Search
  • Follow NativePlanet
Share
» »கெம்மனுங்குண்டி - இதன் அழகில் மயங்காதவர் உலகில் இல்லை

கெம்மனுங்குண்டி - இதன் அழகில் மயங்காதவர் உலகில் இல்லை

கர்நாடக மாநிலம் சிக்மங்கலுரு மாவட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து 1500 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது கெம்மனுங்குண்டி என்னும் அழகிய மலை வாசஸ்தலம். மலைகளின் ஊடாக பாயும் வெள்ளி ஓடைகள், பசுமையான விவசாய நிலங்கள், அற்புதமான இயற்கை காட்சிகள், மெய் மறக்கச்செய்யும் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் என சிறந்த சுற்றுலாவுக்கு உண்டான அத்தனை அம்சங்களும் நிரம்பிக்கிடக்கின்றன இங்கே. வாருங்கள் சுற்றிப்பார்க்க என்னனென்ன இடங்கள் இங்கே உள்ளன என்பதை தெரிந்து கொள்வோம்.

கெம்மனுங்குண்டி:

Photo: Yathin S Krishnappa

கன்னடத்தில் கெம்பு என்றால் சிவப்பு என்பதையும் மண்ணு என்பது மண்ணையும் குறிக்கிறது. சிவப்பான மண் மேடு என்பது இதன் பெயர்க்காரணம் ஆகும். மகாராஜா நான்காம் கிருஷ்ண ராஜா வொடயர் அவர்கள் கோடை காலத்தில் ஓய்வு எடுப்பதற்காக உருவாக்கப்பட்டது தான் இந்த கெம்மனுங்குண்டி ஆகும். பின்னர் அவர் இந்த இடத்தை கர்னாடக அரசுக்கு தானமாக வழங்கி விட்டார். தற்போது கர்நாடக பட்டு வளர்ச்சி கழகம் இந்த இடத்தை பராமரித்து வருகிறது.

Z பாயிண்ட் :

Photo: Elroy Serrao

கெம்மனுங்குண்டியின் உயரமான மலைக்குன்று அமைந்திருக்கும் இடம்தான் இந்த Z பாயிண்ட். இந்த குன்று ஆங்கில எழுத்தான Z வடிவில் அமைந்திருப்பதால் இப்பெயர் பெற்றிருக்கிறது.
கெம்மனுங்குண்டியில் சூரிய இங்கிருந்து சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் அற்புதமாக காணலாம். சாந்தி அருவியும் இதனருகில் தான் அமைந்திருக்கிறது.

ஹெப்பே அருவி:

Photo: Srinivasa83

கெம்மனுங்குண்டியில் இருந்து 8 கி.மீ மலை இறங்கினால் இந்த அழகிய அருவியை அடையலாம். 160.மீ உயரத்தில் இருந்து இந்த அருவி ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தோடா அருவி அதாவது பெரிய அருவி மற்றும் சிக்கா அருவி அல்லது சிற்றருவி என இரண்டு பகுதியாக ஹெப்பே அருவி உள்ளது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து இத அருவிக்கு ஜீப் வசதி உண்டு. தற்போது புலிகள் நடமாட்டம் இந்த பகுதியில் அதிகரித்திருப்பதால் சுட்ட்ருலாப்பயனிகள் வருகை தடை செய்யப்பட்டுள்ளது.


களத்தி அருவி:

கெம்மனுங்குண்டியில் இருந்து தரிகேரே செல்லும் வழியில் இந்த அருவி அமைந்திருக்கிறது. 122 மீட்டர் உயரத்தில் இருந்து நீர் கொட்டும் இந்த அருவிக்கு பக்கத்தில் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட கோயில்கள் காணப்படுகின்றன. முன்னொரு காலத்தில் அகஸ்திய மாமுனி இந்த அருவிக்கு பக்கத்தில் குடில் அமைத்து தங்கியதாக கதை ஒன்றும் சொல்லப்படுகிறது.

முள்ளயணகிரி:

Photo: Bdeepu

கர்நாடகாவின் உயர்ந்த சிகரமான இந்த மலை கெம்மனுங்குண்டிக்கு சற்று தொலைவே அமைந்திருக்கிறது. அற்புதமான இயற்க்கை காட்சிகளுக்கும், வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதைகளுக்கும் இங்கே உண்டு.

எங்கு தங்குவது?

கெம்மனுங்குண்டி - இதன் அழகில் மயங்காதவர் உலகில் இல்லை

photo: Sanjib Mitra

கெம்மனங்குண்டியில் கர்னாடக அரசின் பட்டு வளர்ச்சி கழகத்தினால் நடத்தப்படும் தாங்கும் விடுதியான ராஜ் பவன் இங்கே உள்ளது. குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவை அளிக்கும் இங்கு முன்னரே திட்டமிட்டு அறைகளை முன்பதிவு செய்து கொள்வது நல்லது.

குடும்பத்துடன் பிக்னிக் வருவதற்கும், உங்கள் மனம் கவர்ந்த காதலருடன் வரவும் அருமையான இடம் இந்த கெம்மனுங்குண்டி.

More News

    Read more about: karnataka nature
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+