Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் எங்கெல்லாம் போகும் தெரியுமா?

இந்தியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் எங்கெல்லாம் போகும் தெரியுமா?

இந்தியாவின் தென் முனையை, வட கிழக்கில் இருக்கும் திப்ருகர் எனும் அஸ்ஸாம் மாநில நகரத்துடன் இணைக்கும் ரயில் இந்த கன்னியாகுமரி - திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகும். இந்தியாவின் மிக நீளமான ரயில் பாதை இதுதான

By Udhaya

இந்தியாவின் தென் முனையை, வட கிழக்கில் இருக்கும் திப்ருகர் எனும் அஸ்ஸாம் மாநில நகரத்துடன் இணைக்கும் ரயில் இந்த கன்னியாகுமரி - திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகும். இந்தியாவின் மிக நீளமான ரயில் பாதை இதுதான். மொத்தம் 4273 கிமீ தூரம் பயணிக்கிறது இந்த ரயில். இது கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டு திப்ருகரை அடைவதற்கு 79 மணி நேரங்கள் எடுத்துக்கொள்கிறது. அதுமட்டுமல்லாமல், இடையில் 57 சிறு மற்றும் முக்கிய நிறுத்தங்களில் நின்று செல்கிறது. வாருங்கள் இந்த ரயில் எந்தெந்த இடங்களை இணைக்கிறது என்று இந்த பதிவில் காண்போம்.

 இணைக்கும் மாநிலங்கள்

இணைக்கும் மாநிலங்கள்

தமிழகத்தின் கன்னியாகுமரியில் தொடங்கும் இந்த ரயில் சேவை நாகர்கோயில் வழியாக திருவனந்தபுரத்தை அடைகிறது. அப்படியே கொச்சி வழியாக கோயம்புத்தூரை அடைகிறது. தமிழகத்திலிருந்து சேலம் வழியாக ஆந்திர மாநிலத்துக்குள் நுழையும் ரயிலின் முதல் பெரிய நிறுத்தம் நெல்லூர் நகரம். நெல்லூர் நகரத்தைத் தொடர்ந்து விஜயவாடா, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களை சந்தித்துவிட்டு எல்லை தாண்டி ஒடிசாவுக்கு போகிறது ரயில். ஒடிசா தலைநகர் புவனேஸ்வர் வழியாக பீகாரின் அசன்சோல், மேற்கு வங்கத்தின் துர்க்காபூர் , சிலிகுரி ஆகிய இடங்களை கடந்து அஸ்ஸாமின் கவுகாத்திக்கு நுழைகிறது, பின் திமாப்பூர் வழியாக திப்ருகர் சென்றடைகிறது. இப்படி இந்த ரயில் 8 மாநிலங்களில் பயணிக்கிறது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி


கலை மற்றும் பண்பாடுகளில் நாட்டம் இல்லாதவர்களுக்கு நிச்சயம் கன்னியாகுமரி உகந்த இடம் அல்ல. ஆயினும் கன்னியாகுமரியிலுள்ள கோயில்களும் கடற்கரைகளும் பல சுற்றுலாப் பயணிகளையும் புனித பயணம் செல்பவர்களையும் கவரும் வண்ணம் உள்ளன.

விவேகானந்தர் பாறை, விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை, வட்டகோட்டை, பத்மநாபபுரம் அரண்மனை, வாவத்துறை, உதயகிரி கோட்டை மற்றும் காந்தி அருங்காட்சியகம், ஆகியவைகள் தான் இங்குள்ள மிக முக்கியமான சுற்றுலாத் தலங்கள்.

கன்னியாகுமரி பற்றிய மேலும் தகவல்களுக்கு சொடுக்கவும்

https://tamil.nativeplanet.com/kanyakumari/#overview

கன்னியாகுமரியிலிருந்து நாகர்கோயில் வழியாக திருவனந்தபுரத்தை அடையும் இந்த ரயில் பயணிக்கும் இடைப்பட்ட தூரம் ஏறக்குறைய 100 கிமீ ஆகும். அதிகபட்சம் மற்ற ரயில்களில் இரண்டு மணி நேரம் எடுக்கும். இந்த ரயிலில் கிட்டத்தட்ட அரை மணி நேரம் மிச்சமாகும்.

Ravivg5

Vkraja

Shishirdasika

 திருவனந்தபுரம்

திருவனந்தபுரம்

திருவனந்தபுரத்தின் ஆன்மீக அடையாளமான ஸ்ரீ பத்மநாப ஸ்வாமி கோயிலுக்கு ஒவ்வொரு நாளும் ஏராளமான பக்தர்கள் விஜயம் செய்கின்றனர். இங்குள்ள நவராத்திரி மண்டபத்தில் ஒவ்வொரு வருடமும் கல்விக்கடவுளாகிய சரஸ்வதி தேவியை கொண்டாடும் விதத்தில் ஒரு இசைத்திருவிழா கோலாகலமாக நடத்தப்படுகிறது. இங்குள்ள குதிர மாளிகை அல்லது புத்தேன் மாளிகை என்று அழைக்கப்படும் பாரம்பரிய அரண்மனை கேரளிய கட்டிடக்கலை பாணிக்கான உதாரணமாக அமைந்துள்ளது. மேலும் திருவனந்தபுரத்தின் மஹாத்மா காந்தி சாலையில் பாரம்பரிய கலையம்சங்களுடன் காட்சியளிக்கும் பல மாளிகைகளை இன்றும் பார்க்கலாம்.

திருவனந்தபுரம் பற்றிய கண்ணோட்டம், ஈர்க்கும் இடங்கள், ஹோட்டல்கள், படங்கள், எப்படி அடைவது, வீக்கெண்ட் பிக்னிக், பயணவழிகாட்டி போன்ற தகவல்களுக்கு சொடுக்கவும்

திருவனந்தபுரத்திலிருந்து இந்த ரயில் அடுத்து பல நிறுத்தங்களைக் கடந்து கொச்சியை அடைகிறது. இந்த ரயிலின் வேகம் 4 மணி நேரப் பயணத்தை கிட்டத்தட்ட அரை மணி அளவு குறைத்து 3.30 மணி நேரத்துக்குள் சென்றடைய வைக்கிறது.

Shady59

 கொச்சி

கொச்சி

கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி நகரத்துக்கு உங்கள் வாழ்நாளில் நீங்கள் ஒரு முறையாவது விஜயம் செய்து ரசிக்க வேண்டும். அரபிக்கடல் ஓரம் வீற்றிருக்கும் இந்த கம்பீரமான நகரம் ஒரு காலத்தில் இந்தியாவில் முக்கியமான துறைமுக நகரமாக திகழ்ந்திருக்கிறது. கொச்சின் என்ற பெயரில் முன்னர் அழைக்கப்பட்ட இந்த கடற்கரை நகரம் கேரள மாநிலத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ‘கொச்சு அழி' எனும் மலையாள மொழிச்சொல்லிலிருந்து இந்த கொச்சி எனும் பெயர் பிறந்துள்ளது.

கொச்சி பற்றிய கண்ணோட்டம், ஈர்க்கும் இடங்கள், ஹோட்டல்கள், படங்கள், எப்படி அடைவது, வீக்கெண்ட் பிக்னிக், பயணவழிகாட்டி போன்ற தகவல்களுக்கு சொடுக்கவும்

கொச்சியிலிருந்து மீண்டும் தன் பயணத்தை துவக்கும் இந்த ரயில், அடுத்ததாக அடைவது தமிழகத்தின் கோயம்புத்தூர் மாநகரம். இங்கிருந்து கோவைக்கு 4 மணி நேரங்கள் ஆகிறது.


Magentic Manifestations

 கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்

இந்த நகரில் அதிகமாக பார்வையிடப்படும் இடங்கள் மருதமலை கோயில், தியானலிங்க ஆலயம், இந்திரா காந்தி வனவிலங்கு காப்பகம் மற்றும் பிளாக் தண்டர் தீம் பார்க் ஆகியன. வெப்பம் நிறைந்த கோடைக்காலம் , மிதமான மழைக்காலம், கடும் குளிர்காலம் என இந்நகரின் காலநிலை மாறுபடுகிறது. கோயம்புத்தூரில் விமான நிலையம், ரயில் நிலையம் ஆகியன இருப்பதோடு அருகிலுள்ள நகரங்களோடு சிறந்த சாலை அமைப்பால் இணைக்கப்பட்டுள்ளது

கோயம்புத்தூர் பற்றிய கண்ணோட்டம், ஈர்க்கும் இடங்கள், ஹோட்டல்கள், படங்கள், எப்படி அடைவது, வீக்கெண்ட் பிக்னிக், பயணவழிகாட்டி போன்ற தகவல்களுக்கு சொடுக்கவும்

கோயம்புத்தூரிலிருந்து சேலம் மாநகரம் 2.30 மணி நேரத்தில் அடையும்படி அமைந்துள்ளது.

Syedshas

சேலம்

சேலம்

சேலம், பிரபலமான சுற்றுலா மற்றும் வழிபாட்டுத்தலமாகும். இந்நகர், கோட்டை மாரியம்மன் கோயில், தாரமங்கலம் கோயில், சேலம் சுகவனேஸ்வரர் கோயில், அருள்மிகு அழகிரிநாதர் கோயில், எல்லைப்பிடாரி அம்மன் கோயில், ஜாமா மஸ்ஜீத் போன்ற பல வழிபாட்டுத் தலங்களின் உறைவிடமாகத் திகழ்கிறது. மிகப் பிரபலமான சுற்றுலாத் தலங்களான ஏற்காடு மலை, கிளியூர் நீர் வீழ்ச்சி, தாரமங்கலம் மற்றும் மேட்டூர் அணை ஆகிய இடங்கள், சேலத்திற்கு மிக அருகில் அமைந்திருப்பதனால், இவ்விடங்களுக்கு சேலத்தில் இருந்து எளிதாகச் செல்லலாம்.

சேலம் பற்றிய கண்ணோட்டம், ஈர்க்கும் இடங்கள், ஹோட்டல்கள், படங்கள், எப்படி அடைவது, வீக்கெண்ட் பிக்னிக், பயணவழிகாட்டி போன்ற தகவல்களுக்கு சொடுக்கவும்

சேலத்திலிருந்து இந்த ரயில் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு செல்கிறது.

நெல்லூர்

நெல்லூர்

நெல்லூருக்கு அருகில் பல இயற்கை எழில் அம்சங்களும் நிறைந்துள்ளன. இவற்றில் மைப்பாடு பீச், புலிகாட் ஏரி போன்றவை குறிப்பிடத்தக்கவை. நேலபட்டு பறவைகள் சரணாலயமும் நெல்லூருக்கு அருகில் உள்ளது. இங்கு பல அரிய வகை பறவையினங்கள் வசிக்கின்றன. ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோயில் மட்டுமல்லாமல் நெல்லூரில் வேறு பல புராதனக்கோயில்களையும் பயணிகள் தரிசிக்கலாம். இவற்றில், நகரமையத்திலிருந்து 13 கி.மீ தூரத்திலுள்ல நரசிம்மஸ்வாமி கோயில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். நெல்லூருக்கு அருகில் உள்ள சோமசீலம் எனும் இடம் ஒரு பிரபலமான பிக்னிக் சிற்றுலாத்தலமாக அறியப்படுகிறது. அற்புதமான இயற்கை காட்சிகளுடன் அமைதி தவழும் ஏகாந்த ஸ்தலமாக இந்த சோமசீலம் காட்சியளிக்கிறது.

நெல்லூர் பற்றிய கண்ணோட்டம், ஈர்க்கும் இடங்கள், ஹோட்டல்கள், படங்கள், எப்படி அடைவது, வீக்கெண்ட் பிக்னிக், பயணவழிகாட்டி போன்ற தகவல்களுக்கு சொடுக்கவும்

IM3847

விஜயவாடா

விஜயவாடா

சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவரக்கூடிய பல அம்சங்கள் விஜயவாடா நகரத்தில் நிறைந்துள்ளன. புகழ் பெற்ற கனக துர்கா கோயில் மற்றும் தென்னிந்தியாவிலேயே பழமையான வைஷ்ணவ கோயிலாக கருதப்படும் மங்களகிரி போன்றவை இங்குள்ள முக்கியமான ஆன்மீக திருத்தலங்களாகும். இவை தவிர, அமரேஷ்வரர் என்ற சிவன் அவதாரத்துக்கான அமராவதி, குணாடலா மாதா கோயில் எனப்படும் செயிண்ட் மேரி தேவாலாயம் போன்றவையும் இந்நகரத்தில் உள்ளன. மேலும், மொகலாராஜபுரம் குகைகள் , உன்டவலி குகைகள் மற்றும் காந்தி மலையில் உள்ள காந்தி ஸ்தூபி, கொண்டபள்ளி கோட்டை, பவானி தீவு மற்றும் ராஜீவ் காந்தி பார்க் ஆகியவை விஜயவாடா நகரத்தில் அவசியம் பார்க்க வேண்டிய அம்சங்களாகும். பிரகாசம் அணைத்தடுப்பு நீர்த்தேக்கமும் விஜயம் செய்ய வேண்டிய இயற்கை எழிற்பிரதேசமாகும்.

விஜயவாடா பற்றிய கண்ணோட்டம், ஈர்க்கும் இடங்கள், ஹோட்டல்கள், படங்கள், எப்படி அடைவது, வீக்கெண்ட் பிக்னிக், பயணவழிகாட்டி போன்ற தகவல்களுக்கு சொடுக்கவும்

Khushwantsingh

 விசாகப்பட்டினம்

விசாகப்பட்டினம்


வெங்கடேஸ்வரா கொண்டா, ராஸ் மலை மற்றும் தர்க்கா கொண்டா ஆகிய மலைகளால் இந்த நகரம் சூழப்பட்டுள்ளது. வெங்கடேஸ்வரா மலையில் ஒரு சிவன் கோயிலும், ராஸ் மலையில் வர்ஜின் மேரி தேவாலயமும் மற்றும் தர்க்கா கொண்டா மலையில் பாபா இஷாக் மதீனா எனும் இஸ்லாமிய யோகியின் கல்லறை மாடமும் அமைந்துள்ளன. வைசாக் நகரத்தின் அழகிய கடற்கரைகளாக ரிஷிகொண்டா பீச், கங்கவரம் பீச், பிம்லி மற்றும் யரடா பீச் போன்றவை நகரின் கிழக்குப்பகுதியில் காணப்படுகின்றன. மேலும், இயற்கை எழில் அம்சங்களாக கைலாசகிரி ஹில் பார்க், சிம்மாசலம் மலைகள், அரக்கு வேலி, கம்பலகொண்டா காட்டுயிர் சரணாலயம் போன்றவை இங்கு இயற்கை ரசிகர்களுக்காக காத்திருக்கின்றன. சப்மரைன் மியூசியம், வார் மெமோரியல் மற்றும் நேவல் மியூசியம் போன்றவை விசாகப்பட்டிணம் நகரில் பார்க்க வேண்டிய இதர முக்கிய சுற்றுலா அம்சங்களாகும். பார்க்க வேண்டிய இடங்களை பார்த்தபின் நகரின் முக்கியமான அங்காடி வளாகமான ‘ஜகதாம்பா சென்டர் மால்' க்கு விஜயம் செய்து ‘ஷாப்பிங்' தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளலாம்.

விசாகப்பட்டினம் பற்றிய கண்ணோட்டம், ஈர்க்கும் இடங்கள், ஹோட்டல்கள், படங்கள், எப்படி அடைவது, வீக்கெண்ட் பிக்னிக், பயணவழிகாட்டி போன்ற தகவல்களுக்கு சொடுக்கவும்

Subhashish Panigrahi

 புவனேஸ்வர்

புவனேஸ்வர்

புபனேஷ்வர் நகர சுற்றுலாவின்போது பயணிகள் பார்த்து ரசிப்பதற்கான ஏராளமான அம்சங்கள் காத்திருக்கின்றன. ஒடிஷா மாநிலத்தின் பெரிய நகரமான புபனேஷ்வரில் ஏரிகள், குகைகள், அருங்காட்சியகங்கள், பூங்காக்கள் மற்றும் அணைகள் போன்றவை நிரம்பியுள்ளன. இவை தவிர பழமையான கோயில்களான லிங்கராஜ் கோயில், முக்தேஷ்வர் கோயில், ராஜாராணி கோயில், இஸ்க்கான் கோயில், ராம் மந்திர், ஷிர்டி சாய் பாபா மந்திர், ஹிராபூர் யோகினி கோயில் போன்றவை ஒடிஷா கோயிற்கலை பாரம்பரியத்தின் சான்றுகளாக வீற்றிருக்கின்றன. அது மட்டுமல்லாமல்லாமல் புபனேஷ்வர் நகரின் எழிலைக்கூட்டும் வகையில் பிந்து சாகர் ஏரி, உதயகிரி மறும் கண்டகிரி குகைகள், தௌலிகிரி, சந்தகா காட்டுயிர் சரணாலயம், அத்ரி வெந்நீர் ஊற்று ஸ்தலம் போன்ற எராளமான இயற்கை அம்சங்கள் நிறைந்துள்ளன.


புபனேஸ்வர் பற்றிய கண்ணோட்டம், ஈர்க்கும் இடங்கள், ஹோட்டல்கள், படங்கள், எப்படி அடைவது, வீக்கெண்ட் பிக்னிக், பயணவழிகாட்டி போன்ற தகவல்களுக்கு சொடுக்கவும்

Amartyabag

அசன்சோல்

அசன்சோல்

ஓய்வு நேரம் இருப்பின் 108 தனித்துவம் வாய்ந்த சிவலிங்கங்கள் இருக்கும் நவாப் ஹட் சென்றுவாருங்கள். நவாப் ஹட் என்றால் 108கோவில்கள் என்று பொருள். மஹாசிவராத்திரி விழா இங்கு மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. ஆஃப்கான் ஷேர் கல்லறை ஆகட்டும், ரமணா பங்கன் வன அலுவலகம் ஆகட்டும் அனைத்து வகையான சுற்றுலா பயணிகளுக்கு ஏற்றவாறும் பர்தமானில் பார்க்க விசயங்கள் இருக்கிறது.

அசன்சோல் பற்றிய கண்ணோட்டம், ஈர்க்கும் இடங்கள், ஹோட்டல்கள், படங்கள், எப்படி அடைவது, வீக்கெண்ட் பிக்னிக், பயணவழிகாட்டி போன்ற தகவல்களுக்கு சொடுக்கவும்

Srikant.c

 துர்க்காப்பூர்

துர்க்காப்பூர்


திருவிழாக்களை பர்தமான் மக்கள் பெரிதும் விரும்புகிறார்கள். இந்துப் பண்டிகைகளான ஹோலி, தீபாவளி மற்றும் புதுவருடப் பிறப்பு போன்ற சமயங்களில் ஊரே விழாக்கோலம் பூணுகிறது. துர்கா பூஜா, தசரா ஆகிய விழாக்கள் வங்காள மக்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இச்சமயங்களில் ஏராளமான உணவு வகைகள் இங்கு கிடைக்கின்றன


துர்க்காப்பூர் பற்றிய கண்ணோட்டம், ஈர்க்கும் இடங்கள், ஹோட்டல்கள், படங்கள், எப்படி அடைவது, வீக்கெண்ட் பிக்னிக், பயணவழிகாட்டி போன்ற தகவல்களுக்கு சொடுக்கவும்

wiki

 சிலிகுரி

சிலிகுரி


புவியியலின்படி ஒருபுறம் வங்கதேசத்தாலும், மறுபுறம் நேபாலும் சூழப்பட்டுள்ள இந்நகரம் இந்தியாவை அதன் வடகிழக்கு மாகாணங்களுடன் இணைக்கிறது. சிலிகுரி வட மாவட்டங்களின் சுற்றுலாத் துறைக்கு அடித்தளமாக விளங்குகிறது. சுற்றியுள்ள மற்ற சிறிய ஊர்களுக்கும், சிலிகுரிக்கு அருகில் இருப்பதால் ஏராளமான பயணிகள் செல்கிறார்கள். சிலிகுரியைச் சுற்றி ஏராளமான சுற்றுலா இடங்கள் உள்ளன. இஸ்கான் கோவில், மஹாநந்தா வனவிலங்கு சரணாலயம், விஞ்ஞான நகரம், கரொனேஷன் பாலம், சலுகரா மொனாஸ்ட்ரி, மதுபான் பூங்கா, உம்ரோ சிங் படகு முகாம் என பலவகையான இடங்கள் உள்ளன.


சிலிகுரி பற்றிய கண்ணோட்டம், ஈர்க்கும் இடங்கள், ஹோட்டல்கள், படங்கள், எப்படி அடைவது, வீக்கெண்ட் பிக்னிக், பயணவழிகாட்டி போன்ற தகவல்களுக்கு சொடுக்கவும்

Sayantani

 கவுகாத்தி

கவுகாத்தி

சுற்றுலா அம்சங்கள் என்று பார்த்தால் குவஹாத்தி நகரத்தில் பயணிகள் ரசிக்கக்கூடிய ஏராள அம்சங்கள் நிறைந்துள்ளன. காமாக்யா கோயில் குவஹாத்தி நகரத்தின் பிரதான கவர்ச்சி அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. இது தவிர பிரம்மபுத்திரா ஆற்றின் கரையிலிருந்து சரியாகாட் பாலத்தின் அழகை பார்த்து ரசிக்கும் அனுபவமும் குறிப்பிடத்தக்க ஒன்று. அஸ்ஸாம் ஸ்டேட் மியூசியம், குவஹாத்தி பிளானட்டேரியம் ஆகியவையும் இந்நகரத்தில் தவறாமல் விஜயம் செய்ய வேண்டிய அம்சங்களாகும்.

கவுகாத்தி பற்றிய கண்ணோட்டம், ஈர்க்கும் இடங்கள், ஹோட்டல்கள், படங்கள், எப்படி அடைவது, வீக்கெண்ட் பிக்னிக், பயணவழிகாட்டி போன்ற தகவல்களுக்கு சொடுக்கவும்

Vikramjit Kakati

 திமாப்பூர்

திமாப்பூர்


நாகாலாந்துக்கு மட்டுமல்லாது மணிப்பூருக்கும் உயிர்நாடியாகத் திகழும் திமாபூர் வடகிழக்கு இந்தியாவின் முக்கியமானப் பகுதியாக விளங்குகிறது. 39ஆம் எண் தேசிய நெடுஞ்சாலை கோஹிமா, இம்பால் ஆகிய நகரங்களை இந்தியாவின் பிற நகரங்களுடன் இணைக்கிறது. மியான்மர் எல்லையில் இருக்கும் மோரே எல்லை திமாபூர் வழியாகச் செல்கிறது


திமாப்பூர் பற்றிய கண்ணோட்டம், ஈர்க்கும் இடங்கள், ஹோட்டல்கள், படங்கள், எப்படி அடைவது, வீக்கெண்ட் பிக்னிக், பயணவழிகாட்டி போன்ற தகவல்களுக்கு சொடுக்கவும்

abyma

திப்ருகர்

திப்ருகர்

திப்ருகார் சத்ராக்கள், திப்ருகார் சுற்றுலாவின் முக்கிய அங்கமாகத் திகழ்கின்றன. சத்ராக்கள், அஹோம் மன்னர்கள் விட்டுச் சென்ற கலாச்சாரப் பண்பாடுகளின் சின்னங்களாகத் திகழும், சமூகப் பாரம்பரியமிக்க ஆன்மீக ஸ்தாபனங்கள் ஆகும். தின்ஜோய் சாத்ரா, கோலி ஆய் தான் மற்றும் தேஹிங் சாத்ரா ஆகியவற்றுக்குச் செல்லாமல், திப்ருகார் பயணம் நிறைவடைவதில்லை. கோலி ஆய் தான், அஸ்ஸாமின் பழம்பெரும் ‘தான்' ஆகக் கருதப்படுகின்றது. தின்ஜோய் சத்ரா மற்றும் தேஹிங் சத்ரா ஆகியவை வரலாற்றுப் பெருமை மற்றும் மரபுடைமையின் எச்சமாகத் திகழ்கின்றன. தற்போது, இந்த சத்ராக்கள் அஸ்ஸாமின் வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தின் திருவுருவமாகத் திகழ்கின்றன.

திப்ருகர் பற்றிய கண்ணோட்டம், ஈர்க்கும் இடங்கள், ஹோட்டல்கள், படங்கள், எப்படி அடைவது, வீக்கெண்ட் பிக்னிக், பயணவழிகாட்டி போன்ற தகவல்களுக்கு சொடுக்கவும்

Nborkakoty

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X