சாய்பாபா தியான மண்டபம்.

விரதத்தின் ஒன்பது வாரங்களில் பெண்களுக்கு மாத விலக்கு அல்லது இன்ன பிற காரணங்களாலே விரதம் செய்ய முடியவில்லை எனில், அந்த வியாழக்கிழமை கணக்கில் எடுத்து கொள்ளாமல் இன்னொருவியாழக்கிழமை விரதம் இருந்து 9 வியாழக்கிழமைகள் நிறைவு செய்யவும்

மாமண்டூர் சாய்பாபா கோயில்

மாமண்டூர் சாய்பாபா கோயில்

செங்கல்பட்டு மாமண்டூர் அருகே பெப்சி கம்பெனிக்கு எதிரே அமைந்துள்ளது இந்த சாய்பாபா கோயில்.

ஒன்பதாவது வியாழக் கிழமை ஐந்து ஏழைகளுக்கு உணவு அளிக்கவும். நேராக உணவு அளிக்க முடியாதவர்கள் யார் மூலமாகவும் பணமோ,உணவுப் பொருளோ கொடுத்து ஏற்பாடு செய்யவும். இப்படி சாய்பாபா விரதங்களுக்கும் விதிமுறைகள் இருக்கின்றன.

அதிகம்பேர் படித்த கட்டுரைகள்

 1. கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு இப்படி ஒரு ரூட் இருக்கு தெரியுமா?
 2. இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் செல்வதில்லை - பக்தர்களை கோடீஸ்வரனாக்கும் கோயில்
 3. சனியின் கோரப்பார்வை! தப்பிக்க போராடுபவர்கள் தாமதிக்காமல் செல்லவேண்டிய கோயில்கள் - பாகம் 2
 4. சனியின் கோரப்பார்வை! தப்பிக்க போராடும் ராசிக்காரர்கள் உடனே செல்லவேண்டிய கோயில்கள்!
 5. அகத்தியர் மலையில் மறைந்துள்ள தமிழர்களின் மர்ம பொக்கிஷங்கள்!
 6. ராமேஸ்வரம் அழியப்போகிறதா? பதைபதைக்கும் அறிவியல் கூற்றுகள்
 7. விழி பிதுங்கி நிற்கும் விஞ்ஞானிகள் நம் நாட்டு மன்னர்களுக்கு மட்டுமே தெரிந்த திடுக்கிடும் ரகசியங்கள்
 8. ஆண்டுக்கு ஒருமுறை தங்கமாக மாறும் நந்தி! வெளியில் கசிந்த ரகசியங்கள்!
 9. உங்கள் தலையெழுத்தை தலைகீழாக மாற்றும் அதிசய கோயில்!
 10. 350 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த மர்மம், டச்சுக்காரர்களை தலைதெறிக்க ஓடவிட்ட திருச்செந்தூர் கோயில்
 11. உலகையே மலைக்க வைத்த தீர்த்தமலை மர்மங்கள்!
 12. ஆங்கிலேயர் கண்ணிலேயே விரல்விட்டு ஆட்டிய உலகின் மிக அதிக மதிப்புள்ள மரகத சிலை
Read more about: temples, travel