Search
  • Follow NativePlanet
Share
» »எந்த நகரத்தில் நோ 'நான் வெஜ்' தெரியும்?

எந்த நகரத்தில் நோ 'நான் வெஜ்' தெரியும்?

'அசைவம்' என்ற பெயரை கேட்டாலே. சும்மா அதிருதுல...! அந்தளவுக்கு அசைவ உணவு வகைகளை விரும்பாதவர்கள் குறைவு என்றே கூறலாம். இந்தியாவில், 85 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள்'அசைவ' உணவை விரும்பி சாப்பிடுகின்றனர் என, சமீபத்திய ஆய்வுகள் நமக்கு தெரியப்படுத்துகின்றன. இந்த எண்ணிக்கை சற்று கணிசமாக அதிகரித்து வருகிறது.

Non-Veg Food

ஹலோ...இது எல்லாம் இருக்கட்டும் உலகளவில் ஒரு நகரத்தில் அசைவ உணவு தடை செய்யப்பட்டது என்றால் உங்கள் நம்ப முடிகிறதா? அங்கு போனால் நிச்சயமாக நீங்கள் ஒரு 'நான் வெஜ்' கடையை கூட பார்க்க முடியாது.

ஓ அப்படியா...! என, நீங்கள் நக்கலா கேட்பது காதில் விழுகிறது. உண்மை அது தான்... இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள நகரம் பாலிதானா. இந்த பகுதி ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் கொண்டிருக்கும் நகரம் என்று அனைவராலும் அறியப்பட்ட நகரம். ஆனால், அது மட்டுமல்ல அசைவ உணவுகள் தடை செய்யப்பட்ட பகுதி என்பதை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

வளமான வரலாற்றை கொண்ட பாலிதானா நகரம், ஜெயின் மதத்தினரின் புகழ்பெற்ற யாத்திரைத் தளமாகவும் உள்ளது. அப்படிப்பட்ட நகரம், அசைவ உணவுகளை தடை செய்த உலகின் முதல் நகரமாக மாறியுள்ளது.

இந்த நகரத்தில், இறைச்சி விற்பனை மற்றும் நுகர்வு தடை செய்யப்பட்டுள்ளது. அதாவது, இறைச்சிக்காக விலங்குகளை கசாப்பு செய்வது சட்டவிரோதமானது; சட்டத்தால் தண்டனைக்குரியது என மாற்றப்பட்ட பின், அசைவ உணவு தடை செய்வதற்கான இந்த முடிவை, அந்நகர அதிகாரிகளால் எடுக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க முடிவாகும்.

நகரில் உள்ள 250க்கும் மேற்பட்ட இறைச்சி கூடங்களை மூட கோரி, 200க்கும் மேற்பட்ட சமண துறவிகள் நடத்திய போராட்டத்தின் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது உண்மை.

ஜெயின் கோவில் நகரம்

பாலிதானா ஜைனர்களுக்கான புனித யாத்திரை தலங்களில் ஒன்றாகும். சத்ருஞ்சய மலைகளில் அமைந்துள்ள இந்த இடம் ஜெயின் கோயில் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில், இந்த நகரத்தில் 800க்கும் மேற்பட்ட ஜெயின் கோவில்கள் உள்ளன.

நகரத்தில் உள்ள மிகவும் பிரபலமான ஜெயின் கோவில் ஆதிநாத் கோயில். இது ஜைன மதத்தின் முதல் தீர்த்தங்கரர் ஆதிநாதருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பாலிதானா வரலாற்று நகரங்களில் ஒன்றாகும். இது சுற்றுலாவிற்கு மட்டுமல்ல, அதன் மத முக்கியத்துவம் காரணமாகவும் உள்ளது.

இந்த கோவிலும், இப்பகுதியில் உள்ள மற்ற கோவில்கள், ஜைனர்களின் மிக முக்கியமான புனித யாத்திரை தலங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இது, கி.பி 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. சில சமண நூல்களின் படி, நீங்கள் மோட்சத்தை அடையக் கூடிய இடங்களில் பாலிதானாவும் ஒன்று.

Veg Food

குஜராத்தில் அசைவ தடையா?

அசைவ உணவு விற்பனையை ஒழுங்குபடுத்தும் தொடர் உத்தரவு ராஜ்கோட்டில் தொடங்கியது. இந்த உத்தரவுகள் அனைத்தும் அசைவ உணவுகளை காட்சிப்படுத்துவதற்கான, தயாரிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. ஜூனாகத் மற்றும் அகமதாபாத் நகரங்களில் உள்ள அதே விதிமுறைகளைப் பின்பற்றிய உதாரணத்தை வதோதரா விரைவில் பின்பற்றியது.

அசைவ உணவுக்கு எதிரானவர்கள் மத்தியில், இறைச்சியைக் காண்பிப்பது அவர்களின் உணர்திறன் மற்றும் உணர்வுகளை புண்படுத்துவதோடு, குழந்தைகளை எதிர்மறையாக பாதிக்கிறது என்றும் கூறுகிறார்கள்.

குஜராத்தில், போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளார் குஜராத் முதல்வர். அசைவ உணவுகளை தடை செய்யும் இந்த உந்துதல் மாநிலத்தில் புதிதல்ல. வாழ்நாள் முழுவதும் சைவ உணவையே முன்னிறுத்திய மகாத்மா காந்தி பிறந்த இடம் குஜராத்.

குஜராத்தின் வைஷ்ணவ இந்து கலாசாரம், மாநிலத்தில் சைவ சமயத்தை பாதித்தது என்றே கூற வேண்டும். மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் 88.5% இந்துக்கள், ஜெயின் 1% மற்றும் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மொத்தம் 10%. வைஷ்ணவம் மாநிலத்தில், முதன்மையான மத கலாசாரமாகும்.

குஜராத்தில் சைவத்தை நோக்கிய இந்த மாற்றம் ஆழமான வேரூன்றிய கலாசாரத்தையும் வரலாற்றையும் பிரதிபலிக்கிறது. இது, மகாத்மா காந்தி போன்ற வரலாற்று நபர்களின் செல்வாக்கையும், பாலிதானா போன்ற மத இடங்களின் முக்கியத்துவத்தையும் காட்டுகிறது.

எது எப்படியோ, நாட்டிலேயே அதிக இறைச்சி உட்கொள்ளும் மாநிலம் நாகலாந்து. இந்த மாநிலத்தில் 99.8 சதவீதம் பேர் அசைவம் உட்கொள்கின்றனர். ஆய்வின்படி, அசைவம் அதிகம் சாப்பிடும் முதல் மாநிலம். அதற்கு அடுத்தப்படியாக, மேற்கு வங்கம், கேரளா, ஆந்திரா இடம்பெற்றும். தமிழகத்துக்கு 6வது இடம் பிடித்துள்ளது என, ஆய்வுகள் கூறுகின்றது.

நாம் ஒரு ஊருக்கு போனால், முதலில் அந்த ஊரில் எந்த அசைவ உணவு பேமஸ், எங்கு சுவையான அசைவ உணவு கிடைக்கும் என்று தானே முதலில் தேடுவோம். அப்படி இந்த ஊரில் தேட முடியாது.

சரி சரி... பாலிதானா பகுதிக்கு சுற்றுலா போனா நிச்சயம் நீங்க அசைவ உணவை சாப்பிட முடியாது என்பதை மனதில் நிறுத்திவைத்து கொண்டு ஊர் சுற்றுங்க...!

More News

Read more about: gujarat tamil nadu
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+