Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவில் உள்ள மாயாஜால சுற்றுலா இடங்கள் – கனவா இல்லை நினைவா என்று யோசிப்பீர்கள்!

இந்தியாவில் உள்ள மாயாஜால சுற்றுலா இடங்கள் – கனவா இல்லை நினைவா என்று யோசிப்பீர்கள்!

உலகில் மொத்தமே ஒன்பது வகையான காலநிலைகள் தான்! அந்த ஒன்பது வகையான காலநிலைகளுக்கும் ஏற்ற இடங்கள் இந்தியாவில் உள்ளன. மழைக்காடுகள் முதல் பாலைவனம் வரை, பனிமூடிய சிகரங்கள் முதல் சிரபுஞ்சி வரை, கடற்கரைகள் முதல் பீடபூமி வரை இந்தியா பல அதிசயங்களால் நிறைந்துள்ளது. மனிதர்களால் எத்தனை எத்தனையோ கோட்டைகளும், கோவில்களும், அரண்மனைகளும், சுற்றுலாத் தலங்களும் உருவாக்கப் பட்டாலும் இந்தியாவின் இயற்கை அதிசயங்கள் ஒரு படி மேலே சென்று நம்மை வியக்க வைக்கின்றன! நாம் கனவில் இருக்கிறோமா அல்லது இது உண்மைதானா என்று உங்களை சிந்திக்க வைக்கும் இந்தியாவின் வித்தியாசமான மற்றும் அழகான சுற்றுலாத் தலங்களின் லிஸ்ட் இதோ!

 பாங்காங் ஏரி – நீல நிற அழகான ஏரி

பாங்காங் ஏரி – நீல நிற அழகான ஏரி

லடாக்கின் தலைநகரான லேயிலிருந்து 50 கிமீ தொலைவில் அமைந்துள்ள பாங்காங் ஏரி மிகப்பெரிய அழகான ஏரியாகும். 4350 மீ உயரத்தில் அமைந்துள்ள இது இந்தியாவின் மிக உயரமான ஏரிகளில் ஒன்றாகும். இந்த ஏரியில் உள்ள சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், நாளின் வெவ்வேறு நேரங்களில் நீரின் நிறம் வித்தியாசமாகத் தோன்றும். வண்ணமயமான ஏரிக்கரையில் அமர்ந்துக் கொண்டு பனி மூடிய சிகரங்களை பார்த்து ரசிப்பது, இரவில் ஸ்டார்கேசிங் செய்வது, அழகான பாதையில் பைக் ரைடு செய்வது இங்கு மிகவும் பேமஸ். ஜூன் முதல் செப்டம்பர் இடையிலான காலத்தில் தான் இங்கு செல்ல வேண்டும்.

கிரேட் ரான் ஆஃப் கட்ச் – வெள்ளை பாலைவனம்

கிரேட் ரான் ஆஃப் கட்ச் – வெள்ளை பாலைவனம்

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உப்பு சதுப்பு நிலத்தின் ஒரு பெரிய பகுதியாக முடிவில்லாத பாலைவனத்தின் மறைந்திருக்கும் அழகு நம்மை மெய் சிலிர்க்க வைக்கும். வெள்ளை உப்பு பாலைவனங்களுக்குப் பின்னால் ஆரஞ்சு நிறத்தில் சூரியன் மறைவதை பார்க்கும் போது நாம் ஏதோ வேறு உலகில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கனவு போன்ற நிலப்பரப்புகளுடன், ரான் ஆஃப் கட்ச் உலகின் மிகப்பெரிய உப்பு சதுப்பு நிலங்களில் ஒன்றாக உள்ளது.

பங்காரம் பீச் – இரவில் ஒளிரும் கடற்கரை

பங்காரம் பீச் – இரவில் ஒளிரும் கடற்கரை

இரவு நேரத்தில் கடற்கரை ஒளிர்ந்தால் எப்படி வினோதமாக இருக்கும்? சற்று யோசித்து பாருங்கள்! ஒரு வெப்பமண்டல தீவின் அனைத்து அழகுகளையும் பகலில் நீங்கள் அனுபவிக்க முடியும் என்றாலும், இரவு நேரத்தில் இந்த இடத்தின் உண்மையான அழகு முகம் வெளியே தெரிகிறது. இந்தியப் பெருங்கடலின் பளபளக்கும் தண்ணீருக்கு மத்தியில் அமைந்துள்ள பங்காரம், லட்சத்தீவுக் குழுவின் ஒரு பகுதியாக ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. பயோலுமினசென்ட் பைட்டோபிளாங்க்டன் என்ற வேதியியல் நிகழ்வினால் இந்த கடற்கரை இரவில் ஒளிர்கிறது.

வேலி ஆஃப் ஃப்ளவர்ஸ் – பூந்தோட்டம்

வேலி ஆஃப் ஃப்ளவர்ஸ் – பூந்தோட்டம்

மேற்கு இமயமலையின் அடிவாரம் உலகின் அரிதான அல்பைன் மலர்களின் தாயகமாக உள்ளது. இந்த பள்ளத்தாக்கில் பூக்கள் பூத்து குலுங்குவதை காண கண் கோடி வேண்டும் என்று தான் சொல்ல வேண்டும். உலகெங்கிலும் உள்ள புகைப்படக் கலைஞர்கள் இந்த அழகான இடத்தை புகைப்படம் எடுக்கக வந்து செல்கின்றனர். இமயமலை சாரலில் பள்ளத்தாக்குகளுக்கு நடுவே பூந்தோட்டகளை பார்க்க சீசன் நேரத்தில் இங்கு வர வேண்டும்.

சந்திர டால் – நிலா வடிவ ஏரி

சந்திர டால் – நிலா வடிவ ஏரி

சந்திர டால், அல்லது சந்திரனின் ஏரி என்றழைக்கப்படும் இந்த ஏரி அதன் பிறை வடிவத்தின் காரணமாகவும், பார்ப்பதற்கு சந்திரன் போல அழகாக இருப்பதாலும் இதற்கு இப்பெயர் வந்தது என்று கூறுகின்றனர். 4300 மீட்டர் உயரத்தில் இமயமலையில் அமைந்துள்ள இந்த ஏரி, அதன் படிகத் தெளிவான தோற்றத்திற்காகவும், சுற்றி இருக்கும் அழகிய மலை முகடுகளுக்காகவும் அறியப்படுகிறது. நீங்கள் முகாமிடுவதில் ஆர்வமாக இருந்தால், இந்த இடம் அதற்கு சரியான ஸ்பாட்டாக இருக்கும்.

இந்திரா காந்தி நினைவு துலிப் தோட்டம் – இந்தியாவின் நெதர்லாந்து

இந்திரா காந்தி நினைவு துலிப் தோட்டம் – இந்தியாவின் நெதர்லாந்து

12 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் ஸ்ரீநகரில் உள்ள அழகிய மற்றும் உலகப் புகழ்பெற்ற தால் ஏரியை ஒட்டி அமைந்துள்ள துலிப் தோட்டம் காஷ்மீரின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். 600 அடி உயரத்தில் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இரண்டு மில்லியன் டூலிப் மலர்களைப் பார்க்க விரும்பினால், ஆசியாவின் மிகப்பெரிய துலிப் தோட்டமான இந்திரா காந்தி நினைவு துலிப் தோட்டத்திற்குச் செல்ல வேண்டும்.

குல்மார்க் – பனியால் போர்த்தப்பட்ட பகுதி

குல்மார்க் – பனியால் போர்த்தப்பட்ட பகுதி

கடல் மட்டத்திலிருந்து 2730 மீ உயரத்தில் ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள குல்மார்க் பனி மூடிய உயரமான இமயமலைகள், பூக்களின் புல்வெளிகள், ஆழமான பள்ளத்தாக்குகள், பசுமையான காடுகள் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. சீசன் காலத்தில் இந்த முழு பகுதியும் வெள்ளி போன்ற பனிப் போர்வையால் போர்த்தப்படுவதை நீங்கள் கண்டு ரசிக்கலாம். இயற்கை அழகுக்காக அறியப்பட்ட குல்மார்க், பல்வேறு பாலிவுட் படங்களின் படப்பிடிப்புக்கு பிரபலமான இடமாகவும் உள்ளது.

லோக்டாக் ஏரி – மிதக்கும் தீவுகள்

லோக்டாக் ஏரி – மிதக்கும் தீவுகள்

லோக்டாக் ஏரியும், செந்திரா தீவும் நாட்டில் வேறு எங்கும் இல்லாத அழகின் கலவையை வழங்குகின்றன. அழகிய நீர், படகுப் பாதைகளின் தளம், சுற்றுப்புறத்தின் பசுமை மற்றும் செம்மஞ்சள் நிற சூரிய அஸ்தமனம், மிதக்கும் தீவுகள் என இந்த இடமே உங்களுக்கு ஒரு கனவு போல தான் தோன்றும்.

இந்தியாவின் இந்த அழகிய சுற்றுலாத்தலங்களுக்கு நீங்கள் எப்போது செல்லப் போகிறீர்கள்?

More News

    Read more about: india
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+