Search
  • Follow NativePlanet
Share
» »கம்பாளா - எருது பூட்டி ரேஸ் ஓட்டுவோம் வாங்க...

கம்பாளா - எருது பூட்டி ரேஸ் ஓட்டுவோம் வாங்க...

நம்ம ஊர்களில் பொங்கல் திருவிழா வந்துவிட்டாலே ரேக்ளா பந்தையங்கள், ஜல்லிக்கட்டு என கோலாகலமாக கொண்டாட்டங்கள் நடைபெறும். இதற்காகவே காளைகள் சொந்த பிள்ளைகள் போல வளர்க்கப்படும்.

அறிவியல் வளர்ச்சியின் பயனாக அதிவேக கார்களும், பைக்குகளும் வந்துவிட்டாலும் ரத்தமும் சதையுமாக மனிதனோடு மனிதனாக பழகும் காளைகள் கொண்டு நடைபெறும் போட்டிகளில் வரும் சுவாரஸ்யம் நிச்சயம் கார் - பைக் போட்டிகளில் இருக்காது. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தையங்கள் நடைபெறுவது போலவே கேரள மற்றும் கர்நாடக மாநிலங்களில் 'கம்பாளா' என்ற எருது பூட்டிய ரேஸ் பந்தையங்கள் நடத்தப்படுகின்றன.

அந்த பந்தையத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

என்ன போட்டி இது ? :

என்ன போட்டி இது ? :

'கம்பாளா' என்னும் இந்த எருது பந்தையமானது கரையோர கர்நாடாக மற்றும் கேரள மாநிலங்களில் உள்ள கிராமங்களில் அந்தந்தத கிராம தலைவர்களின் வயல்களில் நடத்தப்படும் ஒரு விளையாட்டு ஆகும்.

Photo:Neha Singh

எப்போது நடைபெறும்? :

எப்போது நடைபெறும்? :

இந்த கம்பாளா போட்டிகள் பொதுவாக நவம்பர் மாதம் முதல் மார்ச் வரை நடைபெறுகின்றன. ஒவ்வொரு வருடமும் கரையோர கர்நாடாக கிராமங்களில் 45க்கும் மேற்ப்பட்ட கம்பாளா போட்டிகள் நடைபெறுகின்றன.

Photo:Neha Singh

எப்படி நடைபெறுகிறது ? :

எப்படி நடைபெறுகிறது ? :

கம்பாளா பந்தையங்கள் பொதுவாக அளவான நீர் மற்றும் சேறு நிரம்பிய வயல்வெளிகளில் நடத்தப்படுகின்றன. இரண்டு எருதுகள் ஒன்றாக பூட்டப்பட்டு ஒரு சின்ன பலகை போன்ற ஒன்றின் மீது நின்றுகொண்டு ஒருவர் இந்த எருதுகளை ஓட்ட வேண்டும்.

Photo:Anoop Kumar

வெற்றி பெற்றால் என்ன பரிசு ? :

வெற்றி பெற்றால் என்ன பரிசு ? :

ஜல்லிக்கட்டு போட்டிகளை போலவே இந்த கமபாளா போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு தங்க சங்கிலி, வெள்ளிப்பரிசுகள் மற்றும் மாடுகள் போன்றவை வழங்கப்படுகின்றன.

Photo:Anoop Kumar

யார் இந்த போட்டிகளை நடத்துகிறார்கள் ? :

யார் இந்த போட்டிகளை நடத்துகிறார்கள் ? :

சமீப காலமாக இந்த கம்பாளா போட்டிகள் 'கம்பாளா கமிட்டி' என்பதினால் விரிவாக திட்டமிடப்பட்டு ஜல்லிக்கட்டை போன்றே முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன.

Photo:Ashwin Karanth

விதவிதமான கம்பாளா போட்டிகள் !! :

விதவிதமான கம்பாளா போட்டிகள் !! :

இந்த கம்பாளா போட்டிகள் ஹானே ஹலகே, ஹாக்க ஹிரியா, அட்ட ஹலகே என பல விதமாகவும் நடத்தப்படுகின்றன. இந்த மாதிரியான போட்டிகளில் கம்பாளா நடைபெறும் இடம் மற்றும் விதிகள் மாறுபடுக்கின்றன. இந்த போட்டிகள் வயல் வெளிகள், பெரிய வாய்க்கால்கள் போன்ற இடங்களில் தனியாகவும், அணியாகவும் கலந்துகொள்ளும் போட்டிகள் நடக்கின்றன.

Photo:Hari Prasad Nadig

பாரம்பரிய கம்பாளா :

பாரம்பரிய கம்பாளா :

பாரம்பரியமாக நடத்தப்படும் இந்த கம்பாளா போட்டிகள் பந்தையமாக இல்லாமல் கடவுளுக்கு நன்றி சொல்லும் விதமாக விளைச்சல் முடிந்த பிறகு அவர்களுடைய வயல்களை சுற்றி எருதுகளை ஓட விடுகின்றனர்.

Photo:Karunakar Rayker

பாரம்பரிய கம்பாளா :

பாரம்பரிய கம்பாளா :

இந்த பந்தையத்தில் பங்குபெறுவதற்கு முன்பாக இதில் கலந்துகொள்ளும் காளைகள் மற்றும் எருதுகள் கண்ணைக்கவரும் விதமாக அலங்கரிக்கப்படுக்கின்றன. மேலும் வயதான எருதுகள் முன்னதாகவும் அதனை தொடர்ந்து இளைய எருதுகளும் போட்டிகளில் ஈடுபடுத்தப்படுகின்றன.

Photo:Ashwin Karanth

பாரம்பரிய கம்பாளா :

பாரம்பரிய கம்பாளா :

ஜல்லிக்கட்டை போன்றே இதில் கலந்துகொள்ளும் வீரர்கள் மிகவும் வலுவுள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியம். சிறிய பலகையின் மீது நின்றபடியே இந்த காளைகளை ஒட்டி யார் குறைந்த நேரத்தில் ஒரு குறிப்பிட்ட தூரத்தை கடக்கிராரோ அவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுகிறார்.

Photo:Neha Singh

பாரம்பரிய கம்பாளா :

பாரம்பரிய கம்பாளா :

இந்த விளையாட்டிலும் விலங்குகள் துன்பப்படுத்தப்படுவதாக கூறி விலங்குகள் நல ஆர்வலரான மனேகா காந்தியால் வழக்கு தொடரப்பட்ட பின் கடுமையான கண்காணிப்பின் கீழ் இந்த போட்டிகள் நடைபெறுகின்றன. இருந்தும் ஒவ்வொரு முறையும் இந்த போட்டிகளை காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடுகின்றனர்.

Photo:Sainath K M

பாரம்பரிய கம்பாளா :

பாரம்பரிய கம்பாளா :

இந்த போட்டிகளை காண நீங்களும் ஆர்வமாக இருந்தால் மங்களூர், காசர்கோட் போன்ற இடங்களுக்கு சென்று இதனை கண்டு மகிழுங்கள்.

Photo:Prabhu B Doss

Read more about: karnataka kerala adventure sports
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X