Search
  • Follow NativePlanet
Share
» »சென்னை to பெங்களூரு வந்தே பாரத் விரைவு ரயில் – 4 மணி நேரத்தில் பெங்களூரு!

சென்னை to பெங்களூரு வந்தே பாரத் விரைவு ரயில் – 4 மணி நேரத்தில் பெங்களூரு!

இந்தியாவை கலக்கிக் கொண்டிருக்கும் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் தென்னிந்தியாவில் முதன்முறையாக சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மைசூரு வரை இந்த வாரம் புறப்பட உள்ளது. வந்தே பாரத் அதிவிரைவு ரயிலின் ஐந்தாவது பதிப்பு சென்னையில் நவம்பர் 11 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. சென்னை - பெங்களூரு - மைசூரு வழித்தடத்தில் இயக்கப்படும் இந்த ரயிலை பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பெங்களூரில் நவம்பர் 11 ஆம் தேதி கொடியசைத்து துவக்கி வைக்கிறார். இனி சென்னையிலிருந்து பெங்களூர் மற்றும் மைசூருக்கு பயணிகள் வந்தே பாரத் விரைவு ரயிலில் பயணிக்கலாம்!

75 வாரங்களில் 75 ரயில்கள்

75 வாரங்களில் 75 ரயில்கள்

மேக் இன் இந்தியா பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள், ஒரு வெற்றி கரமான முயற்சியாகும். இந்தியாவின் ஒவ்வொரு மூலையையும் அதிவேக ரயில்கள் கொண்டு இணைக்கும் வகையில், அமிர்த மஹோத்சவின் 75 வாரங்களில் இதுபோன்ற 75 வந்தே பாரத் ரயில்கள் தொடங்கப்படும் என்று பாரத பிரதமர் கூறினார்.

தென்னிந்தியாவில் முதல் முறையாக வந்தே பாரத்

தென்னிந்தியாவில் முதல் முறையாக வந்தே பாரத்

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் புது தில்லி - வாரணாசி, புது தில்லி - ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா மற்றும் காந்திநகர் மற்றும் மும்பை இடையே இயக்கப்படுகின்றன. சமீபத்தில் குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது வந்தே பாரத் சூப்பர் பாஸ்ட் ரயில்களை அறிமுகப்படுத்தப்பட்டன. இந்நிலையில் ஐந்தாவது ரயில் சென்னை - பெங்களூர் - மைசூர் இடையே தொடங்கப்படவுள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் சமீபத்தில் வெற்றி கரமாக நடந்து முடிந்ததையொட்டி நவம்பர் 11 ஆம் தேதி பெங்களூருவில் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

வெறும் ஆறரை மணி நேரத்தில் மைசூர்

வெறும் ஆறரை மணி நேரத்தில் மைசூர்

புதன்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்களும் இந்த ரயில் இயக்கப்படும். இது சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 5.50 மணிக்கு புறப்பட்டு காலை 10.25 மணிக்கு பெங்களூரு சிட்டி சந்திப்பை அடைந்து விடும். ஐந்து நிமிட ஹால்ட்டுக்குப் பிறகு மைசூர் நோக்கி புறப்படும் ரயில் மதியம் 12.30 மணிக்கு மைசூரு சந்திப்பை அடையும். மைசூரு சந்திப்பில் இருந்து மதியம் 1:05 மணிக்கு புறப்படும் ரயில் சென்னை சென்ட்ரலை இரவு 7:35 மணிக்கு வந்தடையும்.

வந்தே பாரத் விரைவு ரயிலின் சிறப்பம்சங்கள்

வந்தே பாரத் விரைவு ரயிலின் சிறப்பம்சங்கள்

உலகிலேயே மிகப்பெரிய இரயில்வே அமைப்புகளில் ஒன்றான இந்திய ரயில்வேயின் வந்தே பாரத் சூப்பர் பாஸ்ட் ரயிலில் பல மேம்படுத்தப்பட்ட வசதிகள் உள்ளன. முற்றிலும் சென்னை ICF இல் தயாரிக்கப்படும் இந்த ரயில் ஒரு சர்வதேச விமானத்திற்கு இணையான வசதிகளைக் கொண்டுள்ளது. அவை என்னென்ன என்று நீங்களே பாருங்களேன்!

v இது இஞ்சின் இல்லா ரயில் என்று உங்களுக்கு தெரியுமா? இது முழுவதும் செல்ஃப் ப்ராப்பெல்டு எனப்படும் சுய உந்துததாலே இயங்குகிறது.

v இது மணிக்கு 180 கிமீ வேகத்தில் செல்லும் ரயில், நீங்கள் நான்கு மணி நேரத்தில் பெங்களூருவை அடைந்திடலாம். இந்தியாவில் உள்ள ரயில்களிலேயே அதிவேகத்தில் செல்லக்கூடிய ரயில் இது தான்.

v மெட்ரோ ரயிலின் கதவுகளை நீங்கள் பார்த்து இருக்கீர்கள் அல்லவா! அது போல் தான் இந்த ரயில்களும் தானியங்கி கதவுகளைக் கொண்டுள்ளன, மேலும், ரயிலுக்குள் ஒரு பெட்டியிலிருந்து மற்றொரு பெட்டிக்குச் செல்லவும் தானியங்கி கதவுகள் இருக்கும்.

v 2 எக்சிகியூட்டிவ் கிளாஸ் அடங்கிய 16 குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் மொத்தமாக 1,128 பயணிகள் அமரலாம். மேலும் 360 டிகிரியில் சுழலக்கூடிய நாற்காலிகள் இருப்பது இதன் கூடுதல் சிறப்பம்சமாகும்.

v இவ்வளவு அம்சங்கள் கொண்ட ரயிலில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாமல் இருக்குமா? அவைகளும் உள்ளன. ஆகவே நீங்கள் பொருட்கள் ஏதேனும் தொலைந்து போகுமோ என்ற கவலையில்லாமல் உறங்கலாம்.

v ரயிலின் ஒவ்வொரு கம்பார்ட்மென்டிலும் மைக் பொருத்தப்பட்டுள்ளது. பயணத்தில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் உடனே நீங்கள் எஞ்சின் டிரைவரை தொடர்புக் கொள்ளலாம்.

v சாதாரண பயணிகள் மட்டுமின்றி, மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு ஏற்ற வகையில் ரயிலின் கழிவறை நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

v மேலும், ஜிபிஎஸ்-அடிப்படையிலான ஆடியோ-விஷுவல் பயணிகள் தகவல் அமைப்பு, பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக ஆன்போர்டு ஹாட்ஸ்பாட் வைஃபை, சூடான உணவுகள், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் என ஏகப்பட்ட தனித்துவமான வசதிகள் இந்த ரயிலில் உண்டு.

கட்டணங்கள்

கட்டணங்கள்

சென்னையிலிருந்து பெங்களூருவிற்கு செல்ல எகானமி வகுப்பு நாற்காலிக்கான கட்டணம் ரூ.921ல் இருந்து தொடங்குகிறது எனவும், எக்சிகியூட்டிவ் வகுப்பிற்கு ரூ.1,880 என செய்தி ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. மைசூரிலிருந்து பெங்களூருக்கு பயணிப்பவர்களுக்கு, எகானமிக்கு ரூ.368 மற்றும் எக்சிகியூட்டிவ் வகுப்பிற்கு ரூ.768 கட்டணமாக செலுத்த வேண்டும். சென்னையிலிருந்து மைசூர் செல்ல எகானமி வகுப்பு கட்டணம் ரூ. 1,755 ஆகவும், எக்சிகியூட்டிவ் வகுப்பு கட்டணம் ரூ. 3,300 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சற்றே அதிகமாக உள்ளது என நினைக்குறீர்களா! சர்வதேச தரத்தில் அனைத்து வசதிகளும் கொண்ட ரயில் ஆயிற்றே! ஒரு முறை பயணித்து தான் பார்ப்போமே!

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X