Search
  • Follow NativePlanet
Share
» »இனி சென்னை to பெங்களூரு பயண நேரம் வெறும் 2 மணி நேரம் தான்!

இனி சென்னை to பெங்களூரு பயண நேரம் வெறும் 2 மணி நேரம் தான்!

சென்னையிலிருந்து பெங்களூருவிற்கும், பெங்களூருவில் இருந்து சென்னைக்கும் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வேலை, கல்வி, சுற்றுலா நிமித்தமாக பிரயாணம் செய்கின்றனர். இரண்டு ஊர்களுக்கும் இடையே இருக்கும் இடைப்பட்ட தூரத்தைக் கடக்க ரயில் என்றால் அதிகபட்சம் 5 மணி நேரமும், பேருந்து என்றால் அதிகபட்சம் 7 மணி நேரமும் ஆகிறது. ஆனால் இனி அப்படி ஆக போவது இல்லை! ஆம்! சென்னையிலிருந்து பெங்களூருவை 2 மணி நேரத்தில் அடையும் வகையில் புதிய அரை அதிவேகப் பாதையை தொடங்க தெற்கு ரயில்வே அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்தப் பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்ப்படுகிறது, விரைவில் நீங்கள் இந்தப் பாதையில் பயணித்து வெறும் இரண்டு மணி நேரத்தில் பெங்களூருவை அடைந்திடலாம்!

chennaitobangaloreinjust2hrs

சென்னை-பெங்களூரு வெறும் 2 மணி நேரத்தில் பயணம்

தென்னிந்தியாவின் மிக முக்கிய நகரங்களான சென்னையும், பெங்களூருவும் இரு நகரங்களுக்கும் இடையே தினமும் அதிகப்படியான பயணிகளை கையாள்கிறது. சென்னை மற்றும் பெங்களூருவிற்கு இடையே புதிய அரை-உயர் அகல பாதை உருவாக்கப்பட்டவுடன் பெங்களூருவில் இருந்து சென்னைக்கான பயண நேரம் 2 மணிநேரமாக குறைக்கப்படும்.

மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ரயில்

இரண்டு நகரங்களுக்கு இடையே ஒரு புதிய அரை-உயர் ரயில் சேவை அகல ரயில் பாதையை சில மாதங்களில் தொடங்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது, இது மணிக்கு அதிகபட்சமாக 200 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படும். புதிய ரயில் சேவையானது 16 பெட்டிகள் மற்றும் 2 எக்சிகியூட்டிவ்-கிளாஸ் பெட்டிகள் கொண்ட முழு முன்பதிவு ரயிலாக இருக்கும். பெங்களூரு மற்றும் சென்னை இடையிலான பயண நேரம் 2 மணி 15 நிமிடங்களாக மாறிவிடும் என்பது கூடுதல் மகிழ்ச்சியான செய்தியாகும்

8.3 கோடி செலவில் புதிய அரை அதிவேக வழித்தடம்

பெங்களூருவில் உள்ள பைப்பனஹள்ளி மற்றும் சென்னை சென்ட்ரல் இடையே சுமார் 350 கிமீ நீளமுள்ள பகுதியை உள்ளடக்கும் இந்த கணக்கெடுப்புக்கு ரயில்வே அமைச்சகம் ரூ.8.3 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. 200 கிமீ வேகத்தில் ஓடும் ரயில்களைக் கையாளும் வகையில் பாதையை மேம்படுத்த தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. மேம்படுத்தும் பணி இந்த ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

chennaitobangaloreinjust2hrs

இந்தியாவின் அதிவேக ரயில்களில் ஒன்றாக மாறும்

புதிய ரயில் சேவை தொடங்கப்பட்ட பிறகு பெங்களூரு-சென்னை வழித்தடமானது இந்தியாவின் அதிவேக ரயில்களில் ஒன்றாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மணிக்கு சராசரியாக 81 கிமீ வேகத்தில் பயணிக்கும் வந்தே பாரத் விரைவு ரயில், பெங்களூரு-சென்னை வழித்தடத்தில் மிக வேகமான ரயிலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றிகரமான ரயில்வே மண்டலமாக உருவெடுத்த தென்னக ரயில்வே

தென்னக இரயில்வே இந்திய இரயில்வேயின் 19 மண்டலங்களில் ஒன்றாகும் மற்றும் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நிறுவப்பட்ட 19 இந்திய ரயில்வே மண்டலங்களில் இது முதன்மையானது. இந்திய ரயில்வே ஏற்கனவே உள்ள ரயில்வே மண்டலங்களை மறுசீரமைத்து, 2002 மற்றும் 2003 க்கு இடையில் புதிய மண்டலங்களை நிறுவிய பிறகு, சில கேஜ் மாற்றும் திட்டங்களை முடித்து புதிய பாதைகளை நிறுவிய பிறகு தெற்கு ரயில்வே நான்காவது பெரிய மண்டலமாக உருவெடுத்து, இன்று வரை வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

chennaitobangaloreinjust2hrs

மிகவும் தூய்மையான ரயில்வே மண்டலம்

இந்த நெட்வொர்க் ஆந்திரா மற்றும் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் சிறிய பகுதிகளை உள்ளடக்கியது. ஒவ்வொரு ஆண்டும், இந்த நெட்வொர்க் 50 கோடிக்கும் அதிகமான பயணிகளைக் கொண்டு செல்கிறது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு புதிதாக அங்கீகரிக்கப்பட்ட ரயில்வே திட்டத்தில் அந்தமான் மற்றும் நிக்கோபார் பகுதிகளும் அடங்கும். தெற்கு ரயில்வேயின் ரயில்கள் இந்திய ரயில்வேயில் மிகவும் தூய்மையான மற்றும் சிறந்த முறையில் பராமரிக்கப்படும் ரயில்களாகக் கருதப்படுகின்றன.

சென்னை-புதுச்சேரி இடையே புதிய வழித்தடம்

அதோடு மட்டுமில்லாமல் சென்னை-மகாபலிபுரம்-புதுச்சேரி-கடலூர் இடையே புதிய வழித்தடமும், புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் சென்று திண்டிவனத்தை அடைவதற்கு அதிக நேரம் எடுக்கிறது என்பதால் புதுச்சேரி-திண்டிவனம் இடையே புதிய வழித்தடமும் அமைக்க தென்னக ரயில்வே முடிவெடுத்துள்ளது.

More News

Read more about: indian railways irctc
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+