Search
  • Follow NativePlanet
Share
» »தனிமையில் காதல் மனைவியுடன் மட்டும் பயணிக்க வேண்டிய சுற்றுலா இது!

தனிமையில் காதல் மனைவியுடன் மட்டும் பயணிக்க வேண்டிய சுற்றுலா இது!

By Staff

இந்தியத் திரைப்படங்களில் அடிக்கடி டூயட் பாட வெளிநாடுகளுக்கு சென்றுவிடுகிறார்கள். ஆனால் பல வெளிநாடுகளிலிருந்தும் நம் நாட்டிற்கு ஹனிமூன் கொண்டாட வருபவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.

இன்றைய காலகட்டத்தில் கல்யாணம் நடப்பதென்பதே குதிரைக்கொம்பாக இருக்கிறது. அப்படி திருமணம் முடிந்த பிறகு ஹனிமூன் செல்வதோ, கணவன் அல்லது மனைவியோடு எங்காவது தனிமையில் செல்ல நினைப்பவர்களுக்கு இந்தியாவிலேயே ஏராளமான இடங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன. எனவே உங்கள் காதலரை கூட்டிக்கொண்டு காதல் வானில் பறக்க தயாராகுங்கள்.

ஸ்ரீநகர்

ஸ்ரீநகர்

ஜீலம் நதிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீநகர் அழகிய ஏரிகள், படகு வீடுகள் மற்றும் கண்கவரும் வகையில் அமைந்துள்ள எண்ணற்ற முகலாய தோட்டங்கள் ஆகியவைகளுக்காக மிகவும் புகழ் பெற்ற நகரமாகும். இங்கு மிகவும் பிரசித்திபெற்ற தால் ஏரியில் உள்ள ஷிக்கரா எனும் படகு வீடுகள் காதல் விளையாட்டுக்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டதாகும்.

ஸ்ரீநகரின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள் முழுவதையும் காண சொடுக்குங்கள்

படம் : Basharat Shah

குல்மார்க்

குல்மார்க்

குல்மார்க் 2730 மீட்டர் உயரத்தில்,ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பரமுல்லா மாவட்டத்தில் அமைந்துள்ளது. குல்மார்க் என்றால், மலர் மைதானம் என்று பொருள். நீங்கள் சாதாரணமாக மலர்ப்படுக்கை தானே பார்த்திருப்பீர்கள். இங்கு வாருங்கள் உங்கள் காதல் துணையோடு டூயட் பாட ஒரு மலர் மைதானமே இங்கு காத்திருக்கிறது.

குல்மார்க் பற்றி மேலும் தெரிந்துகொள்ள

படம் : Skywayman9

லடாக்

லடாக்

உலகின் மிக முக்கியமான இரண்டு மலைத்தொடர்களான கரகோரம் மற்றும் இமயமலையின் நடுவில், கடல் மட்டத்தின் மேல் 3500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது லடாக். அழகிய ஏரிகளும், மடங்களும், மதி மயக்கும் இயற்கை காட்சிகளும், மலை உச்சிகளும் லடாக்கின் முக்கிய ஈர்ப்புகள். எல்லா வகையிலும் உங்கள் காதலரோடு சிறப்பான நேரத்தை செலவிட லடாக் வெகு பொருத்தமான இடம்.

லடாக்கின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள்

படம் : Prabhu B

மணாலி

மணாலி

சிம்லாவிலிருந்து 250 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள மணாலி மலைவாசஸ்தலம் ‘தேவர்கள் வசிக்கும் பூமி' என்று அழைக்கப்படுகிறது. குலு மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த மலைவாசஸ்தலம் குலுவை போலவும், சிம்லா போலவும் பிரபலமான ஹனிமூன் ஸ்தலமாக திகழ்கிறது.

மணாலி ஹோட்டல் டீல்கள்

மணாலியின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள்

படம் : sahil

தர்மஷாலா

தர்மஷாலா

இமாச்சல பிரதேசத்தின் அழகின் அழகாக விளங்கும் தர்மஷாலா மனதை மயக்கும் ஒரு மலை வாசஸ்தலமாகும். தர்மஷாலாவின் பெரும்பான்மை பகுதிகள் அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் இருப்பதோடு, இக்காடுகளில் நீங்கள் ஓக் மற்றும் ஊசியிலை மரங்களைக் காணலாம். அதோடு மூன்று பக்கங்களிலும் தௌலதர் மலைத் தொடர்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது தர்மஷாலா. இப்படி ஒரு சூழ்நிலையில் உங்கள் காதல் துணையோடு இருக்கின்ற தருணத்தை கொஞ்சம் சித்தித்து பாருங்களேன்!!!

தர்மஷாலாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள்

ஆலி

ஆலி

ஆலியில் ஆசியாவிலேயே மிகவும் நீளமான மற்றும் உயரமான கேபிள் கார் வசதி சுமார் 5 கிலோமீட்டர்களுக்கு செய்யப்பட்டுள்ளது. கோண்டோலா என்று அழைக்கப்படும் இந்த கேபிள் கார்களில் 13500 அடி உயரத்தில் உங்கள் காதலரோடு செல்லும் திரில்லிங் பயணத்தை உங்களால் மறக்கவே முடியாது.

ஆலியின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள்

படம் : Mandeep Thander

நைனித்தால்

நைனித்தால்

'இந்தியாவின் ஏரி மாவட்டம்' என்று பெருமையோடு அழைக்கப்படும் நைனித்தால் நகரமானது இமயமலைத்தொடரில் வீற்றிருக்கிறது. நைனித்தால் நகரைச் சுற்றிக் காணப்படும் சிகரங்களை குதிரைச் சவாரி செய்து அடைவதும், இந்நகரின் கவின் கொஞ்சும் ஏரிகளில் படகுச் சவாரி செய்வதும் அற்புதமான அனுபவங்களாகும். இவ்விரண்டு பயணங்களுக்கும் உங்கள் காதல் துணையோடு சென்று வாருங்கள், அந்த சந்தோஷ அனுபவத்தை அளவிட முடியாது.

நைனித்தாலின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள்

படம் : Abhishek gaur70

ஜெய்சல்மேர்

ஜெய்சல்மேர்

மலைகள், அருவிகள், கடல் என்று திரும்ப திரும்ப சுற்றிப்பார்த்து அலுத்துவிட்டதா?..அப்ப உங்கள் காதலரை அழைத்துக்கொண்டு பாலைவனத்தில் ஒட்டகச் சவாரி செய்து பாருங்களேன்! தங்க நகரம் என்று அழைக்கப்படும் ஜெய்சல்மேர் மணற்பாங்கான பாலைவனப் பகுதியின் எழில் அடையாளமாகவும், அதே சமயம் அரண்மனைகள் மற்றும் ஒட்டகங்கள் போன்ற சுவாரசிய அம்சங்கள் நிறைந்த ஸ்தலமாகவும் அறியப்படுகிறது.

ஜெய்சல்மேர் ஹோட்டல் டீல்கள்

ஜெய்சல்மேரின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள்

படம்

உதய்பூர்

உதய்பூர்

மஹாபலேஷ்வர்

மஹாபலேஷ்வர்

கூர்க்

கூர்க்

இந்தியாவில் அதிகமாக காதலர்கள் வந்துபோகும் இடமாக இருந்த மூணாரை வீழ்த்தி கூர்க் நகரம் தற்போது மிகச் சிறந்த ஹனிமூன் ஸ்தலமாக அறியப்படுகிறது. இந்த மலைப்பிரதேசத்தில் என்றும் பசுமையான காடுகள், வளப்பமான பசுமை பள்ளத்தாக்குகள், பனி படர்ந்த மலைகள், பரந்து காணப்படும் காபி மற்றும் தேயிலை தோட்டங்கள், ஆரஞ்சு தோப்புகள், விண்ணைத் தொடும் சிகரங்கள் மற்றும் சலசல வென ஓடும் ஓடைகள் என்று பல விதமான இயற்கை அம்சங்கள் நிறைந்து காணப்படுவதால் இது கர்நாடகாவின் காஷ்மீர் என்றும் இந்தியாவின் ஸ்காட்லாந்து என்றும் அழைக்கப்படுகிறது.

கூர்க் ஹோட்டல் டீல்கள்

கூர்க்கின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள்

ஆலப்புழா

ஆலப்புழா

ஆலப்புழாவின் மனம் மயக்க வைக்கும் உப்பங்கழி நீர்த்தேக்கங்களும், ஓடைகளுக்கு நடுவே வீற்றிருக்கும் ரம்மியமான பசுமை போர்த்திய சோலைகளும், அதன் நடுவே உங்கள் காதல் துணையோடு படகு இல்லத்தில் பயணம் செய்யும் அனுபவமும் மெய்மறக்கச் செய்து உங்கள் உணர்வுகளை எங்கோ இழுத்து சென்றுவிடும்.

ஆலப்புழா ஹோட்டல் டீல்கள்

ஆலப்புழாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள்

மூணார்

மூணார்

கேரளாவின் முதன்மையான ஹனிமூன் ஸ்தலமாகவும், இந்தியாவின் மிகவும் பிரபலமான ஹனிமூன் ஸ்தலங்களில் ஒன்றாகவும் மூணார் மலைப்பிரதேசம் திகழ்ந்து வருகிறது. இதன் ஆர்பரிக்கும் அருவிகள், பசுமையான மலைகள், பச்சை தேயிலை தோட்டங்கள் என்று அனைத்துமே காதலர்களுக்காக படைக்கப்பட்டது போலவே அவ்வளவு ரம்மியமாக இருக்கும்.

மூணார் ஹோட்டல் டீல்கள்

மூணாரின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள்

படம் : Bimal K C

ஊட்டி

ஊட்டி

கொடைக்கானல்

கொடைக்கானல்

டார்ஜீலிங்

டார்ஜீலிங்

பாண்டிச்சேரி

பாண்டிச்சேரி

அந்தமான் நிகோபார் தீவுகள்

அந்தமான் நிகோபார் தீவுகள்

கன்னிமை குறையாத கடற்கரைகள், ஸ்கூபா டைவிங் போன்றவற்றோடு அந்தமான் நிகோபார் தீவுகள் அடர்ந்த வனப்பகுதிகளையும் கொண்டுள்ளன. இயற்கை வளம் நிரம்பிய இந்த காடுகளில் பல அரியவகை பறவைகளையும், வேறெங்கும் பார்க்க முடியாத மலர்த்தாவரங்களையும் காணலாம். இதுபோன்ற சூழல் தேனிலவுப்பயணிகளுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கும் என்பது உறுதி.

அந்தமான் நிகோபார் தீவுகளின் சுற்றுலாத் தலங்கள்

படம் : Shimjithsr

லக்ஷதீப் தீவுகள்:

லக்ஷதீப் தீவுகள்:

அற்புதமான அழகுடைய கடற்கரைகள் நிறைந்திருக்கும் லக்ஷதீப் தீவுகள் தேனிலவு கொண்டாட மிகச்சிறந்த இடமாகும். உங்கள் காதல் துணையுடன் காலாற இங்கிருக்கும் கடற்கரைகளில் நடந்தபடி எந்த தொந்தரவுகளும் இல்லாமல் மனம் விட்டு பேசலாம்.

அகத்தி தீவு, கவரெட்டி மற்றும் மினிகாய் போன்றவை இங்கிருக்கும் முக்கியமான தீவுகளாகும். இங்கே பல தனியார் ரிசார்ட்டுகள் தேனிலவு வரும் ஜோடிகளுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கின்றன. கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து 250 கி.மீ தொலைவில்இத்தீவுகள் அமைந்திருக்கின்றன.

Thejas

 கோவா:

கோவா:

தனிமையையும், அமைதியையும் தாண்டி தங்கள் திருமண வாழ்க்கையை கொண்டாட்டத்துடன் துவங்க வேண்டும் என நினைக்கும் ஜோடிகளுக்கு கோவாவை விட சிறந்த இடம் இருக்கவே முடியாது. பழமையான கட்டிடங்கள், பார்ட்டி நடக்கும் கடற்கரைகள் என பல ரசனையான அனுபவங்களை நீங்கள் இந்த தேனிலவு பயணத்தில் பெற முடியும். அஞ்சுனா, வகேடோர், சபோரா போன்றவை கோவாவில் இருக்கும் முக்கிய கடற்கரைகள் ஆகும். இங்கு நடக்கும் இரவு பார்டிகளில் கலந்து கொண்டு ஆசைதீர கொண்டாடலாம்.

டல்ஹௌசி:

டல்ஹௌசி:

பழைய எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களில் இந்த இடத்தை அதிகம் பார்த்திருக்க முடியும். ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் அமைந்திருக்கும் டல்ஹௌசி கண்களுக்கு குளிர்ச்சியான இயற்கை காட்சிகள் நிறைந்திருக்கும் ஓரிடமாகும். ஆப்பிள் தோட்டங்கள், பசுமையான புல்வெளிகள், ட்ரெக்கிங் செல்ல தகுந்த மலைப்பாதைகள் என தனிமையை விரும்பும் ஜோடிகளுக்கு மிகச்சிறந்த இடம் இந்த டல்ஹௌசி.

Wittystef

டார்ஜிலிங்:

டார்ஜிலிங்:

மேற்கு வாங்க மாநிலத்தில் சிவாலிக் மலையின் மீது அமைந்திருக்கிறது இந்த அழகிய டார்ஜிலிங் நகரம். பனிப்படர்ந்த மலைக்குன்றுகள், பசுமை போர்வை போர்த்தியது போன்ற தேயிலைத்தோட்டங்கள், கொஞ்சமும் மாசுபடாத இயற்க்கை சூழல் என நல்லதொரு சுற்றுலாத்தலம் இந்த டார்ஜிலிங் ஆகும். உங்கள் மனைவியுடனோ, கணவருடனோ காதல் மொழி பேசி கொஞ்சி மகிழ சிறந்த இடம் டார்ஜிலிங் ஆகும்.

உதைப்பூர்

உதைப்பூர்

'இந்தியாவின் வெனிஸ்' என்ற புனைப்பெயருடன் விளிக்கப்படும் இந்த உதய்பூர் நகரம் பாலைவன மாநிலமான ராஜஸ்தானில் அமைந்திருக்கிறது.

உதைபுரில் இருக்கும் மிக மிக அழகான அதே சமயம் கொஞ்சம் காஸ்ட்லியான இடம் 'லேக் பேலஸ்' ஆகும். இதுபோன்ற பல இடங்கள் உதய்ப்பூரில் இருக்கின்றது. இங்கு செல்வது உங்கள் காதலை வெளிப்படுத்த சிறந்த தளமாக அமையும்.

Nagarjun Kandukuru

விசாகப்பட்டினம்

விசாகப்பட்டினம்

விசாகப்பட்டினம் நகரில் இருந்து 15 கி.மீ தொலைவில் பேரழகும், அமைதியும் நிறைந்து காட்சி தருகிறது யாராதா கடற்க்கரை. நகரத்தின் இரைச்சலில் இருந்து தப்பித்து அமைதியாக பொழுதை கழிக்க விரும்புகிறவர்கள் இங்கு தாரளமாக வரலாம். கடற்கரையை ஒட்டியே தென்னந்தொப்புகள் இருப்பது இவ்விடத்திற்கு மேலும் அழகூட்டுகிறது.

Adityamadhav83 -

 பிலிகிரி ரங்கணா மலைகள்

பிலிகிரி ரங்கணா மலைகள்

கர்நாடகாவில், மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஒரு அங்கமான பிலிகிரி ரங்கணா மலைகளும், மலையை ஒட்டிய ரிசார்ட்டுகளும் இரவில் கொஞ்சி மகிழ ஏற்றதாக இருக்கும். ஒருவேலை உங்களது மனைவி சாகச விரும்பியாக இருந்தால், இயற்கையை ரசிப்பவராக இருந்தால் பகல் நேரத்துள அப்படியே காவேரி, கபிலா ஆறுகளில் ஆற்றுப்படகு சவாரிக்கும், தூண்டில் மீன் பிடிக்கும் பொழுதுபோக்குக்கும் போய்ட்டு வரலாம்.

Prashanthns

அரு

அரு

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் அமைந்திருக்கும் அட்டகாசமான ஹனிமூன் தலமான அரு பகுதியில் ஏரிகள், சிகரங்கள், பனி படர்ந்த நதி, பள்ளத்தாக்குகள் என எங்கு திரும்பினாலும் கவிதை ஊற்றுப்பெற வைக்க பல காட்சிகள் காத்துக்கிடக்கும். அப்புறம் என்ன பாஸ், உங்க துணைவிக்கு ஒரு கவிதைய எடுத்து விட்டு காதல வெளிப்படுத்துங்க.

KennyOMG

சோப்தா

சோப்தா

உத்தரகாண்ட் மாநிலம், ருத்ரப்ரயாக் மாவட்டத்தில் உள்ளது சோப்தா. கடல் மட்டத்திலிருந்து சுமார் 2600 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மலைப் பிரதேசம் கண்ணைக் கவரும் அழகிய இயற்கைக் காட்சிகளைக் கொண்டுள்ளது. எந்நேரமும் சிலுசிலுவென வீசும் காற்று இருவரிடையே நெருக்கத்தை அதிகப்படுத்தும்.

Vvnataraj -

சைல்

சைல்

இமாச்சல பிரதேச மாநிலத்தின் சோலன் மாவட்டத்திலுள்ள சாத் டிபா மலையின் மீது கடல் மட்டத்திலிருந்து இரண்டாயிரம் மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது சைல் எனும் இந்த அழகிய மலைவாழிடம். பச்சை பள்ளதாக்கு, ஆப்பிள் தோட்டங்கள், கோல்ப் மைதானங்கள், பனி மலையில் குதிரை மேல் சவாரி செய்து கொண்டே மற்ற பனிமலைகளை கானும் வாய்ப்பு என சைல் சிலிர்க்க வைக்கிறது.

Nanda ramesh

குஃப்ரி

குஃப்ரி

சிம்லாவில் அமைந்துள்ள குஃப்ரி என்னும் சிறிய நகரம் இயற்கையின் மிக அழகு நிறைந்த பகுதியாகும். அமைதியை விரும்பும் புதுத் தம்பதியினர் அனைத்தையும் மறந்து ஒருவரையொருவர் உள்ளத்தையும், உடலையும் பரிமாற்றிக் கொள்ள ஏற்ற ரிசார்ட்டுகளுக்கு குஃப்ரி சூப்பர் சாய்ஸ். இங்கு நிலவும் பேரமைதியில் உரசும் காற்றின் ஊசை, காதில் காதல் சொல்லும்.

MikeLynch

 சோலன்

சோலன்

ஆண்டு முழுவதும் சோலனின் வானிலை நம்மை பரவசப்படுத்தும் வகையிலேயே இருக்கும். வருடத்தின் எந்த சாலத்தில் வேண்டுமானாலும் இங்கே நம்பிக்கையாக பயணிக்கலாம். அடர்ந்த பசுமைக் காடுகளும், தென்றல் காற்றும் மனதை சொக்க வைத்து விடும்.

Garconlevis

 மாத்தேரான்

மாத்தேரான்

மஹாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, புனே போன்ற பரபரப்பான நகரங்களுக்கு வெகு அருகில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமும், ரொமான்ட்டிக்கான இடமாகவும் உள்ளது மாத்தேரான். குளிர்பிரதேசமாக உள்ள இங்கு சுற்றிப்பார்ப்பதற்கு மட்டும் ஏதுவாக 30க்கும் மேற்பட்ட தலங்கள் உள்ளன. ஹனிமூனில் நேரம் இருப்பின் மாத்தேரானில் உள்ள ஒன் ட்ரீ ஹில், உள்ளிட்ட முக்கியமான இடங்களை சென்று ரசித்து வரலாம்.

Udaykumar PR

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more