» »மராட்டியரா? கன்னடரா? பச்சைத் தமிழரா! ரஜினியின் பூர்வீகத்தில் இத்தனை ஆச்சர்யங்கள்!

மராட்டியரா? கன்னடரா? பச்சைத் தமிழரா! ரஜினியின் பூர்வீகத்தில் இத்தனை ஆச்சர்யங்கள்!

Written By: Udhaya

சார்.. போர் வந்துடிச்சி வாங்க.... னு ரசிகர்கள்லாம் கேட்டுக்கொண்டிருக்க சென்ற ஆண்டின் கடைசி நாள் அரசியல் அறிவிப்பை அறிவித்தார் ரஜினி.

அவரோட அறிவிப்பு வருவதற்கு முன்னாடியே, பலர் தமிழகத்தை தமிழன்தான் ஆளணும். வேற யாரும் ஆளக்கூடாது. ரஜினி வெளிமாநிலத்தவர்னு பேசிக்கிட்டே இருந்தாங்க. ஒரு சமயத்துல, ரஜினி கன்னடக் காரர்னும், இன்னொரு சமயத்துல மராட்டியகாரர்னும் சொல்லிட்டு கிளம்பிய நிறைய பேருக்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயத்துல இருந்த ரஜினி தான் ஒரு பச்சை தமிழன்னு சொல்லிட்டாரு. அப்ப அவரு பொறந்தது தமிழ்நாட்டுலதானா என்கிற கேள்வி நிறைய பேருக்கு வரும். சரி அவரு பொறந்த ஊரத் தேடி ஒரு பயணம் போகலாமா?

மாவடி கடே பதர்

மாவடி கடே பதர்


ரஜினிகாந்த்தின் பூர்விக கிராமம் மாவடிகடேபதர் எனும் மராட்டிய கிராமம் ஆகும்.

மாவடி கடே பதர் எனும் கிராமம் மராட்டிய மாநிலத்தில் அமைந்துள்ளது. இது புனே அருகிலுள்ள புரந்தர் வட்டத்தைச் சேர்ந்தது. புனேயிலிருந்து 60கிமீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த இடம்.

இதன் அருகினில், மோர்கன், கொல்விஹ்ரி, சக்குர்தே, ஷிவ்ரி, காலட் முதலிய பல நகரங்கள் அமைந்துள்ளன.

மால்கர்சாகர் எனும் ஏரி இதன் அருகினில் அமைந்துள்ள குறிப்பிடத்தக்க சுற்றுலாத் தளமாகும்.

சுற்றுலாத் தளங்கள்

சுற்றுலாத் தளங்கள்

மால்கர்சாகர் நீர்நிலையிலிருந்து கார்கா எனும் ஆறு ஓடுகிறது. இது ஒரு சிறப்பான ஆறாகும். ஏன் தெரியுமா?

இந்த ஆற்றின் கரைகளில் எண்ணற்ற கோயில்கள் அமைந்துள்ளன.

நாகேஸ்வர் கோயில், மாருதி கோயில், ஜவாலர்ஜூன் கோயில், பாண்டேஸ்வர் கோயில் என நிறைய கோயில்கள் அமைந்துள்ளன.

ஜெஜ்ஜூரி

ஜெஜ்ஜூரி

பெயரே வித்தியாசமானதாக அமைந்துள்ள இந்த ஊருக்கு ஒரு சிறப்புண்டு. இது புனேவிலிருந்து ரஜினியின் பூர்வீக ஊருக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது. அந்த சிறப்பு கான்டோபா கோயில்தான்.

மார்த்தாண்ட பைரவா அல்லது மால்அரி என்ர கடவுளே இங்கு பிரதான கடவுள். இது குலதெய்வ வழிபாட்டைச் சார்ந்ததாகும். இங்கு இந்துக்கள் மட்டுமல்லாது இஸ்லாமியர்களும் வருகை தருகின்றனர் என்பது சிறப்பு.

ஒன்பதாம் நூற்றாண்டு பழமையான கோயில் இதுவாகும். இந்த கடவுளுக்கு மஞ்சள், பெல் பழ இலை மற்றும் வெங்காயம் வைத்து வழிபடுகின்றனர். இங்கு வரும் பக்தர்களுக்கு போளி எனும் இனிப்பு பண்டம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

புனேவிலிருந்து 48 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த இடம். புனே- சாஸ்வாத்-பந்தர்பூர் சாலையில் சென்றால் எளிதில் அடையலாம்.

புனே ரயில் நிலையத்திலிருந்து ஜேஜ்ஜூரி ரயில் நிலையத்துக்கு அடிக்கடி ரயில்கள் இயக்கப்படுகின்றன.

தாது மணல்

தாது மணல்


இந்த பகுதியில் அதிக அளவு லைம் மினரல் எனப்படும் தாது மணல் கிடைக்கிறது. இது மிகவும் விலையுயர்ந்ததாகும்.

உலக புகழ் பெற்ற ஷனிவர்வாடா கோட்டை இந்த இடத்தில் மணல் பெற்றுதான் எழுப்பப்பட்டுள்ளது.

1732ம் ஆண்டு புனே வை ஆண்ட மாராத்தா மன்னர் பேஸ்வா பாஜிராவ் என்பவர் இந்த கோட்டையை கட்டினார். அவர் இந்த மணலின் தன்மையை ஆராயச்சொல்லி அதை வைத்தே கோட்டை முழுவதையும் கட்டி முடித்தார்.

Ashishbagate13

ரஜினியின் பூர்வீகம் கர்நாடக மாநிலம்

ரஜினியின் பூர்வீகம் கர்நாடக மாநிலம்


ரஜினிகாந்த்தின் பூர்வீகம் மராட்டிய மாநிலமாக இருந்தாலும், அவரின் தாத்தா காலத்திலேயே கர்நாடகா( அப்போதைய மதராஸ் மாகாணம்) வந்துவிட்டனராம். ரஜினிகாந்தின் தந்தையோ பிறந்தது தமிழ்நாட்டில்தான். அதாவது கிருஷ்ணகிரி மாவட்டத்துக்குட்பட்ட கிராமத்தில். பிழைப்புத் தேடி அலைந்த ரஜினியின் தந்தை பின் கர்நாடக தலைநகர் பெங்களூரு அருகே குடிபெயர்ந்தார்.

சோமனஹல்லி

சோமனஹல்லி

கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவிலிருந்து 1 மணி நேர பயணத்தொலைவில் அமைந்துள்ளது இந்த சோமனஹல்லி.

பெங்களூருவில் வேலை செய்ய வருபவர்கள் நிறைய பேர் இந்த கிராமத்திலும் தங்கி இருக்கின்றனர்.

இது பெங்களூருவிலிருந்து வெறும் 35கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊருக்கு அருகே நிறைய சுற்றுலாத் தளங்கள் அமைந்துள்ளன.
முக்கியமாக நீர்நிலைகள், ஆறுகள், காடுகள் என இயற்கை ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்த இடங்கள் அமைந்துள்ளன.

 இன்னோவேட்டிவ் பிலிம் சிட்டி

இன்னோவேட்டிவ் பிலிம் சிட்டி

இது பெங்களூரில் அமைந்துள்ள மிகச் சிறந்த பொழுதுபோக்கு தளமாகும். இங்கு திரைப்பட படப்பிடிப்புகளும் நடைபெறுகின்றன.

இங்கு நீர் விளையாட்டுகள், டைனோ பார்க், பயமுறுத்தும் நகரம், இனோவேட்டிவ் டாக்கீஸ், மினி கோல்ஃப், கண்ணாடி மாஸே, பெட்டிங் சூ, பழங்குடி அருங்காட்சியகம், மெழுகு காட்சியகம் என நிறைய இடங்கள் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை பயனுள்ளதாக அமைகின்றன.

இந்த இடம் சோமனஹல்லியிலிருந்து வெறும் அரைமணி நேரத் தொலைவில் அமைந்துள்ளது.

தொட்டிக்கல்லு நீர்வீழ்ச்சி

தொட்டிக்கல்லு நீர்வீழ்ச்சி

கனகப்புரா சாலையில் அமைந்துள்ளது இந்த தொட்டிக்கல்லு நீர்வீழ்ச்சிப்பகுதி. பெங்களூருவின் நீர்வீழ்ச்சி இந்த பகுதி மக்களால் பாராட்டப்படுகிறது.

இதற்கு இன்னொரு பெயரும் இருக்கிறது. அதுதான் பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகள் கேள்விப்படாதது. சுவர்ணமுகி நீர்வீழ்ச்சி என்பதுதான் அதன் மறுபெயர்.

கோடையில் நீர் வரத்து இருக்காது ஆனால் இங்குள்ள முனீஸ்வர சுவாமி சன்னதி மிகவும் புகழ்பெற்றது.

இது சோமனஹல்லியிலிருந்து 9 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

Manjukirans

மகாதேஸ்வரா கோயில்

மகாதேஸ்வரா கோயில்

இதன் அருகிலேயே மிக அழகான இடங்கள் பல உள்ளன. மகாதேஸ்வரா கோயில் போன்ற ஆன்மீகத் தலங்களும் அமைந்துள்ளன. அருள்மிகு ரெணுகா தேவி கோயில், குருவாயூரப்பன் கோயில், சாந்திமாத்மா கோயில் என நிறைய இடங்கள் அருகாமையில் அமைந்துள்ளன.

Official Site

பச்சைத் தமிழர் ரஜினியின் சொந்த ஊர் எது தெரியுமா?

பச்சைத் தமிழர் ரஜினியின் சொந்த ஊர் எது தெரியுமா?

தாத்தா காலத்திலேயே குடிபெயர்ந்து தந்தை வாழ்ந்த இடம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள நாச்சிக்குப்பம் எனும் கிராமம். ரஜினி தனது தந்தை வாழ்ந்த ஊரை வைத்துத்தான் தான் ஒரு பச்சைத் தமிழன் என்கிறார். சரி நாச்சிக்குப்பம் பகுதியில் அப்படி என்னதான் இருக்கிறுது என்று பார்ப்போமா?

மூன்று மாநில எல்லைகள்

மூன்று மாநில எல்லைகள்


நாச்சிக்குப்பம் பகுதிக்கு ஒரு சிறப்பு இருக்கு. என்னன்னா இங்க, மூன்று மொழி பேசறவங்களும் இருக்கறாங்க.. இது தமிழ்நாடு, ஆந்திரம் , கர்நாடகத்தின் எல்லையாக இருக்கிறது.

இங்குள்ள சுற்றுலாத் தளங்கள்

இங்குள்ள சுற்றுலாத் தளங்கள்

இந்த பகுதியில் சுற்றுலா என்றால் அது ஆன்மீக சுற்றுலாத்தான். ஆன்மீக அரசியலைப் போல ஒரு ஆன்மீகச் சுற்றுலா சென்று வருவோமா

இங்கு வெங்கடேஸ்வரா கோயில், விநாயகர் கோயில், ஆஞ்சநேயர் கோயில், கருமாரியம்மன் கோயில், காரகுப்பம் அம்மன் கோயில் என நிறைய கோயில்கள் அமைந்துள்ளன. மேலும் இங்கிருந்து கொஞ்சம் தொலைவில் அமைந்துள்ளது பஞ்சமுக ஆஞ்சநேய கோயில்.

கெலவரப்பள்ளி அணை

கெலவரப்பள்ளி அணை

கெலவரப்பள்ளி அணை, தமிழகத்தில் உள்ள பொன்னையார் நதியின் மீது கட்டப்பட்டு இருக்கின்றது, இது 13.50 மீட்டர்கள் உயரத்திற்கு எழுப்பப்பட்டு, 480 கன அடி கொள்ளளவை கொண்டுள்ளது.

கூடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் போன்ற மாவட்டங்களுக்கு இந்த அணை நீர் பயன்பட்டு வருகிறது. கெலவரப்பள்ளியை நோக்கி செல்லும் போது பெங்களூர் பாதையில் இருந்து பிரிந்து செல்லும் பாதையில் ஓசூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் இந்த அணை அமைந்திருக்கிறது.

ஓசூரில் குடியிருப்பவர்களுக்கும், வார விடுமுறைக்கு ஓசூருக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இது விருப்பமான சுற்றுலா தலம் ஆகும். கெலவரப்பள்ளி அணையில குழந்தைகள் பூங்காவை தவிர அனைத்து வயதினருக்கும் ஏற்ற பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைய காணப்படுகின்றன.

TheZionView

ராஜாஜி நினைவுமண்டபம்

ராஜாஜி நினைவுமண்டபம்

ராஜாஜி நினைவுமண்டபம் ஓசூருக்கு அருகே இருக்கிறது. இந்தியாவின் முதல் மற்றும் கடைசி ஆளுநரான சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரியை கௌரவிக்கும் நோக்கத்தோடு தொரப்பள்ளி என்னும் கிராமத்தில் இந்த நினைவு மண்டபம் கட்டப்பட்டு இருக்கின்றது. ராஜகோபாலச்சாரி தொரப்பள்ளியில் பிறந்தவராவார். இந்த நினைவு மண்டபத்தில் ஒரு நல்ல நூலகமும், ராஜகோபாலச்சாரியின் காலத்தை சார்ந்த புகைப்படங்களும், படைப்புகளும் உடைய காட்சிக்கூடம் இருக்கிறது. சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரி இந்நாட்டிற்கு செய்த சேவையின் நினைவுபடுத்தும்படியாக ஒரு மார்பளவு சிலையும் நிறுவப்பட்டு உள்ளது. ராஜாஜி நினைவுமண்டபத்தை அடைவதற்கு ஓசூரில் இருந்து தேசிய நெடுஞ்சாலை 7ல் கிருஷ்ணகிரிக்கு நேராக செல்ல வேண்டும். பெரண்டப்பள்ளியை அடைந்த பிறகு அங்கு இருந்து வலது பக்கம் திரும்பி, தொரப்பள்ளி வரவேற்பு வளைவுக்கு செல்லவும், அங்கு இருந்து தொடர்ந்து 3 கி.மீ. தூரம் சென்றால் ராஜாஜி நினைவுமண்டபத்தை அடையலாம்.