Search
  • Follow NativePlanet
Share

காலடி - ஆதிசங்கரர் உதித்த புண்ணிய பூமி!

20

கேரள மாநிலம் எர்ணாக்குளம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் காலடி என்ற அழகிய கிராமம், ஆதிசங்கரரின் பிறப்பிடமாக புகழ்பெற்று திகழ்ந்து வருகிறது. இந்த கிராமத்தில் 1910-ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஆதிசங்கரர் கோயிலுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், புனித யாத்ரீகர்களும் வந்து செல்கின்றனர். சாசலம் என்று முன்னர் அழைக்கப்பட்ட காலடி கிராமம் உருவாகி நூறாண்டுகள் ஆனதை தொடர்ந்து சமீபத்தில்தான் 2010-ஆம் ஆண்டு நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.  

சுவாரசியமான புராணக் கதை!

காலடி கிராமத்தில் ஆதிசங்கரர் மற்றும் அவருடைய  அன்னையை குறித்து சுவாரசியமான புராணக் கதை ஒன்று உள்ளது. அதாவது ஒருமுறை 'பூர்ணா' என்று முன்னர் அழைக்கப்பட்ட பெரியார் நதியில் நீராடிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த ஆதிசங்கரரின் தாயார் வழியிலேயே மயங்கி விழுந்து விட்டார்.

உடனே செய்வதறியாது தவித்த ஆதிசங்கரர் கிருஷ்ணரை வேண்டிக் கொண்டார். அப்போது கிருஷ்ணர் ஆதிசங்கரரிடம், 'நீ கால் வைத்த இடத்தில் ஒரு நதி பாயும்' என்றார். இதன் காரணமாக ஆதிசங்கரரின் தோட்டத்தின் அருகிலிருந்து நதி ஒன்று பாயத்தொடங்கியதாக புராணம் கூறுகிறது.

அதன்பிறகு ஆதிசங்கரர் கிருஷ்ணருக்காக சிறிய கோயில் ஒன்றை கட்டி அங்கு அவருடைய புகழ்பெற்ற அச்சுதாஷ்டகத்தை பாராயணம் செய்யத் தொடங்கினார்.

காலடி கிராமம் எண்ணிலடங்கா கோயில்கள் மற்றும் ஆஸ்ரமங்களுக்காக மிகவும் பிரசித்தமாக அறியப்படுகிறது. அதிலும் குறிப்பாக ராமகிருஷ்ண ஆஷ்ரமம், கல்லில் தேவி கோயில், சிருங்கேரி மடம், மஹாதேவா கோயில், வாமனமூர்த்தி கோயில், குழுப்பில்காவ் ஜலதுர்கா கோயில் போன்ற இடங்கள் நீங்கள் காலடி கிராமத்துக்கு சுற்றுலா வரும் போது கண்டிப்பாக பார்க்க வேண்டிவை.

காலடி சிறப்பு

காலடி வானிலை

சிறந்த காலநிலை காலடி

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது காலடி

  • சாலை வழியாக
    காலடி கிராமத்துக்கு கேரளாவின் அனைத்து நகரங்களிலிருந்தும் எண்ணற்ற அரசு மற்றும் தனியார் சொகுப் பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    காலடி கிராமத்திலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் ஆலுவா ரயில் நிலையம் அமைந்திருக்கிறது. இந்த ரயில் நிலையம் பெங்களூர், சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களுடன் நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    காலடி கிராமத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் கொச்சி விமான நிலையம் அமைந்திருக்கிறது. இந்த விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கும், இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் தினமும் எண்ணற்ற விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனவே பயணிகள் இந்த விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த பிறகு வாடகை கார்கள் மூலம் சுலபமாக காலடி கிராமத்தை அடையலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Jul,Wed
Return On
30 Jul,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Jul,Wed
Check Out
30 Jul,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Jul,Wed
Return On
30 Jul,Thu