கோட்டத்தவலம், கோட்டயம்

கோட்டயத்திலிருந்து 70 கி.மீ தூரத்தில் இந்த கோட்டத்தவலம் குகை அமைந்துள்ளது. குரிசுமலாவில் உள்ள முருகன் கோயிலுக்கு அருகிலேயே இந்த அற்புதமான குகை காணப்படுகிறது.

கோட்டயத்தை சுற்றியுள்ள சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த குகையை பாறைகளில் வெட்டப்பட்டிருக்கும் படிக்கட்டுகள் வழியாக சென்றடையலாம். நாற்காலிகள் மற்றும் இருக்கைகள் போன்று குடையப்பட்டிருக்கும் பாறைச்சிற்பங்களையும் இந்த குகையில் காணலாம். அய்யப்பன், முருகன், மதுரை மீனாட்சி மற்றும் கண்ணகி ஆகியோர் உருவங்கள் இங்கு பொறிக்கப்பட்டுள்ளன.

இந்த குகையின் பின்னணியில் ஒரு கதையும் வழங்கி வருகிறது. அதாவது, மதுரை ராஜகுடும்பத்தினர் பூஞ்ஜார் நோக்கிய பயணிக்கும்போது இங்கு தங்கி ஓய்வெடுத்ததாக சொல்லப்படுகிறது.

மலையாளத்தில் ‘கோட்டா’ என்பது கோட்டையையும் ‘வலம்’ என்பது உயரமான இடத்தையும் குறிக்கும். எனவே இந்த ராஜ குகைக்கு ‘கோட்டத்தவலம்’ எனும் பெயர் வந்துள்ளது.

பசுமையான மலைகள் சுற்றிலும் உயர்ந்தோங்கி காட்சியளிப்பதால் இந்த குகைப்பகுதியின் அழகு ரசிக்கும்படியாக உள்ளது. வருடா வருடம் நூற்றுக்கணக்கான பயணிகள் இந்த குகைக்கு விஜயம் செய்கின்றனர்.

Please Wait while comments are loading...