» »இந்த மாதம் தேனிலவு செல்ல தகுந்த டாப் 5 ரொமான்டிக் பகுதிகள்

இந்த மாதம் தேனிலவு செல்ல தகுந்த டாப் 5 ரொமான்டிக் பகுதிகள்

Posted By: Udhaya

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பார்கள். அப்படி கடன் வாங்கி செய்யப்படும் திருமணம் மணமக்களின் அன்புக்கும் அவர்களின் உறவுக்கு உறுதி செய்யவேண்டும்.

அந்த வகையில் திருமணத்தைத் தொடர்ந்து தம்பதிகள் தனியாக மகிழ்ந்திருக்கும் தேனிலவு சுற்றுலா என்பது மிக எதார்த்தமாகிவிட்டது.

அப்படி இந்த மாதம் செல்லத்தகுந்த டாப் 5 தேனிலவுத் தளங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

 கோவா

கோவா


கோவாவில் இன்னும் அதிகம் மாசு படாத அழகான கடற்கரைகளில் ஒன்று தான் பல்லோலம் பீச். இது பிறை நிலா வடிவில் அமைந்திருக்கிறது. இங்கே வரும் சுற்றுலாப்பயணிகள் தங்குவதற்கு என்றே தாய்லாந்தில் இருப்பது போல் மரத்தால் செய்யப்படும் தற்காலிக குடியிருப்புகள் இருக்கின்றன.

நீங்கள் உங்கள் மனைவியுடன் ஹனிமூனுக்கு செல்ல தகுந்த இடமாக இது உள்ளது.

Vaibhav San

மூணாறு

மூணாறு

புகைப்பட கருவி வைத்திருபவர்களுக்கு மூணாறைவிட ஒரு சிறந்த இடம் வாய்க்காது. அதிகம் மெனக்கெடாமல், சகட்டு மேனிக்கு சுட்டுத் தள்ளினால், எப்படியும் பத்து படங்களாவது பிரமாதமாய் வந்து விடும். அந்தளவிற்கு ரம்மியமான இடம்.

உங்கள் மனைவியுடன் தனிமையை பகிர்ந்துகொள்வதற்கும், விதவிதமான அனுபவங்களை புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கும் ஏற்ற இடமாகும்.

Ashwin Kumar

 காஷ்மீர்

காஷ்மீர்

ஜம்மு காஷ்மீரில் இருக்கும் அற்புதமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றான குல்மார்க் என்ற இடம் குளிர் காலத்தில் சாகச விளையாட்டுகளுக்கும், கோடை காலத்தில் பசுமையான மலை வாசஸ்தலமாகவும் திகழ்கிறது.

உங்கள் தேனிலவு பயணம் எப்போது இருந்தாலும், காலநிலையை பொறுத்து இந்த இடம் உங்களை மகிழ்வூட்டும். வருடத்தின் அனைத்து நாட்களிலும் இங்கு செல்லமுடியும்.

Basharat Alam Shah

 உதைப்பூர்

உதைப்பூர்


'இந்தியாவின் வெனிஸ்' என்ற புனைப்பெயருடன் விளிக்கப்படும் இந்த உதய்பூர் நகரம் பாலைவன மாநிலமான ராஜஸ்தானில் அமைந்திருக்கிறது.

உதைபுரில் இருக்கும் மிக மிக அழகான அதே சமயம் கொஞ்சம் காஸ்ட்லியான இடம் 'லேக் பேலஸ்' ஆகும்.

இதுபோன்ற பல இடங்கள் உதய்ப்பூரில் இருக்கின்றது. இங்கு செல்வது உங்கள் காதலை வெளிப்படுத்த சிறந்த தளமாக அமையும்.

 விசாகப்பட்டினம்

விசாகப்பட்டினம்

விசாகப்பட்டினம் நகரில் இருந்து 15 கி.மீ தொலைவில் பேரழகும், அமைதியும் நிறைந்து காட்சி தருகிறது யாராதா கடற்க்கரை. நகரத்தின் இரைச்சலில் இருந்து தப்பித்து அமைதியாக பொழுதை கழிக்க விரும்புகிறவர்கள் இங்கு தாரளமாக வரலாம். கடற்கரையை ஒட்டியே தென்னந்தொப்புகள் இருப்பது இவ்விடத்திற்கு மேலும் அழகூட்டுகிறது.


Rajib Ghosh

Read more about: travel, hills, honeymoon