Search
  • Follow NativePlanet
Share
» »பெங்களூரில் பிரசித்தி பெற்ற 5 பூங்காக்கள்!!

பெங்களூரில் பிரசித்தி பெற்ற 5 பூங்காக்கள்!!

பெங்களூரின் மிக முக்கிய 5 பூங்காக்கள் பற்றி இந்த பதிவில் காண்போம்

By BalaKarthik

பெங்களூரு அனைத்தும் கிடைக்கும் ஓர் அற்புதமான நகரம். தள்ளிக்காணப்படும் சுயாதீன வீடுகள் முதல் பெரிய வானலாவிய இடமென, தெரு உணவுக்கடைகள் முதல் ஆடம்பரமான உணவகம் வரை என, ஏரிகள் தோட்டங்கள் என பெயர் சொல்லும் பல இடங்களும் காணப்பட, எண்ணற்ற வகை வகையான உணவகங்களின் உணவுகள், தோழமையுடன் பழகக்கூடிய மக்கள், என பல வாரவிடுமுறைக்கு ஏற்ற இடங்களையும் பெங்களூரு கொண்டிருக்கிறது.

பூங்காக்கள், ஏரிகள், தோட்டங்கள் என பலவும் காணப்பட, அவ்விடங்களில் மனம் விரும்பிய ஒரு நபருடன் நம் நேரத்தை செலவிடுவதில் நம் மனமானது இதமானதோர் உணர்வினையும் கொள்ளக்கூடும். பல அசதிகளை போக்கிக்கொள்ள தப்பிக்கும் நீங்கள் நிலைதடுமாறி இயற்கை அன்னையின் மடியில் விழ, கண்களுக்கு குளிரூட்டக்கூடிய தூய்மையான காற்றின் சுவாசமும், பசுமையான புல்வெளிகளும், துடிப்பான மலர்களுமென, சுற்றுப்புறங்களில் காணப்படும் தூய்மையான ஏரிகளும் நம் மனதை தொலைக்க முக்கிய காரணமாக அமையக்கூடும். அவ்வாறு காணப்படும் தலைச்சிறந்த ஐந்து பூங்காக்களை பெங்களூருவில் நாம் பார்ப்பதோடு, அசதியான நகரத்து வாழ்க்கையை தொலைத்து இனிமையான அனுபவத்தையும் மனதளவில் பெற்றிடலாமே.

 லால்பாஹ்:

லால்பாஹ்:

இதனை இலக்கியரீதியாக சிவப்பு தோட்டமென அழைக்க, லால்பாஹ் கண்கொள்ளா காட்சிகள் நிறைந்த தோட்டமாக அமைய, மைசூரை ஆண்ட ஹைதர் அலியால் முதலில் நியமிக்கப்பட்டு, அவருடைய மகனான திப்பு சுல்தானால் முடிக்கவும்பட்டது. இந்த மாபெரும் தோட்டமானது அனைத்து தரப்பு வயதினருக்கும் மிகவும் பிடித்தமான நகரமாக அமைகிறது. இந்த தோட்டமானது நெகிழ்வை தரக்கூடிய கண்ணாடி வீடுகளென மலர்களுக்கு பிரசித்திப்பெற்று விளங்க, மலர் காட்சிகளானது வருடந்தோரும் குடியரசு மற்றும் சுதந்திர தினங்களில் இங்கே நடைபெறுகிறது.

இந்த மாபெரும் வீடுகளை தவிர்த்து, கவர்ச்சியான மலர்கள் ஏராளமாக காண, இந்த தோட்டத்தில் தூய்மையான ஏரியும், பழங்காலத்து மரங்களும், ஜப்பானிய அழகுப்படுத்தப்பட்ட நினைவு சின்னங்கள் என பலவும் காணப்படுகிறது. இத்தோட்டமானது காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை தினமும் திறந்தே இருக்கிறது.

PC: PP Yoonus

 கப்பன் பூங்கா:

கப்பன் பூங்கா:

நகரத்தின் இதயத்துடிப்பாக இந்த கப்பன் பூங்கா காணப்பட, நகரத்து அன்றாட நெரிசல் வாழ்க்கையிலிருந்து விடுபட இப்பூங்கா நமக்கு சிறந்த உணர்வை மனதில் தரக்கூடியதாகும். இப்பூங்காவானது முந்நூறு ஏக்கர் பரந்து விரிந்து காணப்பட, இப்பூங்காவின் நடைப்பாதையானது சிறந்த முறையில் நடக்க ஏதுவாக காணப்பட, மூங்கில் போர்வையும் போர்த்தப்பட்டு, பாறைகளின் சிதறல்களும் என பலவும் பார்க்க பரவசத்தை மனதில் அள்ளி தெளிக்கக்கூடுபவனவாகும். இந்த அழகிய பூங்காவில் நம்மால் 6000 மரங்களை காணவும் முடிகிறது.

சுற்றுலா பயணிகளுக்காக இப்பூங்காவானது நாள் முழுவதும் திறந்து காணப்பட, காலை 5 மணி முதல் காலை 8 மணி வரை இவ்விடமானது உடற்பயிற்சி ஆர்வலர்களின் கூட்டங்களுடனும் காணப்படக்கூடும் என்பதால், பலரும் ஜாக்கிங்க், நடைப்பயிற்சி என பலவற்றையும் செய்து தங்கள் கைகளின் பலத்தை இயற்கைக்கொண்டு பெருக்குகின்றனர்.

PC: Yair Aronshtam

 புத்த சாந்தி கனைவ்:

புத்த சாந்தி கனைவ்:

இந்த இடத்தை புத்த பூங்கா எனவும் அழைக்க, அழகிய சிறந்த முறையில் தீட்டப்பட நிலப்பரப்புகளை இப்பூங்காவானது கொண்டிருக்க, இதனை தொடர்ந்து ஷென் தோட்டம் அல்லது ஜப்பானிய பாறை தோட்ட பாணியானது பிரதிபலிக்கிறது. நாகர்பாவி எனப்படும் ஒதுக்குப்புறமான இடத்தில் இப்பூங்கா காணப்பட, பாறை வீழ்ச்சியின் அழகாலும் BBMPஆல் மெருகேற்றப்பட்டு காணப்படுகிறது.

பாறையால் செதுக்கப்பட்ட சிங்கங்கள், அழகிய மற்றும் வண்ணமயமான போகெய்ன்வில்லே என, கற்களால் புத்தரின் வாழ்க்கையும் காட்சிகளாக செதுக்கப்பட்டிருக்க, இந்த விடுமுறை பூங்காவில் பலவித சிக்கல்கள் சுவாரஸ்யத்துடன் நமக்கு காட்சியளிக்கிறது.

பட்டர்ஃப்ளை பார்க் :

பட்டர்ஃப்ளை பார்க் :


இப்பூங்கா முழுவதும் வண்ணத்துப்பூச்சிகளை நம்மால் பார்த்து புதுவித அனுபவத்தை கொள்ள, பன்னேர்கட்டாவின் தேசிய பூங்காவில் மற்ற விலங்குகளையும் நம்மால் ரசிக்க முடிகிறது. இந்த வண்ணத்துப்பூச்சி பூங்காவில் ஒலி ஒளி அறையானது காணப்பட, ஓர் அருங்காட்சியகமும், ஆவணப்படங்கள் காணும் கன்சர்வேட்டரி என வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்க்கை சுழற்சி பற்றியும் நாம் தெரிந்துக்கொள்ள இன்னும் பல வித தகவலையும் நாம் தெரிந்துக்கொள்ளவும் முடிகிறது.

புகைப்பட ஆர்வலர்களின் வார விடுமுறைக்கு ஏற்றதோர் இடமாக இவ்விடமானது அமைய, பன்னெர்கட்டாவின் தேசிய பூங்காவிற்கும் இங்கிருந்து நாம் புறப்பட தயாராகிறோம்.

PC: Ramesh NG

ஃப்ரீடம் பார்க் :

ஃப்ரீடம் பார்க் :

வழக்கமான பூங்காவைவிட்டு நாம் விலக, நடைப்பாதையும், மரங்களும், பசுமை ஆங்காங்கே காணப்பட வண்ணமயமான சின்னஞ்சிறிய மலர்களுமென காணப்பட, ஃப்ரீடம் பார்க் முன்பு மத்திய சிறை காணப்பட்ட இடத்தில் அமைந்திருக்கிறது. இப்பூங்காவானது பரந்து விரிந்து சுவாரஸ்யத்தை தர, சிறை அருங்காட்சியகம் போன்றும், செயற்கை நீரூற்று, பழங்காலத்து படைவீடுகள், காவல் மாடம் என பலவற்றையும் கொண்டிருக்கிறது.

இப்பூங்காவானது கலந்துரையாடல், போராட்டம் அல்லது பேரணிகளுக்கு வழக்கமான இடமாக அமைகிறது. இந்த யோசனையானது இலண்டன் ஹைட் பூங்காவின் ஈர்ப்பினால் உருவாக்கப்பட்டதாகும். இப்பூங்காவானது மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்து காணப்படுகிறது.

PC: Hari Prasad Nadig

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X