Search
  • Follow NativePlanet
Share
» »பெங்களூரை விட சென்னை ஏன் எப்போதும் சூடாகவே இருக்கிறது – காரணங்கள், வெயிலிலிருந்து தப்பிக்க என்ன செய்வது?

பெங்களூரை விட சென்னை ஏன் எப்போதும் சூடாகவே இருக்கிறது – காரணங்கள், வெயிலிலிருந்து தப்பிக்க என்ன செய்வது?

சென்னையை எப்போதுமே ஒரு சூடான நகரமாகவே அனைவர்க்கும் தெரிகிறது. ஆனால் மறுபக்கம் பெங்களூரோ எப்போதுமே குளிர்ச்சியாக இருக்கிறது. வாழ்க்கைச் செலவைப் பொறுத்தவரை, பெங்களூரை விட சென்னை மலிவானது. குறிப்பாக வீடு, உணவு, போக்குவரத்து செலவுகள் என்று வரும்போது. பெங்களூரை விட சென்னையில் அவை மிகவும் குறைவு. அதில் சந்தேகமில்லை! ஆனால் வானிலை என்று வரும்போது எதனால் இந்த மாற்றம், ஏன் சென்னையில் இவ்வளவு சூடு, ஏன் பெங்களூரில் இவ்வளவு குளிர்ச்சி என தெரியுமா நமக்கு. அதே நேரத்தில் சென்னை வெயிலில் இருந்து தப்பிக்க நாம் என்ன செய்வது?

heatwavecover

இரு நகரங்களுக்குமான உயரம்

சென்னை கடல் மட்டத்திலிருந்து 6.7 மீ உயரத்தில் அமைந்துள்ளது. ஆனால் பெங்களூரோ கடல் மட்டத்திலிருந்து 920 மீ அமைந்துள்ளது. உயரம் செல்ல செல்ல வெப்பநிலை குறைந்துக் கொண்டே தான் இருக்கும். அதனால் தான் மலைப்பிரதேசங்களில் வெப்பநிலை குறைந்து குளிர்ச்சியாக காணப்படுகிறது. ஒவ்வொரு 300 அடிக்கும் வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸ் வரை குறைகிறது. பெங்களூர் சென்னையை விட அதிக உயரத்தில் இருப்பதால் தான் எப்போதுமே குளிர்ச்சியாக இருக்கிறது.

heatwave

காற்றுடன் கூடிய வலுவான வெப்பம்

கடும் வெயில் மற்றும் வங்கக்கடலில் இருந்து வரும் வெப்ப அலைகள் காரணமாக சென்னை நேரடியாக தாக்கப்படுகிறது. அதனால் தான் சென்னையில் வெப்பம் அதிகமாக காணப்படுகிறது. நீங்கள் பேருந்து, பைக், ஆட்டோ போன்றவற்றில் பயணிக்கும் போது ஒரு சூடான காற்று வேகமாக உங்கள் மீது படுவதை நீங்களே பலமுறை உணர்ந்திருப்பீர்கள். பெங்களூரில் அதே காற்று சுழற்சி காரணமாக கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் பிற பகுதிகளை நோக்கி திசை திருப்பப்படுகிறது. அதனால் வெப்பம் அங்கு குறைவாக உள்ளது.

heatwave

சென்னை ஒரு கடற்கரை நகரம்

சென்னை ஒரு கடலோர பகுதியாக இருப்பதால் பகலில் மிக விரைவாக வெப்பமடைவதோடு, இரவில் சூடு தணியவும் அதிக நேரம் பிடிக்கிறது. அதே நேரத்தில் பெங்களூர் கடலோர பகுதியாக இல்லாமல் இருப்பதோடு பல மலைவாசஸ்தலங்களுக்கு மத்தியில் இருப்பதால் எப்போதும் குளிர்ச்சியாக காணப்படுகிறது.

சூறாவளியும் ஒரு காரணம்

அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்கள் பெங்களூருக்கு அருகாமையில் சூறாவளிகளால் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் பெங்களூர் நகரம் அடிக்கடி அதிக மழையை பெறுகிறது. சென்னைக்கு வங்காள விரிகுடாவிற்கு மிக அருகே இருப்பதால் சென்னைக்கு புயல் பாதிப்புகள் அதிகம் என்று சொல்லலாம்.

heatwavecover

அதிகப்படியான பருவமழை

இந்தியாவிற்கு மழை கொடுக்கும் இரண்டு பருவ மழைகளான தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை என்ற இரண்டுமே பெங்களூருக்கு கணிசமான மழைப்பொழிவை கொடுக்கிறது. ஒன்று மே மாதத்திலும் மற்றொன்று அக்டோபரிலும் நகரத்திற்கு மழை கொடுக்கிறது. ஆனால் சென்னையோ வடகிழக்கு பருவமழையின் காரணமாகவே மழை பெறுகிறது.

heatwavecover

சுற்றியுள்ள காடுகள்

சென்னை, தமிழ்நாடு வெப்பமண்டல ஈரமான மற்றும் வறண்ட / சவன்னா காலநிலையை வறண்ட கோடையுடன் கொண்டுள்ளது, அதேசமயம் பெங்களூரு வெப்பமண்டல ஈரமான மற்றும் வறண்ட / சவன்னா காலநிலை வறண்ட குளிர்காலத்துடன் உள்ளது. சென்னையை ஒப்பிடும் போது பெங்களூருவிற்கு அருகிலுள்ள காடுகள் என்பது மிகவும் அதிகம்.

heatwavecover

சென்னையின் வெப்பத்திலிருந்து தப்பிக்க என்ன செய்வது

1. ஒரு நாளைக்கு இருவேளை குளிப்பது சூட்டை சற்று தணிக்க உதவும்.

2. இந்த சீசனில் அதிகமாக கிடைக்ககூடிய தர்பூசணி, கீர்ணிப்பழம், நுங்கு, இளநீர் ஆகியவற்றை உட்கொள்ளவும்.

3. தினமும் நாம் சாப்பிடும் இட்லி, தோசையை தவிர்த்து பழைய சோறு, கூழ் ஆகியவற்றை மோர் கலந்து உட்கொள்ளவும்.

4. கடும் வெயில் நேரமான 12-4 மணி வரை தேவையின்றி வெளியே வர வேண்டாம்.

5. கம்பளி ஆடைகளை உபயோகிக்காமல் தளர்வான காட்டன் ஆடைகளை உபயோகிக்கவும்.

6. முக்கியமாக வாரம் இருமுறை நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்கவும்.

7. எப்பொழுதும் ஏ.சி அறையிலே இல்லாமல் மாலை வேலையில் வாக்கிங் செல்லுங்கள்.

8. எல்லாவற்றிற்கும் மேலாக செடிகளை நடவும், மரங்களை வெட்டாதீர்கள். செடிகளை நடுவது நமக்கு உடனடியாக பலன் கொடுக்கா விட்டாலும், பிற்காலத்தில் மரமாக வளர்ந்து நம் சந்ததிக்கு உதவும் அல்லவா

அடிக்கின்ற வெயிலிலிருந்து நிரந்தரமாக தப்பிக்க வழிகள் எதுவும் இல்லை. ஆனால் தற்காலிமாக தப்பித்துக் கொள்ளலாம். அதே போல சென்னை வெயிலை விட டெல்லி, மும்பை, கொல்கத்தா, விசாகப்பட்டினத்தில் வெயில் மிகவும் ஜாஸ்தி!

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+