» »டாப் கதாநாயகர்களின் பிறந்த இடங்கள்!

டாப் கதாநாயகர்களின் பிறந்த இடங்கள்!

Posted By: Staff

இந்திய சினிமா சமீபத்தில்தான் தனது நூற்றாண்டை கொண்டாடி மகிழ்ந்தது. அந்த சினிமாவை தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கும் இயக்குனர்களை போலவே கதாநாயகர்களுக்கும் இதில் முக்கிய பங்கு உண்டு.

அதிலும் சில கதாநாயகர்கள் எங்கோ பிறந்திருந்தாலும் இந்தியா முழுக்க இன்று புகழ்பெற்று திகழ்ந்து வருகின்றனர். அப்படிப்பட்ட டாப் கதாநாயகர்கள் எங்கு பிறந்தார்கள் என்று தெரிந்துகொள்வதில் எல்லோருக்கும் பொதுவாக ஒரு ஆர்வம் இருக்கும். ஆரம்பகாலத்தில் கமல்ஹாசன் மலையாளி என்றும், அஜித்குமார் தெலுங்கர் என்றும் பேசப்பட்டது. ரஜினிகாந்த் தமிழர் என்றும் கூறப்பட்டது. இது எல்லாம் எப்படி தெரியுமா. அதற்கு நீங்கள் அவர்கள் பிறந்த இடத்தைப் பற்றி தெரிந்துகொள்ளவேண்டும்.

(திகிலூட்டும் குகைகள் குறித்து படிக்க இங்கே சொடுக்குங்கள்)

 அந்த வகையில் இந்தியாவின் மிகவும் பிரபலமான சில திரைப்பட கதாநாயகர்களின் பிறந்த ஊரை இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

ரஜினிகாந்த், பெங்களூர்

ரஜினிகாந்த், பெங்களூர்

1950-ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி குடும்பத்தின் கடைசி பிள்ளையாக பெங்களூர் நகரில் பிறந்தார் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவருக்கு அவருடைய பெற்றோர்கள் இட்ட பெயர் சிவாஜி ராவ் கேக்வாட் என்பதாகும்.

பெங்களூரின் புகழ்���ெற்ற சுற்றுலாத் தலங்கள்

கமல்ஹாசன், பரமக்குடி

கமல்ஹாசன், பரமக்குடி

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் நவம்பர் 7-ஆம் தேதி, இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிறந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை போலவே கமல்ஹாசனும் தன் குடும்பத்தில் கடைசி குழந்தையாவார்.

அமிதாப்பச்சன், அலஹாபாத்

அமிதாப்பச்சன், அலஹாபாத்

இந்தியா தவிர உலகின் மற்ற நாடுகளிலும் ரசிகர் மன்றங்களை பெற்ற முதல் இந்தியர் போன்ற எண்ணற்ற பெருமைகளுக்கு சொந்தக்காரரான இந்தி திரையுலகின் முடிசூடா மன்னர் அமிதாப்பச்சன் உத்தரப்பிரதேச மாநிலத்தின் அலஹாபாத் நகரில் அக்டோபர் 11, 1942-ஆம் ஆண்டு பிறந்தார்.

அலஹாபாத்தின் புகழ���பெற்ற சுற்றுலாத் தலங்கள்

ஷாரூக் கான், புது டெல்லி

ஷாரூக் கான், புது டெல்லி

"பாலிவுட்டின் பாட்ஷா" மற்றும் "கிங் கான்" என்று செல்லமாக அழைக்கப்படும் இந்தி நடிகர் ஷாரூக் கான் நவம்பர் 2, 1965-ஆம் ஆண்டு புது டெல்லியில் பிறந்தவராவார்.

டெல்லியின் புகழ்ப���ற்ற சுற்றுலாத் தலங்கள்

அஜித் குமார், செகந்தராபாத்

அஜித் குமார், செகந்தராபாத்

நடிப்பு, கார் ரேசிங், பைக் ரேசிங் எல்லாத்தையும் ஒரு கை பாத்த நம் தல அஜித் குமார் எங்க பொறந்தாரு தெரியுமா?...1971-ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி ஹைதராபாத்தின் இரெட்டை நகரமாக கருதப்படும் செகந்தராபாத்த்தில்தான் நம்ம தல பொறந்தார்.

ஹைதராபாத்தின் புக���்பெற்ற சுற்றுலாத் தலங்கள்

விஜய், சென்னை

விஜய், சென்னை

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இயக்குனர் S.A. சந்திரசேகர் மற்றும் பாடகர் ஷோபா அவர்களுக்கும் மகனாக ஜூன் 22, 1974-ஆம் ஆண்டு பிறந்தார் நம்ம இளையதளபதி விஜய் அவர்கள்.

சென்னையின் புகழ்ப���ற்ற சுற்றுலாத் தலங்கள்

சூர்யா, கோயம்புத்தூர்

சூர்யா, கோயம்புத்தூர்

நம்ம சூர்யா எங்க பொறந்தாருன்னு தெரியுங்களா?...அட லொள்ளுக்கு பேர்போன நம்ம கோயம்புத்தூர்லதாங்க!...ஜூலை 23, 1975-ஆம் ஆண்டு பிறந்த சூர்யா அவர்களுக்கு அவர் தந்தை சிவக்குமார் இட்ட பெயர் சரவணன்.

கோயம்புத்தூரின் ப���கழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள்

மோஹன்லால், பத்தனம்திட்டா

மோஹன்லால், பத்தனம்திட்டா

நிங்களுக்கு ஒரு காரியம் அறியுமோ?...என்னங்க புரியலையா?...உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா நம்ம சேட்டன் மோஹன்லால் பொறந்தது கேரளாவின் சிறிய மாவட்டமான பத்தனம்திட்டாவில்.

பத்தனம்திட்டாவின�� புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள்

மம்மூட்டி, கோட்டயம்

மம்மூட்டி, கோட்டயம்

தளபதி படத்தில் சூப்பர் ஸ்டாரின் நண்பனாக நடித்தது மட்டுமல்லாமல் நிஜ வாழ்விலும் சூப்பர் ஸ்டாருக்கு நல்ல நண்பராக இருந்து வருபவர் மம்மூட்டி. இவர் செப்டம்பர் 7, 1951-ஆம் ஆண்டு கோட்டயம் மாவட்டத்தில் உள்ள செம்பு எனும் கிராமத்தில் பிறந்தராவார்.

கோட்டயத்தின் புகழ���பெற்ற சுற்றுலாத் தலங்கள்

சல்மான் கான், இந்தூர்

சல்மான் கான், இந்தூர்

தற்போது ஹிந்தி திரையுலகையே கலக்கிக்கொண்டிருக்கும் சல்மான் கான் வசிப்பது மும்பையானாலும் பிறந்தது மத்தியபிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரத்தில்தான்.

இந்தூரின் புகழ்பெ���்ற சுற்றுலாத் தலங்கள்

அமீர்கான், மும்பை

அமீர்கான், மும்பை

ஹிந்தி சினிமாவில் எப்போதுமே புதுப்புது முயற்சிகள் எடுத்து வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்து வரும் அமீர்கான் பிறந்தது பாலிவுட் சினிமாவின் கனவுலகமான மும்பையிலேதான்.

மும்பையின் புகழ்ப���ற்ற சுற்றுலாத் தலங்கள்

மாதவன், ஜம்ஷெட்பூர்

மாதவன், ஜம்ஷெட்பூர்

'அலைபாயுதே' மூலம் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்து, '3 இடியட்ஸ்' என்ற ஹிந்தி படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றதோடு நல்ல நடிகன் என்ற பெயரையும் வாங்கிய நம்ம மேடி மாதவன் பிறந்தது ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜம்ஷெட்பூர் நகரத்தில்.

ஜம்ஷெட்பூரின் புக���்பெற்ற சுற்றுலாத் தலங்கள்

தனுஷ், சென்னை

தனுஷ், சென்னை

சூப்பர் ஸ்டார மட்டும் இல்லைங்க இப்ப அவரு மருமகன் தனுஷ் யாருன்னு கேட்டாக்கூட சின்ன குழந்தையும் சொல்லும்!..கொலைவெறி பாட்டு மூலமா உலகம் பூரா ஃபேமஸ் ஆன நம்ம தனுஷ் இப்ப ஹிந்தி சினிமால ஒரு கலக்கு கலக்கிட்டு இருக்காரு. தனுஷ் சினிமால சென்னை பாஷை சரளமா பேசறதுக்கு அவரு சென்னையில பொறந்தாருங்கறதும் ஒரு காரணம்.

சென்னையின் புகழ்ப���ற்ற சுற்றுலாத் தலங்கள்

அக்ஷய் குமார், அம்ரித்ஸர்

அக்ஷய் குமார், அம்ரித்ஸர்

காமெடியையும், கராத்தேயையும் கலந்துகட்டி அடிக்கிற அக்ஷய் குமார் செப்டம்பர் 9-ஆம் தேதி, 1967-ஆம் ஆண்டு பொற்கோயில் அமைந்துள்ள அம்ரித்ஸர் நகரில் பிறந்தார்.

அம்ரித்ஸரின் புகழ���பெற்ற சுற்றுலாத் தலங்கள்

ரித்திக் ரோஷன், மும்பை

ரித்திக் ரோஷன், மும்பை

இன்னைக்கு எல்லா ஹீரோக்களும் சிக்ஸ் பேக் மேல குறியா இருந்தாலும் ரித்திக் ரோஷனின் செக்ஸியான சிக்ஸ் பேக்குக்கு இன்னைக்கும் பொண்ணுங்க மத்தியில ஒரு தனி கிரேஸ் இருக்கு. இவர் பிறந்தது மும்பை நகரத்தில்.

மும்பையின் புகழ்ப���ற்ற சுற்றுலாத் தலங்கள்

Read more about: சினிமா

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்