Search
  • Follow NativePlanet
Share

கைமூர் - மகிழ்ச்சியை அள்ளித் தெளிக்கும் நகரம்!

30

போற்றத்தக்க பாரம்பரிய இடங்களை கொண்ட கைமூர், பீகாரின் அதிர வைக்கும் வட்டாரத்தில் ஒன்றாகும். பீகாரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கைமூர் ஒரு நிர்வாகம் சார்ந்த மாவட்டமாகும். இந்த மாவட்டத்தின் முதன்மை தலைமையகம் பபுவாவில் உள்ளது. இங்கு காணப்படும் சமவெளி, வளமைத் ததும்பிய புல் தழையுடன் செழிப்பான நிலங்களை கொண்டதாகும். மேலும் மேட்டு நிலங்கள் பாறைகள் நிறைந்து காணப்படும். கர்மனாஷா, துர்காவதி மற்றும் குட்ரா நதிகள் இந்த நகரத்தின் வழியாக பாய்ந்தோடுகின்றன.

கைமூரின் வரலாறு!

கி.மு.6-லிருந்து கி.பி.5 வரை மௌரியர்களுக்கு முன்னாள் ஆட்சி செய்யப்பட்ட மகத் அரசாட்சியின் ஒரு பகுதியாக விளங்கியது கைமூர். பின்னர் மகத்தை குப்தர்களும் ஆட்சி செய்தனர். மேலும் இந்திய சுதந்திர போராட்டத்தில் கைமூர் முக்கிய பங்கு வகித்துள்ளது.

கைமூர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஈர்ப்புகள்

கைமூர் வனவிலங்கு சரணாலயம், பைத்யநாத், மா முண்டேஷ்வரி கோவில், சோர்கதியா, கர்மனாசா நதி, சித்தாநாத் கோவில் என கைமூரில் பல முக்கியமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன.

கைமூர் சுற்றுலா இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனைத்து விதமான ஈர்ப்புகளையும் அளிப்பதால் இச்சுற்றுலா அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்காது.

கோவில்கள், கோட்டைகள், மலைகள், காடு, அருவிகள் மற்றும் இயற்கை காட்சிகள் என கைமூரை சுற்றி இவை அனைத்தும் இருப்பதால், கைமூர் சுற்றுலா பன்முகங்களை கொண்டதாக ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது. கைமூரில் உள்ள பி.டி. சாலையில் டெல்ஹர் என்ற அழகிய நீர்வீழ்ச்சி ஒன்றும் உள்ளது. இயற்கை சூழலுக்கு மத்தியில் அமைந்திருக்கும் இந்த அருவி நம் கண்களுக்கு விருந்தாக காட்சி அளிக்கும்.

கைமூரில் பல ஹிந்துக்களின் திருவிழாவும் மேளாவும் இங்குள்ள பல கோவில்களில் கொண்டாடப்படுகிறது. இவ்வகை திருவிழாக்கள் மற்றும் இந்நகரத்தில் உள்ள ஈர்ப்புகளை கண்டு கழிக்க பக்தர்களும் உல்லாச பயணிகளும் இங்கு கூட்டம் கூட்டமாக வருவதுண்டு.

கைமூரின் வானிலை

கைமூர் வட்டாரம் பல வகையான வானிலையை சந்திக்கிறது. அது ஒவ்வொரு காலத்தை பொறுத்து மாறுபடும். கோடைக்காலம் கடும் வெப்பத்துடன் இருக்கும், அதே வேளை குளிர் காலத்தில் உறைய வைக்கும் அளவிற்கு குளிர் நிலவும். அதனால் அக்டோபர் முதல் மார்ச் மாதத்திற்குள் இங்கு சுற்றுலா வருவதே உகந்த நேரமாக இருக்கும்.

கைமூரை அடைவது எப்படி?

கைமூரை இரயில் மற்றும் சாலை வழியாக சுலபமாக வந்தடையலாம். விமானம் மூலமாக இங்கு வரவேண்டுமானால் வாரனாசி, கயா அல்லது பாட்னா வழியாக வரலாம்.

கைமூர் சிறப்பு

கைமூர் வானிலை

சிறந்த காலநிலை கைமூர்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது கைமூர்

  • சாலை வழியாக
    கைமூர், பாட்னாவில் இருந்து 200 கி.மீ. தொலைவிலும் வாரனாசியில் இருந்து 100 கி.மீ. தொலைவிலும் அமைந்திருக்கிறது. தலைநகரமான பாட்னாவை அர்ராஹ் செல்லும் பாதையில் தேசிய நெடுஞ்சாலை 30 வழியாக செல்லலாம். இது போக இங்கு உள்ள சில மாநில நெடுஞ்சாலைகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    மோஹனியா இரயில் சந்திப்பு தான் இந்த மாவட்டத்தில் இருக்கும் பெரிய இரயில் நிலையமாகும். முகல்சராய் வட்டாரத்தில் உள்ள ஹொவ்ராஹ்-புது டெல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பபுவா சாலையில் உள்ளது இந்த இரயில் நிலையம். இந்த நகரத்தை மற்ற மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்களுடன் பல இரயில்கள் இணைக்கிறது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    கைமூரில் தனி விமான நிலையம் கிடையாது. அதனால் இங்கு விமானம் மூலமாக வர விரும்பினால் வாரனாசி விமான நிலையம் வழியாக வர வேண்டும். இது இங்கிருந்து 60 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
26 Apr,Sun
Return On
27 Apr,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
26 Apr,Sun
Check Out
27 Apr,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
26 Apr,Sun
Return On
27 Apr,Mon