திருவெற்பு கோயில், கோட்டயம்

திருவெற்பு கோயில் என்றழைக்கப்படும் இந்த கோயில் கேரளாவிலுள்ள முக்கியமான கோயில்களில் ஒன்றாகும். கோட்டயத்திலிருந்து 7 கி.மீ தூரத்தில் மீனாச்சில் ஆற்றின் கரையில் இந்த கோயில் வீற்றுள்ளது.

1500 வருடங்கள் பழமை வாய்ந்ததாக கருதப்படும் இக்கோயிலைச்சுற்றி பலவிதமான புராணக்கதைகள் பிணைந்துள்ளன. இவை யாவும் இக்கோயிலுள்ள கிருஷ்ணர் சிலை கண்டெடுக்கப்பட்டது பற்றி கூறுகின்றன.

ஒரு உருளியில் வைக்கப்பட்டிருந்ததாக நம்பப்படும் இந்த கோயில் சிலைக்கு நான்கு கைகள் உள்ளன. பலவித சிறப்பம்சங்களை கொண்டுள்ள இந்த கோயிலில் வித்தியாசமாக தயாரிக்கப்படும் பாயாச நைவேத்தியம் முதல் விசேஷமாகும். இரண்டாவதாக, கோயிலின் அர்ச்சகருக்கு கோயில் சாவியுடன் கூடவே ஒரு கோடரியும் கொடுக்கப்படுகிறது.

ஒருவேளை கோயில் கதவை திறக்க முடியாமற் போனால் கதவை உடைத்து திறப்பதற்காக இந்த கோடரி என்று சொல்லப்படுகிறது (கோடரி பரசுராமரின் ஆயுதம் என்பதும் குறிப்பிடத்தக்கது).

மூன்றாவது, கிரகணத்தின்போது இந்தக்கோயில் திறந்தே வைக்கப்படுவதாகும். மேலும், பூதநாதர் சன்னதியும் இடம்பெற்றுள்ள இந்த திருவெற்பு கோயில் ஸ்தலத்தில் கணபதி, சுப்ரமண்யர், சிவன், பகவதி மற்றும் யக்ஷி ஆகிய சிலைகளையும் பக்தர்கள் தரிசிக்கலாம்.

Please Wait while comments are loading...