» »கர்நாடகாவில் மிகப் பழமைவாய்ந்த சிருங்கேரியின் சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?

கர்நாடகாவில் மிகப் பழமைவாய்ந்த சிருங்கேரியின் சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?

By: R. SUGANTHI Rajalingam

கர்நாடகவில் உள்ள சிக்மகளூர் என்ற மாவட்டத்தில் மலைப் பிரதேச நகரமாக சிருங்கேரி அமைந்துள்ளது. 8 ஆம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் பாதயாத்திரை மேற்கொள்ளும் போது இந்த சிருங்கேரி இடத்தில் தான் முதன் முதலில் தனது மடத்தை நிறுவினார். இந்த மடம் தான் சிருங்கேரி சாரதா பீடம் என்றழைக்கப்படுகிறது. இந்த அழகிய மடம் புனித நதி துங்கா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

அழகிய மலைகளின் அணிவகுப்பும், துங்காபத்திரா ஆற்றின் குளுமையும், எழில்மிகு இயற்கை அழகுடன் இருக்கும் மலைநாடு தான் இந்த சிருங்கேரி.

 சிருங்கேரி பெயர் வரக் காரணம்

சிருங்கேரி பெயர் வரக் காரணம்


இந்த சிருங்கேரி என்ற பெயர் ரிஷ்யசிருங்க கிரி என்ற பெயரிலிருந்து வந்தது. இந்த சிறிய மலை இடம் தான் முனிவர் விபாண்டகர் மற்றும் அவரது மகன் ரிஷ்யசிருங்கர் இருப்பிடமாக இருந்துள்ளது என்று ராமாயணத்தின் பாலாகாண்டத்தில் கூறப்படுகிறது.

PC: Sharada Prasad CS

 சிருங்கேரியை எப்படி அடைவது

சிருங்கேரியை எப்படி அடைவது

வான்வெளி பயணம்

மங்களூர் விமான நிலையம் சிருங்கேரி யிலிருந்து 66 கி. மீ ல் தான் அமைந்துள்ளது. இந்த விமான நிலையம் கர்நாடகவின் முக்கியமான நகரங்களுக்கு எளிதாக செல்ல உதவுகிறது.

ரயில் பயணம்

மங்களூர் ரயில் நிலையம் தான் முக்கியமான தலைமையிடமாக உள்ளது. கர்நாடகவில் உள்ள ஏராளமான சுற்றுலா தலங்களுக்கும் நாம் இங்கிருந்தே அடையலாம்.

சாலை வழிப்பயணம்

சிருங்கேரியை அடைய ஒரு சிறந்த பயணம் சாலை வழிப் பாதை ஆகும். இந்த பயணம் கர்நாடகவின் ஏராளமான எழில் மிகு நகரங்களை இணைக்கிறது.

புறப்படும் இடம் : பெங்களூர்

சேரும் இடம் :சிருங்கேரி

சுற்றுலா காலம் : வருடம் முழுவதும்

பயண வழி

பெங்களூரிலிருந்து சிருங்கேரியை அடைய 442 கி. மீ தொலைவு பயணம் மேற்கொள்ள வேண்டும். இதற்கு மூன்று விதமான வழிகள் உள்ளன

வழி 1: பெங்களூர் - நீலமங்களா - குனிகல் - ஹாசன் - பெல்லூர்-சிக்மகளூர் - சிருங்கேரி NH75

வழி 2: பெங்களூர் - நீலமங்களா - தும்குரு - ஹிரியூர் - தரிகிரி - கோப்பா - சிருங்கேரி NH 48 மற்றும் SH 24

நீங்கள் வழி 1 யை தேர்ந்தெடுத்தால் சிருங்கேரியை அடைய 6 மணி நேரம் ஆகும். தேசிய நெடுஞ்சாலை 75 வழியாக ஹாசன், பெல்லூர் மற்றும் சிக்மகளூர் வழியாக எளிதாக சிருங்கேரியை அடையலாம். 327 கி. மீ தொலைவு பயணம் மேற்கொள்ள வேண்டும்.

வழி 2 யை தேர்ந்தெடுத்தால் 7.5 மணி நேரம் ஆகும். 378 கி. மீ பயணம் மேற்கொள்ள வேண்டும். NH75 மற்றும் SH 24 பாதை வழியாக சிருங்கேரியை அடைந்து விடலாம்.

உங்கள் வார விடுமுறை நாட்களுக்கு இது ஒரு சிறந்த சுற்றுலா தலமாக அமையும். சனிக்கிழமை காலை கிளம்பினால் கூட அந்நாளை சிருங்கேரியில் கழித்து விட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை அல்லது இரவு பெங்களூரை அடைந்து விடலாம்.

நெலமங்களா மற்றும் பெல்லூர் நிறுத்தம்

நெலமங்களா மற்றும் பெல்லூர் நிறுத்தம்

பெங்களூர் போக்குவரத்து இடைஞ்சலை மனதில் கொண்டு நாம் சீக்கிரம் கிளம்பி விட்டால் எந்த வித இடையூறும் இல்லாமல் குறித்த நேரத்தில் சிருங்கேரிக்கு பறந்து போய் விடலாம். தேசிய நெடுஞ்சாலையில் பயணம் மேற்கொள்ளும் போது உங்கள் காலை உணவை முடிக்க நிறைய உணவு விடுதிகள் உள்ளன.

அப்படியே நெலமங்களாவில் நிறுத்தி சுடச்சுட சுவையான மொறு மொறுப்பான தோசை யுடன் உங்கள் காலை உணவை முடித்து விட்டு அப்படியே மதிய வேளைக்கு பெல்லூர் சென்று விடலாம்.

இந்த நெலமங்களா பயணம் கண்டிப்பாக,

அடுத்த படியாக பெல்லூர் நகரம் உங்களை வரவேற்க தயாராக இருக்கும். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க இடமாகும். இங்கே பழமை வாய்ந்த சென்னகேசவர் கோயில் உள்ளது. இந்த கோயில் ஹோய்சலா பேரரசின் கட்டடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

இந்த கோயிலின் வயது கிட்டத்தட்ட 108 வருடங்களுக்கு மேல் ஆகிறது. சோழர்களுடன் போரிட்டு வெற்றி கொண்டதன் அடையாளமாக மன்னர் விஷ்ணுவர்த்தனாவால் கட்டப்பட்டது தான் இந்த கோயிலாகும்.

PC: Sharada Prasad CS

சிருங்கேரி

சிருங்கேரி

சிருங்கேரி கோயிலுக்கென்றே சிறப்பு பெற்ற ஊராகும். கல்வியின் அதிபதி சரஸ்வதி தேவிக்காக இங்கே கோயில்கள் உள்ளன. இவர் இங்கே சாரதாம்பா என்று அழைக்கப்படுகிறார்.

இந்த சாரதாம்பா கோயில் மட்டுமில்லாமல் மற்றொரு கலை அம்சமாக சிவன் கோவிலும் இங்கே சிறப்பு பெற்று விளங்குகிறது. கடவுள் சிவன் வித்ய சங்கரா என்ற பெயரில் எழுந்தருளுகிறார்.

சாரதாம்பா கோவில் 8 ஆம் நூற்றாண்டில் ஆதி சங்கராச்சாரியாரால் கட்டப்பட்டது. அப்பொழுது ஆதிசங்கரரால் சந்தன மரக்கட்டையால் ஆன நிற்கின்ற வடிவத்தில் கடவுள் சிலை வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. தற்போது 14 ஆம் நூற்றாண்டில் இருந்து தங்கத்தால் ஆன சரஸ்வதி சிலை வைக்கப்பட்டு இன்று வரை வழிபட்டு கொண்டு வருகின்றனர்.

அதே போல் சிவன் கோவிலிலுள்ள ஸ்படிக கற்களால் ஆன மிகவும் பழமை வாய்ந்த சிவலிங்கமும் கடவுள் சிவபெருமானாலயே ஆதிசங்கரருக்கு வழங்கி அருள் புரிந்துள்ளார் என்றும் கூறுகின்றனர். இங்கே அந்த சிவ லிங்கத்திற்கு நாள்தோறும் சந்திரமூலிஸ்வர பூஜை இரவு 8.30 மணியளவில் நடத்தப்படுகிறது.

PC: Some guy 2086

வித்யா சங்கரா கோயில்

வித்யா சங்கரா கோயில்

வித்யாசங்கரா கோயில் துறவி வித்யாரண்யரால் கட்டப்பட்டது. ஹரிகரா மற்றும் புக்கா என்ற இரு சகோதர்களின் விஜயநகர பேரரசவையில் அவைப் புலவராகவும் இவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த கோயிலில் கடவுள் சிவபெருமான் வித்யாசங்கரா என்ற பெயரில் எழுந்தருளி தனது பெருமையை பறைசாற்றும் விதமாக திகழ்கிறார் . அந்தக் காலத்து கட்டடக்கலை அம்சங்கள் அனைத்தையும் இக் கோயிலில் நீங்கள் காணலாம். கட்டடக்கலை வல்லுநர்களால் கணக்கிட்டு செதுக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க கோயிலாகும்.

PC: b sarangi

சிரிமனே அருவி

சிரிமனே அருவி

அடுத்ததாக வித்யாசங்கரா கோயிலிருந்து 12 கி. மீட்டரில் சிரிமனே அருவி உள்ளது. அழகிய இந்த அருவி மேற்கு மலைத்தொடரிலிருந்து உருவாகி கொட்டுகிறது.

இந்த அருவி கிக்கா என்ற ஒரு சிறிய கிராமத்தில் காணப்படுகிறது. இங்கே நிறைய தனியார் போக்குவரத்து வசதிகள் மட்டுமே காணப்படுகின்றன.

PC: Vaikoovery

 சிருங்கேரி சாரதா பீடம்

சிருங்கேரி சாரதா பீடம்

சிருங்கேரி சாரதா மடம் ஆதிசங்கரரால் உருவாக்கப்பட்ட நான்கு மடங்களுள் ஒரு மடமாகும். மற்ற மடங்கள் பூரி , துவாரகை மற்றும் பத்ரிநாத் போன்ற இடங்களில் காணப்படுகிறது.

சாராதா மடம் ஸ்மார்தா பிராமணர்களின் கலாச்சாரத்தின் மையமாக திகழ்கிறது. இங்கே தற்போது 36 வது பீடாதிபதியாகிய ஸ்ரீ ஜகத்குரு வித்யாசங்கராச்சாரிய ஸ்ரீ பாரதி தீர்த்த ஸ்சுவாமிகளின் தலைமையில் இம்மடம் சிறப்பாக இயங்கி வருகிறது.

PC: Hvadga