Search
  • Follow NativePlanet
Share

பிராக்பூர் – அழகனைத்தும் குவிந்துள்ள கடவுளின் புண்ணிய பூமி!

20

புதிய காற்றின் சுகந்தம், இயற்கை தன் அழகைக் காட்ட இன்னும் நமக்காக காத்துகொண்டிருக்கும் இடம் என்று பிராக்பூர் சுற்றுலா வருவதற்கு அதன் இயற்கை எழிலே ஒரு தூண்டுகோலாக நமக்கு இருக்கும். தினசரி பணிகளுக்கிடையே, நாகரீகமான வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்கும் உங்களுக்கு, புத்துணர்ச்சியை தரும் இவ்விடம், ஒட்டுமொத்த அழகையும் குத்தகைக்கு எடுத்துக்கொண்ட இடமாக உள்ளது என்றால் அது மிகையில்லை. உங்கள் பயணத்துக்கு தேவையானவற்றை எடுத்துக்கொண்டு, பிராக்பூருக்கு கிளம்புவதற்கு தயாராக இருங்கள். நீங்கள் செல்ல விரும்பும் இடங்களுள் முதன்மையானதாக இவ்விடம் இருக்கப்போகிறது.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 1800 அடி உயரத்தில் அமைந்துள்ள பிராக்பூர், இமாச்சல பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்திலுள்ள, முக்கிய சுற்றுலாப் பகுதிகளில் ஒன்றாகும்.

பிராக்பூர் 1997 ல் ஹிமாச்சல பிரதேச அரசால் புராதன கிராமமாக அறிவிக்கப்பட்டதோடு, 2002 ஆம் ஆண்டில் பிராக்பூர் மற்றும் அதன் இரட்டை கிராமமாக கருதப்படும் கர்லி இரண்டும் புராதன பிராந்தியங்களாகவும் பிரகடனபடுத்தப்பட்டன. வரலாற்று மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள் இங்கு இருப்பதால், இவ்வாறு பாரம்பரியம் மிக்க கிராமமாக இவ்விடம் அறிவிக்கப்பட்டது.

பிராக்பூர் கிராமத்தின் மத்தியில் அமைந்திருக்கும் தால் குளம் கிராமத்தின் கவர்ச்சி அம்சமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. தால் அருகே அமைந்துள்ள ராதா கிருஷ்ணா மந்திர், நெஹர் பவன் மற்றும் நவுன், பாரம்பரிய கட்டமைப்புகளுக்கு பெயர் போனவை.

100-க்கும் மேற்பட்ட ஆண்டுகள் பழமை கொண்ட ஒரு பண்டைய கட்டிடமான பழைய புடைல் நிவாஸ், ஏராளமான சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது. பிராக்பூரின் மற்றொரு கவர்ந்திழுக்கும் அம்சமான ஜட்ஜஸ் கோர்ட், கட்டிடக்கலையில் இந்தோ ஐரோப்பிய பாணிக்கு மிகச் சிறந்த உதாரணமாக திகழ்ந்து வருகிறது.

இவை தவிர பஜ்ரேஸ்வரி,  ஜுவாலாமுஹி, மற்றும் சின்த்புர்னி போன்ற ஒரு சில புகழ்பெற்ற கோயில்கள் அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்களை ஈர்க்கும் பகுதிகளாக உள்ளன.

வட துருவத்திலிருந்து தென் துருவத்திற்கு வரும் சூரியனின் இயக்கத்தை கொண்டாடும் விதமாக லோஹ்ரி என்ற பண்டிகை இங்கு கொண்டாடப்படுகிறது. இது இந்த கிராமத்தில், ஒரு பிரபலமான திருவிழாவாக, ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா பயணிகளை ஈர்த்திழுக்கிறது. செப்டம்பர் மாதம் பார்வையாளர்களை ஒரு பெரும் எண்ணிக்கையில், கொண்டு வரும் மற்றொரு விழாவாக, மல்யுத்த விழா இருக்கிறது.

பிராக்பூரை விமானம், ரயில் மற்றும் சாலை வழியாக எளிதாக அடையலாம். பிராக்பூருக்கென தனி விமான தளம் இல்லாததால், அதன் அருகில் உள்ள சிம்லாவிலுள்ள விமான நிலையத்திலிருந்து இவ்விடத்தை அடைய முடியும்.

மேலும் ஜுப்பைர்ஹட்டி விமான நிலையம் என்று அழைக்கப்படும் சிம்லா விமான நிலையம், இந்த பாரம்பரிய கிராமத்திலிருந்து 203 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த விமான நிலையம் தில்லி, மும்பை மற்றும் கொல்கத்தா போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்களோடு இணைக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் இருந்து டாக்சி மற்றும் வாடகை வண்டி சேவைகளை பயணிகள் எளிதாகப் பெற முடியும். பிராக்பூரிலிருந்து  67 கிலோமீட்டர் தொலைவில் உணா ரயில் நிலையம் அமைந்திருக்கிறது.

இந்த உணா ரயில் நிலையம் இந்தியாவின் மற்ற பகுதிகளோடு நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது. சாலை வழியாக பயணம் செய்ய விரும்பும் பயணிகள், சண்டிகர் மற்றும் பதான்கோட்டிலிருந்து பேருந்துகள் மூலம் எளிதாக பிராக்பூர்  கிராமத்தை அடைய முடியும். அதேபோல 173 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அமிர்தசரஸில் இருந்து எண்ணற்ற பேருந்துகள் பிராக்பூருக்கு இயக்கப்படுகின்றன.

பிரக்பூரில் ஆண்டு முழுவதும் மிதமான வெப்பநிலையே நிலவுகிறது. இதன் அருகாமை பகுதிகளோடு ஒப்பிடுகையில் கோடை காலத்தில் பிரக்பூரின் வானிலை மிதமானதாக இருக்கிறது. கோடை காலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாகவும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகிறது.

பிராக்பூரின் மழைக் காலங்களில் அதிக அளவில் மழைப் பொழிவு இருக்கும். பிரக்பூரின் குளிர்கால வெப்பநிலை குறைந்த அளவு 16 டிகிரியாகவும், அதிகபட்சமாக 25 டிகிரியாகவும் பதிவாகும்.

பிராக்பூர் சிறப்பு

பிராக்பூர் வானிலை

சிறந்த காலநிலை பிராக்பூர்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது பிராக்பூர்

  • சாலை வழியாக
    சாலை வழியாக பயணம் செய்ய விரும்பும் பயணிகள், சண்டிகர் மற்றும் பதான்கோட்டிலிருந்து பேருந்துகள் மூலம் எளிதாக பிராக்பூர் கிராமத்தை அடைய முடியும். அதேபோல 173 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அமிர்தசரஸில் இருந்து எண்ணற்ற பேருந்துகள் பிராக்பூருக்கு இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    பிராக்பூரிலிருந்து 67 கிலோமீட்டர் தொலைவில் உணா ரயில் நிலையம் அமைந்திருக்கிறது. இந்த உணா ரயில் நிலையம் இந்தியாவின் மற்ற பகுதிகளோடு நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    சிம்லா நகரில் அமைந்துள்ள ஜுப்பைர்ஹட்டி விமான நிலையம், பிராக்பூரிலிருந்து 203 கி.மீ. தொலைவில் உள்ளது. இதுவே பிராக்பூரின் அருகாமை விமான நிலையமாக அறியப்படுகிறது. இந்த விமான நிலையம் தில்லி, மும்பை, கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்களோடு இணைக்கப்பட்டுள்ளது. பிராக்பூர் செல்ல டாக்சிகள் மற்றும் வாடகை வண்டிகள் விமான நிலையத்திற்கு வெளியே இருந்து கிடைக்கும்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed