Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» ஸ்ரீரங்கப்பட்டணா

ஸ்ரீரங்கப்பட்டணா - கண்முன்னே உயிரோவியமாய் வரலாறு!

33

ஸ்ரீரங்கப்பட்டிணம் அமைந்திருக்கும் இடம் ஒன்றே போதும், வரலாற்று பின்னணி கொண்ட இந்த சுற்றுலா ஸ்தலத்தின் அருமையை விளக்குவதற்கு. காவிரி ஆற்றின் இரு கிளை ஆறுகளால் சூழப்பட்டு உருவாகியுள்ள ஒரு தீவுதான் ஸ்ரீரங்கப்பட்டிணம். மைசூருக்கு வெகு அருகில் உள்ள இந்த தீவு நகரம் சுமார் 19 ச.கி.மீ பரப்பளவைக்கொண்டுள்ளது.

 

வரலாற்று முக்கியத்துவம்

ஸ்ரீரங்கப்பட்டணா அதன் வரலாற்று பின்னணியின் காரணமாக ஒரு புகழ் பெற்ற சுற்றுலாஸ்தலமாக விளங்குகிறது. இங்குள்ள பிரசித்தமான ஷீ ரங்கநாதஸ்வாமி கோயிலின் பெயராலேயே இது அறியப்படுவது குறிப்பிடத்தக்கது.

9ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இந்த கோயில் அதன் பிற் காலங்களில்  பல்வேறு புதுப்பிப்பு அம்சங்களை கண்டுள்ளது. அதன் விளைவாக ஹொய்சள மற்றும் விஜயநகர பாணி எல்லாம் கலந்த கலையம்சங்களை தன்னுள் இந்தக் கோயில் கொண்டுள்ளது.

திப்பு சுல்தான் காலத்தில் மைசூர் ராஜ்யத்தின் தலைநகராக இது மாற்றப்பட்டபோது இதன் சிறப்பு இன்னும் கூடியது. அது மட்டுமன்றி  இந்த நகரத்தில் இந்தோ-முஸ்லிம் பாரம்பரியம் காணப்படுவதற்கு இந்த தலைநகர் அந்தஸ்தும் ஒரு காரணம் எனலாம். வரலாற்றுச்சின்னங்களான தரியா தௌலத் பாக் மற்றும் ஜமா மஸ்ஜித் போன்றவை இதற்கு சாட்சியங்களாக உள்ளன.

ஸ்ரீரங்கப்பட்டணா நகரம் மிக அழகான சில சுற்றுலாஸ்தலங்களைக் கொண்டுள்ளது. இவற்றில் ஒன்று இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய நீர்வீழ்ச்சியான சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி ஆகும்.

ஸ்ரீரங்கப்பட்டண சங்கமம் அல்லது முக்கூடல் என்று அழைக்கப்படும் காவேரி – கபினி – ஹேமாவதி ஆறுகள் கூடும் ஸ்தலமும் முக்கியமான சுற்றுலா அம்சமாக விளங்குகிறது.

ஷீரங்கப்பட்டணா பெங்களூரிலிருந்து 127 கி.மீ தூரத்திலும் மைசூரிலிருந்து 13 கி.மீ தூரத்திலும் உள்ளது. இங்கு ரயில் நிலையம் இருப்பதோடு அருகில் மைசூரில் விமான நிலையமும் உள்ளது. பெங்களூர்மைசூர் நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்திருப்பதால நல்ல சாலை வசதியையும் போக்குவரத்து வசதிகளையும் ஷீரங்கப்பட்டணா கொண்டுள்ளது.

ஸ்ரீரங்கப்பட்டணா சிறப்பு

ஸ்ரீரங்கப்பட்டணா வானிலை

சிறந்த காலநிலை ஸ்ரீரங்கப்பட்டணா

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது ஸ்ரீரங்கப்பட்டணா

  • சாலை வழியாக
    அருகிலுள்ள முக்கிய நகரங்களிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணாவுக்கு ஏராளமான பஸ் வசதிகள் உள்ளன. பயணிகள் KSRTC பேருந்துகள் அல்லது தனியார் சொகுசு (வால்வோ) பேருந்துகள் மூலம் பெங்களூரிலிருந்து இங்கு வரலாம். இன்னும் வசதி தேவை எனில் வாடகை டாக்ஸிகள் மூலம் பயணிகள் ஷீரங்கப்பட்டணாவுக்கு விஜயம் செய்யலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    14 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள மைசூர் ரயில் நிலையம் ஸ்ரீரங்கப்பட்டணாவுக்கு அருகிலுள்ள ரயில் நிலையமாகும். இந்தியாவின் பல முக்கிய நகரங்களுடன் ரயில் சேவைகளால் மைசூர் ரயில் நிலையம் இணைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து வாடகை டாக்ஸி, வேன் மற்றும் பேருந்து மூலமாக பயணிகள் ஷீரங்கப்பட்டணாவை அடையலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    மைசூர் விமான நிலையம் ஸ்ரீரங்கப்பட்டணாவுக்கு மிக அருகிலுள்ள விமான நிலையமாக 26 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இது இந்திய நகரங்களுடன் விமான சேவைகளை கொண்டுள்ளது. இது தவிர, பெங்களூர் சர்வதேச விமான நிலையம் ஸ்ரீரங்கபட்டணாவிலிருந்து 140 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து அமெரிக்க, ஆசிய, ஐரோப்பிய மற்றும் மத்தி கிழக்காசிய நாடுகளுக்கு விமான சேவைகள் உள்ளன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Mar,Wed
Check Out
12 Mar,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu